எண்ணியது நிறைவேற...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 நவ
2016
00:00

முன்னேறி, முதல் நிலை பெற வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால், அதற்கான முயற்சிகளை நாம் எந்த அளவு மேற்கொள்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.
உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தான், முனிகுமார சிறுவன் ஒருவன். அங்கே அவனுக்கு பால் கொடுத்தனர். குடித்துப் பார்த்த சிறுவன், திகைத்தான். காரணம், அதுவரை, அவன் தாய், மாவை கரைத்து, பாலாக அவனுக்கு ஊட்டி வந்தாள்.
அந்த மாவுக் கரைசலையே பால் என குடித்து வந்த சிறுவன், இங்கே, உண்மையான பாலை, அதுவும், காமதேனுவின் பாலைக் குடித்ததும், திகைத்து விட்டான். 'ஓ... இதுதான் பாலா... அம்மா வேறு எதையோ கொடுத்தாளே...' என்று எண்ணினான்.
வீடு திரும்பியதும், வழக்கம் போல் மாவை கரைத்து, பாலாக அளித்தாள், தாய். உடனே, 'எனக்கு இந்தப் பால் வேண்டாம்; நான், அங்கு குடித்த, அந்தப் பால் தான் வேண்டும்...' என்றான், சிறுவன்.
'குழந்தையின், இந்த சிறு விருப்பத்தைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே...' என்று, கண் கலங்கிய அவனது தாய், 'மகனே... நம் வீட்டில் அதற்கெல்லாம் வழி கிடையாதடா... நீ, சிவபெருமானை நோக்கி தவம் செய்; உன் விருப்பம் எதுவாக இருந்தாலும், அவர் நிறைவேற்றி வைப்பார்...' என்றாள்.
உடனே சிறுவன், 'தாயே... என் கடுந்தவத்தால், கயிலை நாதனை தரிசித்து, பாற்கடலையே பெற்று வருகிறேன்...' என்று சொல்லி, காட்டிற்கு சென்று, கடுந்தவம் செய்தான். அவன் தவத்திற்கு இடையூறாக, சில பேய் வடிவங்கள் வந்து தொல்லை கொடுத்தன; அஞ்சவில்லை, சிறுவன்.
பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, அவைகளுக்கு சாப விமோசனம் அளித்து, தவத்தை தொடர்ந்தான்.
அவன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஐராவதம் எனும் யானையின் மீது ஏறி, தேவேந்திரனைப் போன்ற உருவில் அவனுக்கு காட்சியளித்தார். 'தேவேந்திரா... அடியேன் தங்களை கண்டதில் மகிழ்ச்சி; சிவபெருமான் திருவடிகளில், நிலையான பக்தியை தந்தருளுங்கள்...' என, வேண்டினான், சிறுவன்.
தேவேந்திரனாக வந்த சிவபெருமானோ, 'பாலகனே... சிவபெருமானாவது, உன் பக்திக்கு இரங்குவதாவது... தேவேந்திரனான என்னை வணங்கு; மூவுலகங்களுக்கும் அதிபதியான நான், உனக்கு வேண்டியதை எல்லாம் தாராளமாக வழங்குவேன்...' என்றார்.
இதைக் கேட்டதும் கடும் சினம் கொண்டு, 'யார் நீ... தேவேந்திரனாக இருந்தால், இவ்வாறு சிவநிந்தனை செய்ய மாட்டாய்... அரக்கனான நீ, மாறுவேடத்தில் வந்திருக்கிறாய். என் தவத்தை கலைக்க வந்த உன்னை, கொன்று விடுகிறேன் பார்...' என்று சொல்லி, தேவேந்திரனை நெருங்கினான்.
அப்போது, சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து, 'பாலகா... உன் பக்தியால், என்னை கட்டிப் போட்டு விட்டாய்; உன்னை சோதனை செய்வதற்காகவே தேவேந்திரன் உருவில் வந்தேன். பால் வேண்டி வந்த உனக்கு, பாற்கடலையே தருகிறேன்...' எனச் சொல்லி, பாற்கடலையே அங்கு பெருகச் செய்தார்.
சிவபெருமானிடம் பால் கேட்டு, பாற்கடலையே பெற்ற அந்த சிறுவன் தான், புகழ் பெற்ற உபமன்யு முனிவர்!
எண்ணியது நிறைவேற, விடாமுயற்சி தேவை. இடையில், வேறெதாவது கிடைத்தாலும், அதில் மயங்கி, ஏமாறக் கூடாது. அத்தகைய முயற்சிக்கு தான், தெய்வமும் முன்னின்று அருளும் என்பதை, விளக்கும் புராண கதை இது!

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!
கடலின் திரை அது போல் வரு
கலக்கம் மலம் அறுத்து என்
உடலும் எனது உயிரும் புகுந்து
ஒழியா வண்ணம் நிறைந்தான்
சுடரும் சுடர்மதி சூடிய
திருப்பெருந்துறை உறையும்
படரும் சடை மகுடத்து எங்கள்
பரன்தான் செய்த படிறே!
விளக்கம்: ஒளி வீசும் நிலவைச் சூடியவனும், திருப்பெருந்துறையில் வீற்றிருந்தருளுபவனும், படர்ந்த திருச்சடையை திருமுடியாகக் கொண்ட பரம்பொருளான எங்கள் சிவபெருமான், பெருங்கடலில் அலைகள் மாறி மாறி வருவதைப் போல, பிறவித்துன்ப கலக்கத்தையும், அதற்கு வாயிலான (ஆணவம் முதலான) மலங்களையும் அறுத்து, என் உடலிலும், உயிரிலும் நிறைந்து நின்று, அருளுகிறார்!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
07-நவ-201603:47:32 IST Report Abuse
Krishna Sreenivasan சிவனை நம்பினால் புவியில் மேன்மை நிச்சயம். சர்வம் ஜெயமே தான். ஓம் நமசிவாய என்று மனத்துளே ஜபித்தால் போதுமே நம் மனது நிம்மதியா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
06-நவ-201609:14:01 IST Report Abuse
Ramesh Kumar //சிவபெருமானை நோக்கி தவம் செய் உன் விருப்பம் எதுவாக இருந்தாலும், அவர் நிறைவேற்றி வைப்பார்...//. ..//.எண்ணியது நிறைவேற, விடாமுயற்சி தேவை. இடையில், வேறெதாவது கிடைத்தாலும், அதில் மயங்கி, ஏமாறக் கூடாது. அத்தகைய முயற்சிக்கு தான், தெய்வமும் முன்னின்று அருளும் // முற்றிலும் உண்மை....விடாப்பிடியான வேண்டுதலுக்கு சிவன் என்றும் செவி சாய்ப்பார்.....ஓம் நமசிவாய...சிவனே போற்றி, போற்றி.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X