பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2016
00:00

கூகுள் அறிவித்த திட்டங்கள், இந்தியாவை இலக்காகக் கொண்டு இருந்தாலும், வளர்ந்து வரும் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடியவையாகவே உள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இவை உயர்த்தும். ஏற்கனவே, இங்கு மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்பதனால், மொத்த வளர்ச்சி விகிதம் உயர்ந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கூகுள் திட்டங்கள், நிச்சயம் இந்த வளர்ச்சியை இன்னும் உயரத்திற்குக் கொண்டு செல்லும்.
பேரா. டாக்டர் தி. இராசேந்திரன், மதுரை.

ஜிமெயில் முகவரியில் புள்ளி வைத்து மாற்றங்கள் ஏற்படுத்தித் தனித்தனி குழுக்களுக்கு அனுப்புவது மிகப் பெரிய பயனுள்ள வசதியாகும். இத்தனை மாற்றங்கள் இருந்தும், அனைத்து மெயில்களும் ஒரே இன் பாக்ஸில் கிடைப்பது இன்னும் சிறப்பாகும். இதனை எளிய முறையில் எங்களுக்குத் தந்த உங்கள் ஆசிரியர் இன்னும் சிறப்புக்குரியவர்.
ஆர். கே. உதயன், சென்னை.

வேர்ட் குறிப்பில், “அகராதியில் இல்லாத சொல்” என்ற தலைப்பில் தந்துள்ள விளக்கம், வேர்டில் உருவாக்கும் டாகுமெண்ட்களை இன்னும் எளிதாக உருவாக்கும் வழிகளைத் தந்துள்ளது. மிக்க நன்றி.
கா. ஜீவானந்தம், ஸ்ரீவில்லிபுத்தூர்

கூகுள் அறிவித்த You Tube Go மற்றும் Allo போன்றவை, பயனாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள செயலிகளாக அமைந்துள்ளன. Allo போன்றவை, கூகுள் Artificial Intelligence என்னும் பிரிவில் மேற்கொண்டு வரும் ஆய்வினால் பெறப்பட்டவையே. இந்தப் பிரிவில் பல ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கூகுள், இது போன்ற பல புதிய செயலிகளைத் தரும் என எதிர்பார்ப்போம்.
கே. திரவியம், திருநெல்வேலி.

பேஸ்புக் நிறுவன வளர்ச்சி, இன்றைய நிலை குறித்த தகவல்கள் அனைத்தும், நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். எந்த ஒரு முன்னேற்றத்திற்கும், கடின உழைப்பே முக்கியம் என்பதனை இந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
எஸ். நித்யானந்தன், திருச்சி.

இளம் வயதில், இந்த அளவிற்கு உயர்ந்த நிறுவனத்தை வளர்த்து, உலகின் முன்னணி செல்வந்தராக இருக்கும் மார்க் அவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும். விளம்பர வருமானத்தினை இலக்காகக் கொண்டாலும், அவை தரும் செல்வத்தினை மீண்டும் சமுதாய முன்னேற்றத்திற்கே அளிக்கும் மார்க் பாராட்டத்தக்கவர்.
எஸ். காதர் மொய்தீன், வேலூர்.

ஆண்ட்ராய்ட் போன்கள் இன்றைய அவசியத் தேவையாய் மாறிவிட்டன. எப்படியாவது பணம் சேர்த்து, ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிட அனைவரும் விரும்புகின்றனர். இந்நிலையில், அதில் இருந்தே ஆகவேண்டிய புரோகிராம்கள் குறித்து தகவல்கள் கொண்ட கட்டுரை எழுதியவருக்கு என் நன்றி. தொடர்ந்து ஆண்ட்ராய்ட் போன்களுக்கான டிப்ஸ்களையும் தரவும்.
ஆர். டி. புருஷோத்தமன், சேலம்.

தனி நபர் தகவல்களைப் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வது குறித்த வழக்கில், வாட்ஸ் அப் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அது வர்த்தகத் தர்மப்படி நம்பிக்கைத் துரோகம் ஆகும். மக்களைத் தன் சாப்ட்வேர் புரோகிராம் பயன்படுத்தும் பழக்க அடிமைகளாக மாற்றிய பின்னர், “இஷ்டம் இருந்தால் வைத்துக் கொள்; இல்லையேல் விட்டுவிடு” என்று கூறுவது இறுமாப்பாகும். வாட்ஸ் அப் நிறுவனம் தன் நிலையை மாற்றிக் கொள்வது நல்லது.
ஜி. மைக்கேல்ராஜ், விழுப்புரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X