இந்திய இணையத்தில் 7% பள்ளி மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 அக்
2016
00:00

ஐக்கிய நாடுகள் சபையின், பன்னாட்டளவிலான குழந்தைகள் பாதுகாப்பு நிதியம், அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில், 7% பேர், பள்ளி செல்லும் மாணவர்கள் எனத் தெரிவித்துள்ளது. “இணையத்தில் இந்தியச் சிறுவர்களுக்கான பாதுகாப்பு” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இந்தப் பிரச்னை சார்ந்த சட்டங்கள், சிறுவர்களைப் பாதுகாக்கப் போதுமானதாக இல்லை என்றும், அவற்றை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, மொபைல் போன் மற்றும் இணையப் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து, தற்போது 40 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வரும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இவர்களில், 7% பேர் பள்ளி மாணவர்களாவர். இதனால், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் தளங்களில் ஒன்றாக இணையமும் மாறி உள்ளது. இணையம் வழி தகவல் தொடர்பு தொழில் நுட்பம் வேகமாக இந்தியாவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இதனை நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தால் தான், அது சிறுவர்களின் கல்வி கற்றலுக்கு உதவியாக அமையும். அத்துடன், சிறுவர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்தும். சிறுவர்களை மோசமாக நடத்துவதும், அவர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவதும், இந்தியா மட்டுமின்றி, பன்னாட்டளவில் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நமக்கு இன்னும் பல சட்ட விதிமுறைகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். அத்துடன், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கும் பங்கிருப்பதனை உணர்ந்து, இதற்குத் தங்களால் ஆன பங்கினை அளிக்க வேண்டும். இணையம் வழி பயமுறுத்தல், தீயவழிப்படுத்தல், வெப் கேமரா மூலம் பாலியல் தொந்தரவு அளித்தல், பாலியல் படங்களைப் பதித்தல் ஆகியவை இணையத்தில் உலா வரும் பலவகையான சிறுவர் பாலியல் குற்றங்களின் பல வடிவங்களாகும். இவை அனைத்தையும் உடனடியாக நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரவேண்டிய கட்டாயத் தேவையில் நாம் இருக்கிறோம் என ஐ.நா.வின் சிறுவருக்கான பிரிவு, இந்தியாவை எச்சரித்துள்ளது.
சீனா, இணையத்திற்கு அடிமையாகிப் போன சிறுவர்களை மீட்பதற்காக, அண்மையில் அரசாணைகளை (Cyberspace Administration of China) வெளியிட்டுள்ளது. இவை இன்னும் அமலுக்கு வரவில்லை. பொதுமக்களின் கருத்தறிய வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் கருத்து கேட்டு அறிந்த பின்னர், அமலுக்கு வரும்.
நடுநிசிக்குப் பின்னர், கம்ப்யூட்டரில் விளையாடக் கூடாது. இதனால், வரும் காலங்களில், இணையத்தில் விளையாட விளையாட்டுகளை வடிவமைப்பவர்கள், அவற்றில் சிறுவர்கள் இரவு நேரங்களில் விளையாடுவதைத் தடுக்கும் வகையில் அமைக்க வேண்டியதிருக்கும். பள்ளி
கள், இணையத்திற்கு அடிமையாகிப் போன சிறுவர்களை மீட்டெடுக்கும் பணிகளில், அதற்கான மையங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். 18 வயதிற்கும் குறைவானவர்கள், இணையத்தில் விளையாட்டுகளை விளையாட, தங்களைத் தங்கள் அடையாள அட்டை கொண்டு பதிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட விளையாட்டினை வழங்கும் நிறுவனத்தின் சர்வர்களில் இந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு ஆய்விற்கு தரப்பட வேண்டும்.
சிறுவர்களும் இளைஞர்களும், மிக அதிக நேரத்தினை இணையத்தில் செலவழித்து வருவதனை உணர்ந்த சீன அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. சென்ற மாதம், சீனாவில் 16 வயது பெண், இணையத்திற்கு அடிமையான சிறுவர்களை மீட்கும் மையத்திற்கு அனுப்பப்பட்டாள், அதனால், ஆத்திரமடைந்து, தன் அம்மாவைக் கொலை செய்துவிட்டாள். காரணம் கேட்டதற்கு, மீட்பு மையத்தில் தான் கொடுமையான அனுபவத்தைப் பெற்றதாகக் கூறியிருக்கிறாள்.
சீனா இணைய வலைத் தகவல் மையம் வெளியிட்ட (China Internet Network Information Centre) அறிக்கையின்படி, சீனாவில், இணையம் பயன்படுத்துபவர்களில் 23% பேர், 19 வயதிற்கும் குறைவானவர்களாகவே உள்ளனர். மொத்த இணையப் பயனாளர்கள் 75 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சிலர் இணைய மீட்பு மையங்கள், சிறுவர்களுக்கு மிகவும் மோசமான அனுபவத்தினைக் கொடுப்பதாகக் கூறுகின்றனர். இப்போது, ஸ்மார்ட் போன்களே, இணையம் காணப் பயன்படுத்தப்படுவதால், ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பது, அரசின் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் எனப் பலர் கூறியுள்ளனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X