வேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2016
00:00

நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவைகளுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள அதtணிஊடிt என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் கட்டத்திலும் சிறிய அளவில் டேட்டா வைத்திருந்தால், இந்த வசதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
நீங்கள் வேர்ட் 2000, 2003 பயன்படுத்துபவர்களாக இருந்தால், கீழே தரப்பட்டுள்ளபடி செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. சம்பந்தப்பட்ட டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
2. டேபிள் மெனுவில் உள்ள AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஒரு துணை மெனுவினைக் காட்டும்.
3. இந்த துணை மெனுவில் AutoFit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் பயன்படுத்துவது வேர்ட் 2007 அல்லது வேர்ட் 2010 ஆக இருந்தால்,
1. சம்பந்தப்பட்ட டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி, Layout என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து, Cell Size என்ற குரூப்பில், AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் ஒரு கீழ்விரி மெனுவினைத் தரும்.இதில் பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.
4. இவற்றிலிருந்து AutoFit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதனால் டேபிளில் ஏற்படும் மாற்றம், நீங்கள் அதன் கட்டங்களில் நிரப்பியிருக்கும் தகவல்களைப் பொறுத்தது. டேபிள் முழுக்க காலியாக இருந்தால், அனைத்து கட்டங்களும் ஒரே மாதிரியான அளவில் மாற்றி அமைக்கப்படும். அல்லது ஏதேனும் சில கட்டங்களில் மட்டும் தகவல்கள் இருப்பின், அவற்றிற்கேற்ப அனைத்து கட்டங்களும் மாற்றி அமைக்கப்படும். பல வகையான தகவல்களை செல்களில் அமைத்திருந்தால், மவுஸ் உதவியுடன் மேலே குறிப்பிட்ட வசதியைப் பயன்படுத்தலாம். டேபிளின் இடது எல்லைக் கோட்டில் டபுள் கிளிக் செய்திடவும். நெட்டு வரிசை செல்களின் எல்லைக் கோடு தானாக அட்ஜஸ்ட் செய்யப்படும். மேலே தரப்பட்ட வழிகளின் மூலம் செட்டிங்ஸ் ஏற்படுத்திச் செய்திடும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X