கேமரா ஸ்பெஷல் ஹானர் 8 ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 அக்
2016
00:00

ஹுவே நிறுவனம், அண்மையில் தன்னுடைய Honor 8 ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் கேமரா செயல்பாடு, பல புதிய வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது கேமரா பிரியர்களை இதன் வசம் இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 29,999 என அதிக பட்ச விலையாகக் குறியிடப்பட்டுள்ள இந்த போன், ப்ளிப் கார்ட், அமேஸான் மற்றும் ஹுவே நிறுவன இணைய தளங்கள் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
இதில் டூயல் லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா பின்புறமாக 12 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. ஒரு லென்ஸ் வண்ணங்களைக் கைப்பற்றுகிறது. இன்னொன்று வண்ணமல்லாத படத்தைப் பதிகிறது. பின் இரண்டும் இணைக்கப்பட்டு, சிறந்த படம் தரப்படுகிறது. ஹுவே நிறுவனத்தின் P9 ஸ்மார்ட் போனில் உள்ளது போன்ற வடிவமைப்பு இந்த கேமராவில் தரப்பட்டுள்ளது. டூயல் டோன் டூயல் ப்ளாஷ், டூயல் ஐ.எஸ்.பி. ஆட்டோ போகஸ் இணைந்த லேசர், காண்ட்ராஸ்ட் போகஸ், துல்லியமான படத்திற்கான ஆழ அளவு என மற்ற கேமரா அம்சங்கள் இதில் தரப்பட்டுள்ளன. இதன் லென்ஸ் திறக்கப்படும் நிலை (aperture mode) மூலம், படத்தின் பின்னணி மங்கலாக்கப்பட்டு, எடுக்கப்படும் படத்தின் குவி மையம் தெளிவாக்கப்படுகிறது.
பின்புறமாக விரல் ரேகை உணரும் வசதி தரப்பட்டுள்ளது. ஒரு நொடியில் பாதிக்கும் குறைவான நேரத்தில் இதனை இயக்கலாம். இயக்கியவுடனேயே, அப்ளிகேஷன்களை இயக்கலாம். கூகுள் நவ் செயல்படுத்தலாம். மற்றும் கேலரியில் உள்ள போட்டோக்களை வரிசையாகக் காணலாம்.
மற்ற அம்சங்கள்: 5.2 அங்குல திரை, LTPS டிஸ்பிளேயுடன், 1080 x 1920 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. ஆண்ட்ராய்ட் 6 மார்ஷ் மலாய் சிஸ்டம் இயங்குகிறது. 1.8 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டோ கோர் Kirin 950 சி.பி.யு. தரப்பட்டுள்ளது. இதன் ஜி.பி.யு. Mali-T880. முன்புறமாக 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் ராம் மெமரி 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் பேட்டரி 3000 mAh திறன் கொண்டது. இந்த போனின் பரிமாணம் 145.5 x 71 x 7.45 மிமீ. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.2, யு.எஸ்.பி. டைப் சி, ஜி.பி.எஸ்., என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X