ஆனந்தக் கண்ணீரில் பிறந்த அம்பிகை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 நவ
2016
00:00

நவ.,7 தெய்வானை திருக்கல்யாணம்

மகளுக்கு திருமணம் என்றால், மணமகன் அவள் கழுத்தில் தாலி கட்டும் போது, தன்னையறியாமல் ஆனந்தக்கண்ணீர் பெருகுகிறது. பிள்ளைகள் படிப்பில், 'நம்பர் ஒன்' என்ற இடத்தைப் பிடித்து, பதக்கம் பெறும் போது, கண்ணீர் வருகிறது. 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்று தன் இனிய குரலில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் போது, நம்மையறியாமல், கண்களில் நீர் கட்டுகிறது. அப்போது, மனதிற்குள் ஏதோ ஒரு இன்பமயமான பிசைவு...
இப்படித்தான், சிவபெருமான், ஆனந்த தாண்டவம் ஆடிய போது, திருமாலுக்கு ஆனந்தக்கண்ணீர் பெருகியது. அக்கண்ணீர் துளிகள், இரு பெண்களாக வடிவெடுத்தன. அவர்களை, தன் மகள்களாக ஏற்றார் திருமால். மகள்களை பார்த்தவுடன், லட்சுமிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. கிடைத்தற்கரிய அமிர்தம் போல் கிடைத்ததால், மூத்தவளுக்கு அமிர்தவல்லி என்றும், அழகே வடிவாய் இருந்ததால், இளையவளுக்கு சுந்தரவல்லி என்றும் பெயரிட்டனர். 'சுந்தர' என்றால் அழகு என்று பொருள்.
பெண்ணைப் பெற்று விட்டால், அடுத்து, அவர்களுக்கு தகுந்த துணையைத் தேட வேண்டுமல்லவா...
அதனால், திருமால், தன் பெண்களிடம், 'நீங்கள், உங்கள் அத்தை பார்வதிதேவியின் மகன் முருகனை நினைத்து தவமிருங்கள்; அவருக்குரிய மந்திரத்தை உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். அவர், உங்களை ஆட்கொள்வார்...' என்றார். தந்தை சொல்லை ஏற்ற அப்பெண்களும், 'ஓம் சரவணபவ' என்ற மந்திரம் ஓதி, தவத்தில் ஆழ்ந்தனர்.
அத்தவத்தை ஏற்ற முருகன், அவர்கள் முன் தோன்றி, 'அமிர்தவல்லி... நீ, தேவலோகத்தில் இந்திரனுக்கு மகளாய் பிறப்பாய்; சுந்தரவல்லி... நீ பூலோகத்தில் நம்பிராஜன் என்ற வேடர் தலைவனின் மகளாகப் பிறப்பாய். உங்கள் இருவரையும், தக்க சமயத்தில் ஆட்கொள்வேன்...' என்று உறுதியளித்தார்.
இச்சமயத்தில், கஷ்யப முனிவரின் புத்திரனான பத்மாசுரன், தன் சகோதரர்களுடன் இணைந்து, தேவர்களுக்கு துன்பம் விளைவித்தான். தேவர்களும், கஷ்யபரின் புத்திரர்கள் தான். இரு தரப்புக்கும், தாய் மட்டும் வேறு. இந்த தாயாதி சண்டை வலுத்தது.
தேவர்களின் தலைவன் இந்திரனின் மகன் ஜெயந்தனை, பத்மாசுரன் கடத்திச் சென்று, பூலோகத்தில், செந்திலம்பதி எனும் திருச்செந்தூரில் சிறை வைத்தான்; தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர்.
தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி, சரவணப்பொய்கையில் இட்டார், சிவன்; அந்தப் பொறிகள் ஆறு குழந்தைகள் ஆயின. அவர்களை, ஒன்று சேர்த்து, கந்தன் என பெயர் சூட்டினாள் பார்வதிதேவி. 'கந்தன்' என்றால், ஒன்று சேர்க்கப்பட்டவர் என்று அர்த்தம். அவர் அழகாக இருந்ததால், முருகன் என பெயர் பெற்றார். 'முருகன்' என்றால், அழகன் என்று பொருள்.
இந்நிலையில், தேவலோகப் பெண்ணாக, நீலோற்பவ மலரில் பிறந்தாள், அமிர்தவல்லி. அவளை, எடுத்து வளர்த்தான், இந்திரன். அவனது ஐராவதம் என்ற வெள்ளை யானை, அவளை அன்புடன் பராமரித்தது. தெய்வத்தன்மையுள்ள யானையின் பராமரிப்பில் வளர்ந்ததால், தெய்வானை என்று பெயர் பெற்றாள். பத்மாசுரனை சம்ஹாரம் செய்து, ஜெயந்தனை விடுவித்தார், முருகப்பெருமான். இதற்கு வெற்றிப்பரிசாக, தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு, மணம் செய்து கொடுத்தான், இந்திரன்.
இந்த இனிய திருக்கல்யாணம், சூரசம் ஹாரத்திற்கு மறுநாள், திருச்செந்தூர் மற்றும் பழநி உள்ளிட்ட முருகன் கோவில்களில் நிகழ்த்தப்படும். தெய்வானை திருமணக்கோலம் கண்டு, நாமும் ஆனந்தம் அடைவோம்!

தி.செல்லப்பா

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagarajan - madurai,இந்தியா
06-நவ-201611:40:52 IST Report Abuse
nagarajan அற்புதமான பாதிப்பு ஆழ்த்த கருத்துக்கள் மிக்க மகிழ்ச்சி கந்தன் மற்றும் தெய்வானை பெயர்க்காரணம் சொன்னதற்கு நன்றி அடுத்த பதிவிறக்கத்திற்காக காத்து கொண்டு இருக்கிறேன் நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X