கேண்டி க்ரஷ் சாகா - லெவல் 2000
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 அக்
2016
00:00

கேண்டி க்ரஷ் சாகா விளையாட்டின் லெவல் 2000 ஐ, அண்மையில், இதனைத் தயாரித்து வழங்கும் 'கிங்' நிறுவனம் வெளியிட்டது. விண்டோஸ் 10 இயக்கத்தில் விளையாடும் வகையில் இது வெளியிடப்பட்டது. செப்டம்பர் 29ல் வெளியிடப்பட்ட இந்த நிலையை, ஒரு வாரம் வரை நேரடியாக விளையாடும் வகையில் வழங்கப்பட்டது. அதாவது, 1999 ஆவது நிலையை அடையாமலேயே, ஆர்வலர்கள், 2000 ஆவது நிலையை விளையாடலாம். தற்போது வழக்கமான விளையாட்டுடன் இது கிடைக்கிறது. கேம் ஒன்றில், அதன் நிலை 2000 வரை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது அரிதான ஓர் இலக்குதான்.
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும், சில காலமாவது கேண்டி க்ரஷ் சாகா விளையாட்டினை விளையாடியிருப்பார்கள். பலர் இன்னும் தொடர்ந்து விளையாடி, உச்சபட்ச நிலையை அடைய வெறியாகத் தொடர்கின்றனர். அதனால் தான், மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 இயக்க முறைமையில், இந்த விளையாட்டினை இணைத்தே வழங்கியது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம், கூகுள் ஆண்ட்ராய்ட், அமேஸான் மற்றும் விண்டோஸ் சாதனங்களில் விளையாடும் வகையிலும் இது வெளியாகி, கோடிக்கணக்கான பயனர்களைப் பெற்றுள்ளது. 2000 நிலை வெளியாகும் போது 'இது ஒரு லட்சம் கோடி முறை விளையாடப்பட்டது என்ற நிலையை அடைந்தது' என்று கிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த 2000 ஆவது நிலையில், விளையாடுபவர்கள், கேண்டி க்ரஷ் சாகா விளையாட்டில் வரும் கதா பாத்திரங்களான 'டிபி' மற்றும் 'யெட்டி' (Tiffi மற்றும் Yeti) யைச் சந்திப்பார்கள். அவர்கள் பப்பிள் கம் கடைத்தெருவில் ஒரு ஜோஸ்யக்காரணைச் சந்திக்க செல்வார்கள். அவரிடம் கேண்டி ராஜ்ஜியத்தின் எதிர்காலம் குறித்து கேட்டு வர செல்வார்கள். விளையாடுபவர்கள், அப்போது இனிப்பு மிட்டாய்களையும் வண்ண குண்டுகளையும் சேகரிக்க வேண்டும். வெற்றிகரமாகச் சேர்த்தால், அவை வெடித்து விளையாட்டு பலகையில் '2K' எனப் பெரிதாகக் காட்டப்படும். இவ்வாறு வெற்றி பெறுபவர்களுக்கு, மேலும் இரண்டு வண்ண குண்டுகள் சேர்க்கப்படும்.
இதன் புதிய நிலையுடன் கூடிய விளையாட்டினைத் தரவிறக்கம் செய்திட விரும்புபவர்கள் https://www.microsoft.com/en-us/store/p/candy-crush-saga/9nblggh18846 என்ற மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
“இந்த கேம் 2000 நிலையை அடையும் அளவிற்கு உயர்ந்தது, இதனை வடிவமைத்து வரும் எங்களுக்கு ஆத்ம திருப்தியைத் தருகிறது” என்று கிங் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் செபாஸ்டியன் கூறியுள்ளார். “வெளியானது முதல், உலகளாவிய அளவில் பலத்த வரவேற்பினை இந்த கேம் பெற்றுள்ளது. தரவிறக்கம் செய்யப்பட்ட புரோகிராம்களில் உயர்ந்த நிலையை இந்த கேம் கொண்டுள்ளது. எங்கள் வடிவமைப்பாளர் குழு, கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இதனைப் பல வேடிக்கை நிலைகளுடன் மேம்படுத்தியுள்ளது” என்றும் கூறியுள்ளார். தற்போது, இந்த விளையாட்டு
* 2000 நிலைகளைக் கொண்டுள்ளது.
* ஏப்ரல் 2012ல் அறிமுகமான இந்த கேம், ஒரு கோடி லட்சம் முறை விளையாடப்பட்டது என்ற நிலையை அண்மையில் அடைந்துள்ளது. அதாவது, உலகில் உள்ள ஒவ்வொருவரும், 140 முறை இந்த விளையாட்டினை விளையாடியுள்ளனர் என்பதற்கு இணையானது இந்த புள்ளி விபரம்.
* ஞாயிற்றுக் கிழமைகளில் தான் இந்த கேம் அதிகம் விளையாடப்படுகிறது.
* உலகின் மிக உயரமான கட்டடமான 'பர்ஜ் கலிபா' வின் உயரத்தைப் (830 மீட்டர்) போல 1,40,000 மடங்கு அதிகமான தூரம் இந்த கேமை விளையாடும்போது, ஸ்மார்ட் போனில் ஸ்வைப் செய்திடும் மொத்த தூரம் ஆகும்.
* ஒவ்வொரு ஆண்டும் இந்த கேமை விளையாடுபவர்கள், போனில் ஸ்வைப் செய்திடும் தூரம் 4,11,97,500 கிலோ மீட்டர். இது பூமியிலிருந்து நிலவுக்குச் சென்று மீண்டும் திரும்பும் தூரத்தைப் போல 54 மடங்காகும்.
* ஒவ்வொரு மாதமும், 1800 கோடி விளையாட்டு வட்டம் விளையாடுபவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
* அண்டார்ட்டிகா உட்பட அனைத்து கண்டங்களில் உள்ள நாடுகளிலும் இந்த கேம் விளையாடப்படுகிறது.
* இந்த 2000 லெவல் கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள விளையாடுபவர்கள் விரும்பினால், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைத்தளங்களில், #CandyCrush2000 என்ற முகவரியைப் பயன்படுதி இணையலாம்.
மேலதிகத் தகவல்களுக்கு http://www.candycrushsaga.com என்ற தளம் செல்லவும்.
கேண்டி க்ரஷ் சாகா விளையாட்டினை வடிவமைத்த கிங் நிறுவனம் மொபைல் உலகில் ஒரு சிறந்த பொழுது போக்கு நிறுவனமாகப் பன்னாட்டளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில், 50 கோடி பேர் இந்நிறுவனத்தின் விளையாட்டுகளை விரும்பி விளையாடுபவர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கேண்டி க்ரஷ் சாகா போல, 200க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை, இந்நிறுவனம் வடிவமைத்து வழங்கியுள்ளது. பேஸ்புக், ஆப்பிள் ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர், விண்டோஸ் ஸ்டோர் மற்றும் அமேஸான் ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து இதன் விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஸ்டாக் ஹோம், மால்மோ, லண்டன், பார்சிலோனா, பெர்லின், சிங்கப்பூர் மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்களில், இந்நிறுவனத்தின் விளையாட்டுகளை வடிவமைக்கும் மையங்கள் இயங்கி வருகின்றன. இதன் அலுவலகங்கள் ஆறு நாடுகளில் உள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X