வயர்லெஸ் மவுஸ் சுட்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 அக்
2016
00:00

மவுஸ் சுட்டிகள் தற்போது பெரும்பாலும், வயர் இணைப்பின்றி செயல்படுபவையாகவே கிடைக்கின்றன. இதனால், நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் இடத்தினை முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. அதிக இடம் தேவைப்படாமல் உள்ளது. இந்த வகை மவுஸ் சுட்டிகள் மூன்று வகை செயல்பாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்பது பலர் அறியாத விஷயமாகும். அதனை இங்கு காணலாம்.
மவுஸ் பயன்படுத்துவதில் பல ஆண்டுகளாக, சிரமம் தரும் ஒரு செயல்பாடு இருந்து வந்தது. அதனை, சி.பி.யு. டவர் பாக்ஸின் பின்புறம் இணைத்துச் செயல்படுத்த வேண்டியதிருந்தது. அதற்கான போர்ட், குறிக்கப்பட்டு கிடைத்தது. அதன் பின், யு.எஸ்.பி. போர்ட் பழக்கத்தில் வந்த பின்னர், மவுஸ் வயர் முனையில், யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தும் வகையில் இணைப்பி தரப்பட்டது. இதற்கெனவே, சி.பி.யு. டவர் பாக்ஸின் முன்புறமாக யு.எஸ்.பி. போர்ட்கள் சில தரப்பட்டன.
அடுத்த நிலையாக, வயர் இணைப்பு எதுவுமின்றி செயல்படும் மவுஸ் புழக்கத்திற்கு வந்தது. இத்தகைய மவுஸ் சுட்டிகள், ஒரே மாதிரியாக, ஒரே செயல்பாட்டினைக் கொண்டதாக இருந்தாலும், அவற்றில் மூன்று வகை உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒரு வகையில், நம் கம்ப்யூட்டருடன் தகவல் பரிமாறி உறவாடுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

புளுடூத் மவுஸ்







முதலாவதாக, பெரும்பாலான கம்ப்யூட்டர்களுடன் இணைத்துப் பயன்படுத்தப்படும் புளுடூத் வழி செயல்படும் மவுஸ். இது புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் கம்ப்யூட்டர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும். இப்போது வருகின்ற லேப்டாப் கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் இந்த தொழில் நுட்பம் இயங்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில், புளுடூத் தொழில் நுட்பத்தினை இயக்க வேண்டும். பின்னர், மவுஸின் புளுடூத் இயக்கமும் இயக்கப்பட்டு, இரண்டும் இணையாக்கப்பட (“pairing”) வேண்டும். கம்ப்யூட்டரில், அருகில் உள்ள புளுடூத் இயக்க சாதனங்களைத் தேடி அறிந்து கொள் என்று கட்டளை கொடுத்தால், அது தானாகவே, அந்த இயக்கம் கொண்டுள்ள மவுஸை அறிந்து இணையாக்கிக் கொள்ளும். புளுடூத் மவுஸின் செயல்பாட்டிற்கான மின் சக்தி, பேட்டரிகள் மூலம் தரப்படுகிறது. சில மவுஸ்களில், ரீ சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலான பேட்டரிகள் இணைக்கப்பட்டு கிடைக்கின்றன.

வயர்லெஸ் மவுஸ்







வயர்லெஸ் மவுஸ், பெர்சனல் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள ரிசீவருக்கு சிக்னல்களை அனுப்பி செயல்படும். இந்த ரிசீவரை, கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துச் செயல்படுத்தலாம். ரிசீவரை கம்ப்யூட்டருடன் இணைத்தால் தான், அது மவுஸ் தரும் சிக்னல்களை கம்ப்யூட்டருக்கு அனுப்ப முடியும். பெரும்பாலான மவுஸ்களில், இந்த ரிசீவர்கள், மவுஸின் பின்புறம் செருகப்பட்டு இணைக்கப்படும் வகையில் கிடைக்கும். மற்றவற்றில் தனியாகக் கிடைக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வயர்லெஸ் கீ போர்ட் மற்றும் மவுஸ் ஆகியவற்றுக்கு ஒரே ரிசீவரை வடிவமைத்து வழங்குகிறது. இத்தகைய மவுஸ்களும் பேட்டரி சக்தியால் இயங்குகின்றன. சிலவற்றில் ரீ சார்ஜ் செய்திடக் கூடிய பேட்டரிகள் இணைந்து கிடைக்கின்றன. மவுஸின் கர்சர், கம்ப்யூட்டரின் திரையில் உங்கள் கட்டளைப்படி இல்லாமல், தன் இஷ்டத்திற்குச் செல்கிறது, தவ்வுகிறது என்றால், மவுஸின் பேட்டரி தன் திறனை பெரும்பாலும் இழந்து விட்டது என்று பொருள். உடனே, பேட்டரிகளை ரீ சார்ஜ் செய்திட வேண்டும்; அல்லது, பேட்டரிகளை மாற்ற வேண்டும்.

வை பி மவுஸ்







இது அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவது இல்லை. இந்த மவுஸ் நேரடியாக உங்கள் ரெளட்டருடன் இணைக்கப்படுகிறது. இதற்கு தனியே அடாப்டர் தேவை இல்லை. ஏனென்றால், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர், உங்கள் வீட்டில் கிடைக்கும் வை பி சிக்னல் வழியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறது. இதனைப் பயன்படுத்த, உங்கள் நெட்வொர்க்கில், உங்களுடைய வை பி பாஸ்வேர்ட் மூலம் லாக் இன் செய்திட வேண்டும். மேலே சொல்லப்பட்ட இரு மவுஸ் சுட்டிகளையும், வயர்லெஸ் சிக்னல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம். ஆனால், வை பி மவுஸ் பயன்படுத்த வயர்லெஸ் சிக்னல் கட்டாயமாகத் தேவைப்படும். அவை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டருடன் நேரடியாகத் தொடர்பு கொள்கின்றன. எனவே தான், பலரும் இதனைப் பயன்படுத்த விரும்புவதில்லை. இந்த வகை மவுஸ் சுட்டியும் பேட்டரிகள் துணையுடன் இயங்குகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X