பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 நவ
2016
00:00

விண்டோஸ் சிஸ்டம் குறித்து தரப்பட்டுள்ள அதன் சாதனங்கள் மற்றும் அதன் முழுமையான பயன்பாட்டினைப் பெற தரப்பட்ட குறிப்புகளாக இருந்தாலும், விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் தன்மையை எளிதாக விளக்குவதாக அமைந்துள்ளது. கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு, விண்டோஸ் இயக்க முறைமையினை அறிந்து கொள்ள நல்லதொரு பாடக் கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.
பேரா டாக்டர். ஆர். தனபாலன், மதுரை.

விண்டோஸ் சிஸ்டம் இயக்கம் குறித்த அதன் பிரிவுகள் தமிழ்ச் சொற்களால் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது, அதன் இயக்கத்தினை விளக்குவதாக உள்ளது. தமிழ்ப் படுத்துவதாக, மேலும் குழப்பமான முறையில் பெயரிடுபவர்களுக்கிடையில், மிகச் சிறப்பாக ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களாக உள்ளன. பாராட்டுகள். இப்படியே தொடர்ந்து எழுதவும்.
பேரா. என். ஜனார்த்தனம், திருச்சி.

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், எனக்கு புளுடூத் இணைப்பில் பிரச்னை இல்லை. இருப்பினும், உங்கள் தெளிவான கட்டுரை, அதன் செயல்பாடுகளின் வேறு சில தன்மைகளை விளக்குவதாக அமைந்துள்ளது.
இரா. தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர்.

புளுடூத் குறித்த அடிப்படை செய்திகள் முதல், படிப்படியாக, அதன் பயனை முழுமையாகப் பெற என்ன செய்திட வேண்டும் என்பது வரை, தரப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் ஐயங்கள் அனைத்தையும் தெளிவாக்குவனவாக உள்ளன. தகவல்களுக்கு நன்றி.
கே. ஜெயலட்சுமி, திருநகர்.

செக்யூரிட்டி பைலே போலியா? நிம்மதியாக கம்ப்யூட்டரை இயக்குவது என்பது போயே போச்சு. எப்போ எந்த பைல் கம்ப்யூட்டருக்குள் நுழைந்திடுமோ என்ற பயத்துடனேயே, இணையம் செல்ல வேண்டியதுள்ளது. இருப்பினும் நீங்கள் தந்துள்ளது போன்ற அறிவுரைகளையும் குறிப்புகளையும் பின்பற்றினால், பாதுகாப்பாக கம்ப்யூட்டரை இயக்கலாம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது.
என். மாலதி, தஞ்சாவூர்.

இனி எல்லாமே மொபைல் வழி தான் என்பது இன்றைய டிஜிட்டல் உலகின் நடைமுறையாக மாறிவிட்டது. இந்த வகையில் அமெரிக்க மக்களின் பயன்பாட்டினை, இந்திய மக்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இதனால், ஏற்கனவே வேகமாகச் சென்று கொண்டிருக்கும் நம் வாழ்க்கை, இனி எளிதாகவும் வசதியாகவும் மாறும். மொபைல் வழியாகத்தான் நம் வர்த்தக மற்றும் விளம்பர உலகம் வளர இருக்கிறது. நம் பொருளாதார முன்னேற்றத்தின் பலகணியாக மொபைல் போன் இடம் பிடிக்க உள்ளது.
கே. எம். ஸ்ரீதர் கோவிந்த், ஹோசூர்.

விண்டோஸ் 10 இயக்கத்தில், பழைய புரோகிராம்களும், விளையாட்டுகளும் இயங்கும் என்ற நம்பிக்கை தரும் தகவலை பதிலாகத் தந்தது பலருக்கும், இந்த புதிய சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கத்தினை நிச்சயம் போக்கும். “Compatibility Mode” குறித்து நீங்கள் தந்துள்ள விளக்கமும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அளவில் தரப்பட்டுள்ளது. இந்த நிலை நமக்கு அனைத்து பழைய பைல்களையும் படிக்க இடம் தரும் என்பது ஒரு நல்ல தகவலே.
என். பலராமன், தென்காசி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X