அதிரடியான மாற்றங்களுடன் சாம்சங் காலக்ஸி எஸ் 8 எட்ஜ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2016
00:00

தன் சாம்சங் காலக்ஸி நோட் 7 பேட்டரியினால், பலத்த இழப்பிற்கு ஆளானதுடன், தன் நிறுவனப் புகழையும் கெடுத்துக் கொண்ட சாம்சங் நிறுவனம், விரைவில் வெளியிடப்பட் இருக்கும், காலக்ஸி எஸ் 8 எட்ஜ் ஸ்மார்ட் போனில், பல அதிரடியான தொழில் நுட்ப வசதிகளை அமைக்க இருக்கிறது. இது குறித்து உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.
இரு பக்கமும் வளைவுகள் கொண்ட திரை அமைக்கப் படும். இதன் திரை 5.5 அங்குல அளவில் 3840 x 2160p பிக்ஸெல் அடர்த்தியுடன், Super AMOLED 4K டிஸ்பிளே கொண்டதாக அமையும். இதன் அடர்த்தி திறன் 806ppi ஆக அமையும். இதனால், இதன் திரை 'மெய்மை உணர்வு தரும்' விர்ச்சுவல் ரியாலிட்டி தன்மையுடன் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு மிகப் பெரிய அம்சம் அதன் ராம் நினைவகம். நிச்சயமாய் இது 6 அல்லது 8 ஜி.பி. கொண்டதாக இருக்கலாம். இதுவரை 8 ஜி.பி. யுடன் ராம் மெமரி கொண்ட ஸ்மார்ட் போன் வந்ததில்லை.
இதன் செயல் திறன் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக அமையும் வண்ணம், ப்ராசசர்கள் பொருத்தப்பட இருக்கின்றன. பன்னாட்டளவில் பகுதிவாரியாக, ப்ராசசர்கள் அமையும். ஒரு மாடல் போனில் Snapdragon 830 SoC ப்ராசசரும், இன்னொன்றில், Exynos 8895 CPU ப்ராசசரும் இருக்கும்.
வரும் பிப்ரவரி 26 இது குறித்த அறிவிப்பு வரும் என்றும், போன் மார்ச் மாதம் விற்பனைக்குக் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X