இன்றைய இணைய சேவை திட்டங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 அக்
2016
00:00

ரிலையன்ஸ் ஜியோ அதிரடியாகக் கொண்டு வந்த 4ஜி டேட்டா சேவை திட்டங்கள், இணைய சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஆட வைத்துவிட்டது என்றால் அது மிகையாகாது. இலவச அழைப்புகள், மிகக் குறைந்த கட்டணத்தில் 4ஜி சேவை என ரிலையன்ஸ் இதுவரை இல்லாத வகையில் இந்தியப் பயனாளர்களுக்கு சேவையை வழங்கி வருகிறது. இதனால், மற்ற மொபைல் இணைய சேவை நிறுவனங்களும், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களும், இந்த போட்டியில் தாக்குப் பிடிக்க, தங்களின் சேவைத் திட்டங்களில், அது 3ஜி அல்லது 4ஜியாக இருந்தாலும், மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் பயனடைந்திருப்பது அனைத்து மொபைல் பயனாளர்கள் என்றாலும், பெரும் அளவில் இதனை வரவேற்று, பயன்படுத்தி வருவது இளைஞர்களும் மாணவர்களும் தான். நிறுவனங்களுக்கிடையேயான இந்தப் போட்டியில், இணைய சேவைக் கட்டணம் மற்றும் வேகம், டேட்டா அளவில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களை இங்கு காணலாம்.

ரிலையன்ஸ் ஜியோ
இன்றைய நிலையில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் கிகா பைபர் (GigaFiber) பிராட்பேண்ட் சேவை தான், மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் இணைய சேவை தரும் நிறுவனங்களாக இடம் பெற்றுள்ளனர். 4ஜி இணைய சேவையுடன் இணைந்த குறைந்த கட்டணம் கொண்ட பல திட்டங்களை தந்து வருகின்றனர். அறிமுக சலுகையாக, மூன்று மாதங்களுக்கு தினந்தோறும் 4 ஜி.பி. டேட்டா என்ற அளவுடன் இணைப்பு இயங்குகிறது. இதனுடைய, பிராட்பேண்ட் சேவை தரும் கிகா பைபர் நிறுவனம் பல திட்டங்களைத் தருகிறது. முதல் நிலையில், ஒரே நாளில் எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள ரூ. 400 கட்டணத்தில் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக பல திட்டங்கள் இதனை அடுத்து உள்ளன. உச்சகட்டமாக, ஒரு மாத காலத்திற்கு, நாளொன்றுக்கு 3.5 ஜி.பி. டேட்டா திட்டத்தினை ரூ. 5,000 என்ற கட்டணத்தில் தருகிறது.

பி.எஸ்.என்.எல்.
பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது. அண்மையில் இந்நிறுவனம் ரூ.249 கட்டணத்தில், அளவற்ற பிராட்பேண்ட் இன்டர்நெட் திட்டம் ஒன்றைத் தந்தது. இதில் மாதம் ஒன்றுக்கு 300 ஜி.பி. டேட்டா வரை பயன்படுத்தலாம்.

ஏர்டெல்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடியை எதிர்கொள்ள, இந்தியாவில் இயங்கும் இன்னொரு பெரிய நிறுவனமான பார்தி ஏர்டெல் ஓர் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில் ரூ.1,498 செலுத்தி ரீ சார்ஜ் செய்து கொண்டால், 4ஜி மற்றும் 3ஜி சேவை கிடைக்கும். மொபைல் இணைய சேவையில் 1 ஜி.பி. டேட்டா கிடைக்கும். திட்டத்தின் காலம் 28 நாட்கள்.

வோடபோன் ப்ளெக்ஸ்
ரிலையன்ஸ் ஜியோ, பி.எஸ்.என்.எல். மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்த ஆர்வமூட்டும் இணைய சேவை திட்டங்களுக்கு இணையாக வோடபோன் நிறுவனமும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. இதில் “ப்ளெக்ஸ்” ('Flex') என்ற பெயரில் ஓர் அலகினைக் கொண்டு வந்துள்ளது. ஒரு ப்ளெக்ஸ் என்பது 1 எம்.பி. டேட்டாவும், பயனாளர் பெறும் ஒரு நிமிட அழைப்பும் ஆகும். மிகக் குறைந்த கட்டணமாக, ரூ.119க்கு ரீ சார்ஜ் செய்தால், அந்த பயனாளருக்கு 325 ப்ளெக்ஸ் தரப்படுகிறது. பயனாளர் டேட்டா அல்லது வாய்ஸ் அழைப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் அதிக பட்ச ரீ சார்ஜ் ரூ. 399. இதற்கு, 1750 ப்ளெக்ஸ், 28 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தரப்படுகிறது.

