சிறப்பான செல்பி கேமராவுடன் விவோ வி 5
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 நவ
2016
00:00

விவோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, அண்மையில் தன்னுடைய வி5 (vivo V5) ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. செல்பி எடுப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட் போன் மிகத் திறன் வாய்ந்த கேமராவினைத் தருகிறது. முதன்மையாக உள்ள பின்புறக் கேமரா 13 எம்.பி. திறனுடனும், இரண்டாவது நிலையில் உள்ள முன்புற செல்பி கேமரா 20 எம்.பி. திறனுடனும் கொண்டதாக அமைந்துள்ளது. எனவே, செல்பி கேமரா ரசிகர்கள் இந்த ஸ்மார்ட் போனை வாங்க விருப்பப்படலாம். பின்புறக் கேமராவுடன் எல்.இ.டி.ப்ளாஷ், ஆட்டோபோகஸ் வசதி ஆகியன தரப்பட்டுள்ளன. Geo-tagging, touch focus, face detection, panorama ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. விடியோ கேமராவாக இயங்கும்போது, 1080p@30fps திறனுடன் செயல்படுகிறது.
இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 153.8 x 75.5 x 7.6 மிமீ. எடை 154 கிராம். இதன் திரை 5.5. அங்குல அகலத்தில் 720 x 1280 பிக்ஸெல் அடர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டது. ஐ.பி.எஸ். டிஸ்பிளே தரும் எல்.சி.டி. திரையாக உள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய். ராம் மெமரி 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இரண்டு சிம்களை இயக்கலாம். ஆனால், மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தும்போது சிம் ஸ்லாட்டில் தான் பயன்படுத்த வேண்டும். இதன் ப்ராசசர் ஆக்டோ கோர் திறன் கொண்டது. இதன் சிப் செட் MediaTek MT6750. இதனுடன் இணைந்து செயலாற்றும் ஜி.பி.யு. Mali-T860 MP2 ஆகத் தரப்பட்டுள்ளது.
இசை ரசிகர்களுக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக், லவுட் ஸ்பீக்கர் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, 4ஜி, வை பி, புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., மற்றும் யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. Fingerprint, accelerometer, proximity, compass என சென்சார் இயக்கங்கள் செயல்படுகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகளும் கிடைக்கின்றன. எம்பி3, எம்பி4 பிளேயர்கள், டாகுமெண்ட், போட்டோ மற்றும் விடியோ எடிட்டர்கள் செயல்படுகின்றன. இதில் அமைக்கப்பட்டுள்ள, வெளியே எடுக்க இயலாத லித்தியம் அயன் பேட்டரி 3000 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 17,980.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X