ரிலையன்ஸ் 4ஜி பட்ஜெட் ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 அக்
2016
00:00

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய Lyf F1 ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு பட்ஜெட் விலையில் கிடைக்கும் 4ஜி ஸ்மார்ட் போன். இதன் அதிகபட்ச விலை ரூ. 13,399.
இந்த விலையில் வாங்குவோருக்கு பல சலுகைகளையும் பரிசுகளையும் ரிலையன்ஸ் வழங்குகிறது. ரூ.3,000 மதிப்புள்ள புளுடூத் ஸ்பீக்கர் கிடைக்கிறது. சிட்டி பேங்க் வாடிக்கையாளர்களுக்கு, கார்ட் பயன்படுத்துகையில் 10% பணம் திரும்ப கிடைக்கிறது. ரூ. 15,000 மதிப்புள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் பரிசு கூப்பன் தரப்படுகிறது.
இந்த 4ஜி ஸ்மார்ட் போனில், பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. Rich Communication என்னும் சேவையின் மூலம், பயனாளர் தான் இருக்கும் இடத்தினை அழைப்பின் போது மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். மீடியா பைல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். Smart Play என்னும் வசதி, போனைப் பயன்படுத்துபவர், பார்த்துக் கொண்டிருக்கும் விடியோ திரையை விடுத்து வெளியே பார்த்தால், விடியோ தற்காலிகமாக நிறுத்தப்படும் செயல்பாட்டினைத் தருகிறது. ஒரே நேரத்தில், இரு விடியோ பைல்களை இயக்கலாம்.
Smart Ring என்னும் டூல், பயனாளர் போன் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளை ஆய்வு செய்து, தானாகவே ஒலி அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஒரே எண்ணிலிருந்து மூன்று முறை “மிஸ்டு கால்” வந்தால், இறுதி அழைப்பின் அழைப்பு மணி ஒலி அதிகப்படுத்தப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் போனின் மற்ற சிறப்பம்சங்கள்: 5.5. அங்குல அளவிலான, 1080 x 1920 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய ஐ.பி.எஸ். டிஸ்பிளே திரை, மார்ஷ்மலோ ஆப்பரேட்டிங் சிஸ்டம், 3 ஜி.பி. ராம் மெமரி, 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, ஆக்டா கோர் Qualcomm Snapdragon 617 சி.பி.யு., Adreno 405 ஜி.பி.யு., பின்புறமாக 16 எம்.பி., முன்புறமாக 8 எம்.பி. திறன் கொண்ட கேமராக்கள், நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, எல்.டி.இ., வை பி, புளுடூத் 4.1, மைக்ரோ யு.எஸ்.பி. மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயக்கம் ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 155.5 x77.6 x7.9 மிமீ மற்றும் எடை 153 கிராம். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம்.
தற்போது Lyf F1 ஸ்மார்ட் போன் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளின் வழியாகக் கிடைக்கிறது. இதே வரிசையில் வெளியிடப்பட்டுள்ள மற்ற ரிலையன்ஸ் போன்களுடன் தரப்படுவதைப் போல, ஜியோ சிம் இலவசமாகத் தரப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X