டாட்டா டொகொமோ
இந்நிறுவனம் பல மொபைல் இணைய திட்டங்களைத் தருகிறது. மிகக் குறைந்த அளவில், 3ஜி திட்டம் ரூ. 8 செலுத்திப் பெறும் வகையில் உள்ளது. 35 எம்.பி. 3ஜி டேட்டாவில் தொடங்கி, ரூ.1,299 வரை பல திட்டங்கள் உள்ளன. ரூ.1,299 செலுத்தினால், அளவற்ற 3ஜி டேட்டா, 28 நாட்களுக்குக் கிடைக்கும்.

ஏர்செல்
ரூ. 8 கட்டணம் செலுத்தினால், ஏர்செல் நிறுவனம், 40 எம்.பி. 3ஜி டேட்டாவினை ஒரு நாள் கால அவகாசத்தில் பயன்படுத்தும் வகையில் தருகிறது. உயர்ந்த நிலையில், ரூ. 1697 செலுத்தினால், 20 ஜி.பி. டேட்டாவினை 28 நாட்களில் பயன்படுத்தத் தருகிறது. இந்நிறுவனம் தரும் திட்டங்களில் சிறந்தது அதன் 3ஜி திட்டமாகும். இதில் ரூ. 175 செலுத்தினால், 28 நாட்களில் 3ஜி டேட்டா 1 ஜி.பி. வரை பயன்படுத்தலாம்.

ஐடியா
15 நாட்களுக்கு 1 ஜி.பி. டேட்டா தரும் 4ஜி இணைய சேவையினை ரூ. 150க்கு ஐடியா தருகிறது. ரூ. 299 செலுத்தினால், 28 நாட்களில் பயன்படுத்த, 1.25 ஜி.பி. டேட்டா 3ஜி சேவையில் தருகிறது. கூடுதலான காலத்திட்டமாக, 4 ஜி.பி. 3ஜி இணைய சேவையில் 4 ஜி.பி. டேட்டா அளவில் 3 மாதங்களுக்கு ரூ. 952 செலுத்திப் பெறும் திட்டம் தருகிறது ஐடியா நிறுவனம்.

டாட்டா போட்டான்
டாட்டா போட்டான் வாடிக்கையாளர்களுக்கு, 45 நாட்கள், 3.5 ஜி.பி. டேட்டா பயன்படுத்தும் வகையில், ரூ. 655க்கு ஒரு திட்டம் வழங்கப்படுகிறது. கூடுதல் காலத்திற்குத் தேவைப்பட்டால், ஓராண்டு கால அளவில், மொத்தம் 30 ஜி.பி. டேட்டா பயன்படுத்தும் வகையில் ரூ. 4,999க்கு திட்டம் ஒன்று வழங்கப்படுகிறது. மாதத் திட்டம் ரூ. 455 செலுத்திப் பெற்றால், 2.5 ஜி.பி. டேட்டா அனுமதிக்கப்படுகிறது.

எம்.டி.எஸ்.
எம் பிளேஸ் என்னும் எம்.டி.எஸ். நிறுவனத் திட்டத்தில், ரூ. 101 செலுத்தி, 28 நாட்களுக்கு 200 எம்.பி. டேட்டா வரை பயன்படுத்தலாம். ரூ.1,599 செலுத்தினால், 28 நாட்களுக்கு 28 ஜி.பி. டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகம் இணையம் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த திட்டம் பயன் தருவதாக உள்ளதாக, இதன் வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏ.சி.டி. பைபர் நெட்
வயர் வழி இணைப்பில் இணைய சேவை தரும், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், ஏ.சி.டி. நிறுவனம் அண்மையில், 100 Mbps வேகத்தில் இணைய இணைப்பு தரும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான மாதக் கட்டணம் ரூ. 1,999. மேலே தரப்பட்டுள்ள நிறுவனங்களின் திட்டங்கள் எல்லாம், இந்த கட்டுரை எழுதும்போது அமலில் இருந்தவை. தற்போது இதில் குறிப்பிட்டவற்றுள் சிறிதளவில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், தற்போது ரிலையன்ஸ் ஜியோவினால் ஏற்பட்டுள்ள போட்டியில், வாடிக்கையாளர்களுக்கு அதிக பயனுள்ள இணைய சேவை திட்டங்கள் கிடைத்துள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X