எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2016
00:00

ஒலிக்கும் எக்ஸெல்







நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒரு மல்ட்டி மீடியா கம்ப்யூட்டர் என்றால், எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றினைப் பயன்படுத்துகையில், சில செயல்பாடுகளுக்கு ஒலிக்கச் செய்திடும் வகையில் அமைக்கலாம். ஏற்கனவே, நாம் தவறான கீயினை அழுத்துகையில் 'டிங்' என்று நாம் எதிர்பார்க்காத ஒலியை எக்ஸெல் ஏற்படுத்தும். இதனைச் சற்று விரிவாக, நாம் விரும்பும் செயல்பாடுகளில், விரும்பும் ஒலி ஏற்படும் வகையில் அமைக்கலாம்.
இதற்குக் கீழே கொடுத்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. முதலில் எக்ஸெல் செயலியை இயக்கவும். எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் அழுத்தி, கீழாகக் கிடைக்கும் Excel Options என்ற டேப்பில் அழுத்தவும். எக்ஸெல் 2010 மற்றும் எக்ஸெல் 2013 எனில், ரிப்பனில், File டேப் அழுத்தி Options என்பதனைக் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது கிடைக்கும் பிரிவுகளில் Provide Feedback with Sound என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, எந்த ஒலி வேண்டும் என்பதனை கண்ட்ரோல் பேனல் சென்று, Sounds Applet மூலம் மாற்றிக் கொள்ளலாம். இந்த செயல்பாட்டினை, எக்ஸெல் உள்ளாக மேற்கொள்ள முடியாது.

செல்லுக்குள் சுருங்கும் எண்கள்







எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது. எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா? இந்த வேலையை யார் பார்ப்பார்கள்? எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா? தேவையே இல்லை.
கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும். செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். அதற்கான “shrink to fit” என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும்.
இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும்.
இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவை செல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X