எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 நவ
2016
00:00

எக்ஸெல் பார்மட் வகை
எக்ஸெல் மாறா நிலையில் தன் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளைக் குறிக்க எழுத்துகளையும் எண்களையும் (A/1) பயன்படுத்துகிறது. நெட்டு வரிசைகள் ஆங்கில எழுத்து வரிசையிலும், படுக்கை வரிசைகள் எண்கள் வரிசையிலும் குறிக்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு கட்டத்தினை (Cell) குறிக்க, அதற்கான எழுத்து மற்றும் எண்ணைப் பயன்படுத்த வேண்டும். பார்முலாக்கள் மற்றும் பிற செயல்பாடுகளில் இவ்வாறே எழுதப்பட வேண்டும். இதன் மூலம், குறிப்பிட்ட ஒரு கட்டத்தினைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
அனைத்து ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம்களும் இதே அமைப்பினை மேற்கொள்வதில்லை. அவை இன்னொரு குறியீட்டு முறையினைப் பயன்படுத்துகின்றன. படுக்கை வரிசைக்கான ஆங்கிலச் சொல் Row என்பதில் R என்பதையும், நெட்டு வரிசைக்கான ஆங்கிலச் சொல்லான Column என்பதில் C என்பதனையும் கொண்டு அது எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதனை எண்ணால் இணைத்து குறிப்பிடுகின்றன. எடுத்துக் காட்டாக, முதல் செல் R1C1 என்ற குறியீட்டு வகையில் குறிப்பிடப்படும். ஐந்தாவது படுக்கை வரிசையும், ஏழாவது நெட்டு வரிசையும் சந்திக்கும் இடத்தில் உள்ள செல் R5C7 எனக் குறிப்பிடப்படும்.
அப்படியானால், எந்த முறையை நாம் மேற்கொள்வது? இதனை எப்படி எக்ஸெல் புரோகிராமிற்குத் தெரியப்படுத்துவது? நாம் எந்த முறையைப் பயன்படுத்துகிறோம் என்பதனைக் கீழே குறிப்பிட்டுள்ள முறையில், எக்ஸெல் புரோகிராமிற்குத் தெரியப்படுத்தலாம்.
1. எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளவும். இதில் Excel Options என்ற பட்டனில் கிளிக் செய்து, Excel Options டயலாக் பாக்ஸைப் பெறவும். எக்ஸெல் 2010 மற்றும் 2013 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் File டேப் தட்டி இதனைப் பெறலாம்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Formulas என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் பாக்ஸில் வலது பக்கம் 'Working with Formulas' என்ற பிரிவினைப் பார்க்கவும்.
4. நீங்கள் R1C1 குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதாக இருந்தால், R1C1 Reference Style செக் பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும். A1 குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த பாக்ஸில் டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மாறா நிலையில் எக்ஸெல் A1 குறியீட்டு முறையினையே பின்பற்றும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

தேதி இடுகையில் புள்ளிகளைப் பயன்படுத்த
எக்ஸெல் புரோகிராம், மாறா நிலையில், அதில் தேதிகளை இடுகையில் சாய்வான கோட்டினை (/) இடுகிறது. தேதிகள் அதிக எண்ணிக்கையில் நீங்கள் அமைக்க இருந்து, அவற்றில், கோட்டுக்குப் பதிலாக, புள்ளிகள் வரவேண்டும் என விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்பட்டு அமைப்பினை மாற்றலாம்.
முதலில் மாற்ற வேண்டும் என விரும்பும் தேதிகளைக் கொண்ட செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின், அந்த செல்கள் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Format Cells” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பார்மட் செல்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Number” டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். இதில் உள்ள Category பட்டியலில் “Custom” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “m.d.yyyy” (மேற்கோள் குறிகள் இல்லாமல்) என டைப் செய்திடவும். இங்கு “mm.dd.yyyy” என உள்ளீடு செய்தால், ஒற்றை இலக்க தேதி மற்றும் மாதம் வருகையில், அந்த இலக்கத்தின் முன் ஒரு சைபர் சேர்க்கப்படும். (எ.கா. 01.04.2016) இனி, தேதிகள் இடுகையில், சாய்வு கோடுக்குப் பதிலாக, புள்ளிகள் இருப்பதைக் காணலாம். பின் நாளில், இது சரியில்லை, பழைய சாய்வு கோடே இருக்கட்டும் என விரும்பினால், இதே முறையைப் பின்பற்றி, கேடகிரி பட்டியலில், “Date” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Type” பட்டியல் பெட்டியில், நீங்கள் விருப்பப்படும் பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X