லெனோவா ஏ 2010
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 அக்
2016
00:00

மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை எதிர்பார்ப்பவர்களுக்கென்றே, லெனோவா நிறுவனம் சில மாடல்களை வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சென்ற மாதம் வெளியான லெனோவா ஏ 2010 மாடல், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும், அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,800.
இந்த மாடல் ஸ்மார்ட் போனில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி வசதிகள் உள்ளன. ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பரிமாணம் 131.5 x 66.5 x 9.9 மிமீ. எடை 137 கிராம். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 480 x 854 பிக்ஸெல் அடர்த்தியுடன், 4.5 அங்குல அளவில் உள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். இதன் சிப் செட் Mediatek MT6735M. சி.பி.யு. Quad-core 1.0 GHz Cortex-A53. இதனுடன் Mali-T720MP2 ஜி.பி.யு. இணைந்து செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதன் கேமரா 5 எம்.பி. திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைத்து கிடைக்கிறது. முன்புறக் கேமரா 2 எம்.பி. திறனுடன் உள்ளது. எம்.பி. 3, எம்.பி. 4 பிளேயர்கள், லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு வை பி தொழில் நுட்பம் இயங்குகிறது. ஹாட் ஸ்பாட் வசதியும் கிடைக்கிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், எச்.டி.எம்.எல். பிரவுசர் ஆகிய வசதிகள் உள்ளன. அக்ஸிலரோமீட்டர் சென்சார் தரப்பட்டுள்ளது. போட்டோ, விடியோ எடிட்டர்களும் டாகுமெண்ட் வியூவரும் செயல்படுகின்றன. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி. கருப்பு மற்றும் வெண்மை நிறங்களில் இந்த மாடல் போன் கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X