இந்தியாவில் மிக வேகமாக வளரும் பேஸ்புக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 அக்
2016
00:00

பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தியாவில் சுமுகமான உறவு இல்லை என்றாலும், இந்திய மக்கள் அனைவரையும் இணையத்துடன் இணைக்கும் முயற்சியில் பேஸ்புக் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், மிக அதிக வேகமாக பேஸ்புக் வளரும் நாடுகளின் வரிசையில், இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் அனைத்து நாடுகளின் சராசரி வளர்ச்சியைக் காட்டிலும், இந்தியாவில் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சி அதிகமாக உள்ளதாகத் தற்போது எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. தினந்தோறும் உலகளாவிய அளவில் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்துபவரின் வளர்ச்சி 17%. இந்தியாவில் இது 22%.
இந்தியாவில் தொடர்ந்து இந்த தளத்தினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 15.5 கோடி. இவர்களில், 7.7 கோடி பேர் தினந்தோறும் இதனைப் பயன்படுத்துகின்றனர். 14.7 கோடி பேர் பேஸ்புக் தளத்தினை மாதந்தோறும் தங்கள் மொபைல் போன்கள் வழி பயன்படுத்துகின்றனர். 7.3 கோடி பேர் தினந்தோறும் மொபைல் போன் வழியாக பேஸ்புக்கில் தகவல்களைப் பதிகின்றனர்.
இது குறித்து பேஸ்புக் நிறுவன நிர்வாகி கூறுகையில், அடுத்து இணையத்தில் இணைய இருக்கும் நூறு கோடி பேரில் இந்தியா பெரும் பங்கினைக் கொண்டிருக்கும் என்றார். இவர்களை முன் நோக்கியே பேஸ்புக்கின் முயற்சிகள் இருக்கும்.
தகவல் தொடர்பு தொழில் நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொள்ளும் அளவிற்கு இடம் உள்ளதனை உணர்ந்துள்ளனர். இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை இங்கு மிக வேகமாக வளர்ந்து வந்தாலும், இன்னும் பெரும்பாலான மக்கள் இணையம் பக்கம் வராமல் தான் உள்ளனர். இந்திய ஜனத்தொகையில், மூன்றில் இரண்டு பங்கினர், இணையத்தைக் கண்டுள்ளார்களே என்பதே சந்தேகம் என அந்நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நகரங்களில், இணையப் பயன்பாடு வளர்ச்சி தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், மற்ற சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் இது அந்த அளவில் இல்லை. பேஸ்புக் இந்த இடங்களில் வாழும் மக்களை இலக்காகக் கொண்டே தன் எதிர்காலத் திட்டங்களை அமைத்து வருகிறது. இங்கு ஸ்மார்ட் போன்கள் இல்லாமல், சாதாரண வசதிகள் கொண்ட மொபைல் போன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அம்சமாகும். இந்தியாவில் இணையப் பயன்பாடு மற்ற நாடுகளிலிருந்து பல வகைகளில் வேறுபாட்டுடன் உள்ளது. நெட்வொர்க், இணையத்தில் பயன்படுத்தப்படும் மொழி, அதில் பதியப்படும் சிதறலான விஷயங்கள் என்பவை இதில் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகளாகும். இதனால், பேஸ்புக் தன் முயற்சிகளை கிராம மக்களிடமிருந்து தொடங்கியுள்ளது. தன் செயலிகள் அனைத்தையும், மிகக் குறைவான வேகத்தில் செயல்படும் நெட்வொர்க் இணைப்புகளும் எளிதாகப் பெறும் வகையில் குறைந்த அளவில் வடிவமைத்து தருகிறது. இந்த வகையில் 'பேஸ்புக் லைட்' (Facebook Lite) மற்றும் 'மெசஞ்சர் லைட்' (Messenger Lite) என தன் முக்கிய செயலிகளின் அளவு குறைந்த வடிவங்களைத் தயார் செய்து வழங்கியுள்ளது. நெட்வொர்க் செயல்படும் இடங்கள் அனைத்திலும், இந்த குறைந்த வடிவ செயலிகள் மிகச் சிறப்பாக இயங்குகின்றன. இதனால், மக்கள் பேஸ்புக் தளத்தினை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன், மாநில மொழிகளில், பேஸ்புக்கின் பயன்பாட்டினைத் தருவதிலும், பேஸ்புக் முயற்சிக்கிறது. ஏனென்றால், இந்தியர்களில் 90% பேர் ஆங்கில மொழி அறியாதவர்களாகவும், அதனைப் பயன்படுத்த முடியாதவர்களாகவும் உள்ளனர். இதன் மூலம் அதிகமான மக்களை பேஸ்புக் பயனாளர்களாகப் பெற்று வருகிறது. தற்போது இந்தியாவின் முக்கியமான 12 மொழிகளில் பேஸ்புக் இயக்கம் உள்ளது.
இந்த வகையில் தான், 'Free Basics'/ 'Internet.org' என்னும் திட்டத்தினை பேஸ்புக் இந்தியாவில் அறிமுகம் செய்து, இலவச இணைய இணைப்பினை வழங்கத் தொடங்கியது. ஆனால், இந்த சேவையைச் சுற்றி அமைக்கப்பட்ட தடைச் சுவர்களை, இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. எனவே, இந்த திட்டம் தொடரவில்லை.
இருந்தாலும், தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராமல், 'எக்ஸ்பிரஸ் வை பி' என்னும் திட்டத்தினை, இந்தியாவில் மூலை முடுக்குகளில் உள்ள கிராம மக்களுக்கென வடிவமைத்துள்ளது. இது தற்போது சோதனை முயற்சியில் உள்ளது. கூகுள் ஏற்கனவே, ரயில்வே நிலையங்களில் இலவச வை பி தருவதை இந்திய அரசும் மக்களும் ஏற்றுக் கொண்டமையால், பேஸ்புக்கின் இந்த திட்டமும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பேஸ்புக் எதிர்பார்க்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X