வேர்டில் டெக்ஸ்ட்டாக பவர்பாய்ண்ட் ஸ்லைட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஜன
2011
00:00

பொதுவாக பிரசன்டேஷன் மேற்கொள்ள, நாம் வேர்ட் தொகுப்பிற்குப் பதிலாக, பவர்பாய்ண்ட் புரோகிராமினையே விரும்புவோம். ஏனென்றால், பவர்பாய்ண்ட் புரோகிராமில் பிரசன்டேஷன் தயார் செய்வது மிக மிக எளிது. பார்ப்பவர்களும் இதனையே விரும்புவார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், சொல்லப்படும் விஷயங்கள் விரைவாகத் தெரிய வரும். ஆனால் சில வேளைகளில், நாம் வேர்ட் தொகுப்பு மூலம் பிரசன்டேஷன் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவோம். இந்த சூழ்நிலையில், பவர்பாய்ண்ட் புரோகிராமில் ஸ்லைடுகளை அமைத்து, அதனை வேர்ட் தொகுப்பிற்கு மாற்றிக் கொள்ளும் வசதியினை, பவர்பாய்ண்ட் கொடுக்கிறது. அதனை இங்கு காணலாம்.
1. பவர்பாய்ண்ட் தொகுப்பின் இடது மேல் பக்கம் “Office” பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. மெனுவின் இடது பக்கம் உள்ள “Publish” என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது காட்டப்படும் மெனுவில் “Create Handouts in Microsoft Office Word” என்பதில் கிளிக் செய்திடவும்.
4. பின்னர், “Send to Microsoft Office Word” என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
5. தரப்படும் பேஜ் லே அவுட் பட்டியலில், வேர்ட் டாகுமெண்ட்டுக்கான லே அவுட் தேர்ந்தெடுக்கவும்.
6. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள “Add slides to Microsoft Office Word document” என்பதில் “Paste link” அல்லது “Paste” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே பட்டனில் கிளிக் செய்திடவும்.
இனி வேர்ட் 2007 தானாகத் திறக்கப்பட்டு, அதில் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகள் இருப்பதனைக் காணலாம். நீங்கள் “Paste” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைட் அப்படியே வேர்ட் டாகுமெண்ட் ஆக மாறி இருக்கும். “Paste Link” ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், பவர்பாய்ண்ட் ஸ்லைட் போலவே ஒரு டாகுமெண்ட்டாக மாற்றப்பட்டிருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X