கொடி கட்டிப் பறக்கும் ஸ்மார்ட் போன் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2016
00:00

இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை தொடர்ந்து பல உயரங்களைத் தொட்டுக் கொண்டு வருகிறது. நடப்பு 2016 ஆம் ஆண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டு இதே காலத்தில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும், 23% உயர்வாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில், 5 சதவீதமே அதிகரித்த நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை கவனத்திற்குரியது என Counterpoint Research என்னும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4ஜி அல்லது எல்.டி.இ. அலைவரிசை திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களில், பத்தில் எட்டு போன்கள், தற்போது, ஸ்மார்ட் போன் செயல்பாட்டில், மிக உயர்ந்த திறனாகக் கருதப்படுகின்ற VoLTE (Voice over Long-Term Evolution (VoLTE)) தகவல் பரிமாற்றத்தினைச் செயல்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றன. இந்த திறன், தற்போதைய ஸ்மார்ட் போன் விற்பனையில் ஒரு தேவையான தர வசதியாகக் கருதப்படுகிறது. இதனாலேயே ஸ்மார்ட் போன் விற்பனை உயர்ந்து வருகிறது.
சாதாரண போன்களானாலும் ஸ்மார்ட் போன்களானாலும், இந்தியாவில் விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது சாம்சங் நிறுவனம். சென்ற காலாண்டில், இதன் விற்பனை 4% குறைந்தாலும், மிக அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களை விற்பனை செய்த நிறுவனமாக, சாம்சங் நிறுவனமே இடம் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில், மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், அதனை அடுத்து லெனோவா என வரிசையில் உள்ளன. இன்டெக்ஸ் நான்காவது இடத்திற்குச் சென்று விட்டது. ஸ்மார்ட் போன் விற்பனையில், இன்டெக்ஸ் நிறுவனத்தை, LYF மற்றும் Xiaomi நிறுவனங்கள் முந்திவிட்டன. Oppo மற்றும் Vivo தொடர்ந்து விற்பனையில் முன்னேறி வருகின்றன. சென்ற ஆண்டைக் காட்டிலும், முறையே 272% மற்றும் 437% அதிகமாக விற்பனை மேற்கொண்டன.
பல நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகளை அள்ளித் தந்து தங்கள் விற்பனையை அதிகரித்து வருகின்றன. இந்தப் போட்டிக்குக் காரணம், மக்கள் மொபைல் போன் என்று வாங்கினால், அது ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும் என்ற இலக்கினைக் கொண்டிருப்பதால் தான் என இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டுள்ள அமைப்புகள் அறிவித்துள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X