ஜப்பான் வடிவமைக்கும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2016
00:00

கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் தானே முதல் இடத்தில் இவ்வுலகில் இடம் பெற வேண்டும் என்ற உந்துதலோடு, ஜப்பான் கம்ப்யூட்டர் வல்லுநர்கள், மின்னல் வேகத்தில், அல்ல ஒலி பாயும் வேகத்தில் செயலாற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைப்பதில் முனைந்துள்ளனர். ஜப்பான் நாட்டில் இயங்கும் ‎National Institute of Advanced Industrial Science and Technology என்ற ஆய்வு மையம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. பலவகையான ஆய்வுகளுக்குத் துணையாக இருக்கக் கூடிய இந்த கம்ப்யூட்டர் வரும் 2017 முதல் செயல்படத் தொடங்கும்.
'சூப்பர் கம்ப்யூட்டர்' என நாம் பெயரிடுவது, உலகிலேயே குறைவான மின்சக்தியில், ஒலிபாயும் வேகத்தில் செயல்படும் கம்ப்யூட்டராகும். தற்போதைக்கு மிக அதிக வேகத்தில் இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டர், சீனாவிடம் உள்ளது. இதனைப் பின்னுக்குத் தள்ளும் வகையில், ஜப்பான் முயற்சியில் இறங்கியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe), தன் நாடு, ரோபோட்டிக்ஸ் என்னும் 'இயந்திர மனிதன்', மின்சக்தி தரும் பேட்டரிகள் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவியல் மற்றும் மனித வளர்ச்சிக்குத் துணை போகும் தொழில் நுட்பங்களில் முதல் இடத்தில் இருக்க வேண்டிய திட்டங்களை எடுத்துச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் எனக் கூறி வருகிறார்.
திட்டப்படி எல்லாம் சென்றால், இதனை வடிவமைக்க ஆகும் செலவு, 17.3 கோடி அமெரிக்க டாலர் (உத்தேசமாக ரூ.1176.4 கோடி) ஆக இருக்கும். இது ஒரு விநாடியில், 130 குவாட்ரில்லியன் (quadrillion) கணக்குகளைப் போடும் திறன் கொண்டதாக இருக்கும். (குவாட்ரில்லியன் என்பது ஆயிரம் ட்ரில்லியன்) அதன்படி, ஒரு விநாடியில் - 130,000,000,000,000,000 கணக்குகளுக்குப் பதில் அளிக்கும். செயற்கை நுண்ணறிவியல் திறனுடன் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் செயல்படத் தொடங்குகையில், மனித மூளை செயல் திறன் கேலிக்குரியதாக ஆகிவிடும். மருத்துவ சிகிச்சை சார்ந்த பல கோடி பதிவுகளைப் படித்து அறிந்து தீர்வுகளை நொடிப் பொழுதில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் தரும்.
கம்ப்யூட்டர் செயல்படும் வேகத்தினை petaflop என்ற அலகில் கூறுவார்கள். இங்கு Floating Point operation என்பது பற்றியும் கூற வேண்டும். ப்ளோட்டிங் பாய்ன்ட் என்பது ஓர் எண்ணின் தசம ஸ்தான எண் வரை கணக்கிடுவது. 8 ஐ இரண்டால் வகுத்தால் கிடைப்பது 4. இது ஓர் பைனரி எண்.
ஆனால், 7 ஐ 3 ஆல் வகுத்தால், அது முடிவில்லாத வகையில் தசம ஸ்தானங்களைக் கொண்டிருக்கும். 7.0 எனப்படுவது ப்ளோட்டிங் பாய்ண்ட் எண்ணாகும். கம்ப்யூட்டர் செயல்படும் வேகத்தினைக் குறிக்கப் பயன்படும் 'பெடாப்ளாப்' என்பது விநாடியில் பத்துலட்சம் கோடி ப்ளோட்டிங் பாய்ண்ட் கணக்குகளைச் செயல்படுத்தும் வேகம் ஆகும். நூறு கோடி தசம ஸ்தான எண்கள் வரை விநாடியில் கணக்கிடும் திறன் ஆகும்.
ஜப்பான் திட்டமிடும் சூப்பர் கம்ப்யூட்டர் விநாடிக்கு 130 “பெடாப்ளாப்” அளவில் கணக்கிடும் வேகத்தைக் கொண்டிருக்கும். தற்போது முதல் இடத்தில் உள்ள சீனாவின் Sunway Taihulight சூப்பர் கம்ப்யூட்டர், விநாடிக்கு 93 பெடா ப்ளாப் அளவில் கணக்கிடும் வேகத்தினைக் கொண்டதாக உள்ளது. அது மட்டுமின்றி, சீனாவின் TaihuLight சூப்பர் கம்ப்யூட்டர் 15 மெகா வாட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தும். ஜப்பான் திட்டமிடும் சூப்பர் கம்ப்யூட்டர், 3 மெகா வாட் மின்சக்தியினை மட்டுமே பயன்படுத்தும்.
புதிதாக வர இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர், ஜப்பானில் ஆய்விலும், உற்பத்தியிலும் ஈடுபடும் நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளத் தரப்படும். தற்போது செயற்கை நுண்ணறிவியல் அடிப்படையிலான திட்டங்களுக்குத் தேவையான சூப்பர் கம்ப்யூட்டரை இந்த நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகின்றன. இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டர், டோக்கியா நகரிலிருந்து வட கிழக்காக 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டோக்யோ பல்கலைக் கழகத்தின் காஷிவா (Kashiwa) வளாகத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X