எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 நவ
2016
00:00

பக்கங்களை அச்செடுக்கையில்: சிலர் தாங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பல பக்கங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அச்செடுக்கையில், அனைத்தையும் தொடர்ந்து எடுக்காமல், அப்போதைய தேவைப்படி, விருப்பப்படும் பக்கங்களை மட்டும் எடுக்க விரும்புவார்கள். இதனைச் செயல்படுத்த, வழக்கமான அச்சுக் கட்டளை இல்லாமல் கூடுதலாகச் சில வேலை செய்திட வேண்டும் அச்செடுக்கத் தேவையில்லாத பக்கங்களை முதலில் மறைக்க வேண்டும். பின்னர், மறைக்கப்படாத பக்கங்களை அச்செடுக்க கட்டளை கொடுத்தால், மறைக்கப்படாத பக்கங்கள் மட்டுமே அச்சாகும். இதன் பின்னர், மறைக்கப்பட்ட பக்கங்களை, மறைப்பிலிருந்து நீக்கிவிடலாம். அதாவது unhide செய்துவிடலாம். இதோ வழிகளைப் பார்ப்போம்.
1. முதலில் ரிப்பனில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து Workbook Views குரூப்பில், Page Break Preview டூலின் மீது கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் உங்கள் ஒர்க்ஷீட்டினைக் காட்டும். அதன் அனைத்து பேஜ் பிரேக் இடங்களும் தெரியும்.
3. இப்போது எந்த பக்கத்தினை அச்செடுக்க வேண்டுமோ, அதன் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அச்சடிக்க விரும்பும் அடுத்த பக்கத்தில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்படியே, அச்செடுக்க விரும்பும் அனைத்து பக்கங்களிலும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
6. தொடர்ந்து, கண்ட்ரோல் + பி (Ctrl+P) அழுத்தவும். எக்ஸெல் 2007 பிரிண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும். நீங்கள் எக்ஸெல் 2010 பயன்படுத்தினால், ரிப்பனில் பைல் டேப்பினைக் காட்டும். அதில் அச்செடுப்பதற்காண கண்ட்ரோல் கட்டளைகளைக் காணலாம்.
7. எக்ஸெல் 2007ல், Print What ஏரியாவில், Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2010ல், தலைப்பின் கீழ் உள்ள பட்டனை அழுத்தி, Print Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
8. ஓகே அல்லது பிரிண்ட் கிளிக் செய்தால், தேர்ந்தெடுத்த பக்கங்கள் அச்சாகும். தொடர்ந்து அச்சான பின்னர், Page Break Preview டிஸ்பிளேயை மூடவும்.

நெட்டுவரிசை பிரித்தல்:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற்களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு ஓர் எளிதான வழி உள்ளது. இந்த வழியைத் தெரியும் முன்னர், நான் பார்முலாவில் ஸ்ட்ரிங் பங்சன் பயன்படுத்தி, நானாகப் பிரித்து அமைத்தேன். இது தேவையே இல்லை. எக்ஸெல் அருமையான வழி ஒன்றைத் தருகிறது.
நெட்டு வரிசை A வில், இந்த இரட்டைச் சொல் பெயர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதனை முதலில் ஹைலைட் செய்திட வேண்டும். அடுத்து Data என்னும் டேப்பிற்கு மாறவும். அங்கு Text to Columns என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Convert Text to Columns என்னும் விஸார்ட் மேலாகக் கிடைக்கும்.
இதில் Delimited என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது மாறா நிலையில் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்திடவும். அடுத்து இந்த பெயர்களில் என்ன வகை delimiter வைத்துக் கொள்ளலாம் என்பதனைத் தெரிவிக்க வேண்டும். அடுத்து Next செல்லவும். வேறு delimiter கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் (tab or comma), அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டதாகக் கூடத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிளிக் செய்து முடிக்கவும். இந்தடேட்டாவினை இன்னொரு வரிசையில் அமைக்க வேண்டும் எனில், Destination என்னும் பீல்டில் அமைக்கவும். இனி தனித்தனியான வரிசையில் அமைந்துவிடும். மேலாகச் சென்று இந்த வரிசைகளுக்கான தலைப்பை மட்டும் நீங்கள் மாற்றி அமைத்தல் போதும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X