18 மண்டலங்களில் பார்தி ஏர்டெல் 4ஜி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 அக்
2016
00:00

மொபைல் போன் சேவையில் முன்னணியில் இயங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், தன் 4ஜி சேவையை, இப்போது 18 மண்டலங்களில் விரிவு படுத்தியுள்ளது. இறுதியாக, இந்நிறுவனத்தின் 4ஜி சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் தொடங்கியது. சட்டிஸ்காரிலும் இது தற்போது இயங்குகிறது. பார்தி ஏர்டெல் வழங்கும் FD LTE சேவை, மொபைல் போன் சேவைப் பிரிவில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தால், முதல் முதலாக வழங்கப்படுவதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தூர், போபால், ரெய்பூர், ஜபல்பூர் மற்றும் குவாலியர் நகரங்களில் இந்த சேவை கிடைக்கிறது.
4ஜி சேவை, 3ஜி கட்டணத்தில் வழங்கப்படுவது இதன் கூடுதல் சிறப்பு. U-SIM அப்கிரேட் செய்பவர்களுக்கு, 4ஜி சேவையில், 2 ஜி.பி. டேட்டா பயன்பாடு இலவசமாக வழங்கப்படுகிறது.
இவை அனைத்தும் சேர்ந்து, இப்போது இந்தியாவில், ஏர்டெல் 4ஜி சேவை, 18 மண்டலங்களில் கிடைக்கிறது. ஏர்டெல், முதன் முதலாக, 2012 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் தன் 4ஜி சேவையைத் தொடங்கியது. முதன் முதலில் 4ஜி சேவையை இந்தியாவில் வழங்கியதும் ஏர்டெல் நிறுவனமே.
புதிய 4ஜி ஸ்மார்ட் போன் வாங்குபவர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையில், 10 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குகிறது. இதற்கான கட்டணம் ரூ.249 மட்டுமே. மேலும், தொடர்ந்து ரூ.249 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, உடனடியாக 1 ஜி.பி. டேட்டா இலவசமாகக் கூடுதலாகத் தரப்படுகிறது.
பயன்படுத்திய பின் கட்டணம் செலுத்தும் திட்டத்தில், ஏர்டெல் கட்டற்ற பயன்பாடு திட்டம் ஒன்றைத் தருகிறது. ரூ.1,199 கட்டணத்தில், 4ஜி டேட்டா, அளவற்ற அழைப்புகள், எஸ்.டி.டி. அழைப்புகள், ரோமிங் அழைப்புகளை மேற்கொள்ளலாம். முன்பணம் செலுத்தி பயன்படுத்தும் திட்டத்தில், ரூ.1,498 கட்டணத்தில், 4ஜி சேவையில், 6 ஜி.பி. டேட்டா இலவசமாகத் தரப்படுகிறது. அடுத்த 12 மாதங்களுக்கு, மாதம் ரூ.54 செலுத்தி, 1 ஜி.பி. 4ஜி டேட்டா பெறலாம். 4ஜி சேவையில், மாதத் திட்டத்தின் கீழ் ரூ.450 தொடங்கி, பல திட்டங்களை ஏர்டெல் தருகிறது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X