வேர்ட் டிப்ஸ்....
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2016
00:00

தவறான சொற்களை அகராதியிலிருந்து நீக்க
சில வேளைகளில், வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில சொற்களை custom dictionaryயில் சேர்க்கும்படி அமைத்திடுவோம். அவ்வாறு அமைத்திடும் சொற்களை நாம் பயன்படுத்தும்போது, அவை வழக்கமான அகராதி அடிப்படையில், தவறு எனச் சுட்டிக் காட்டப்படாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. ஆனால், சில வேளைகளில், அந்த சொல்லினைத் தவறாகப் பிழையுடன் இணைத்துவிடுவோம். இது தவறு என்று அறிந்தவுடன், அதனை நீக்க விரும்புவோம். இதற்கான வழி என்ன?
வேர்ட் புரோகிராமில் Word Options தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில், Proofing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Custom Dictionaries என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு “Edit Word List” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் நீக்க விரும்பும் சொல்லை டைப் செய்து தேடவும். அல்லது வார்த்தைகள் அடங்கிய பட்டியலை ஸ்குரோல் செய்து சென்று, நீக்க வேண்டிய, தவறாகப் பிழையுடன் அமைந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Delete பட்டனில் அழுத்தவும். நீங்கள் மின் அஞ்சல் எழுத “அவுட்லுக்” பயன்படுத்துவதாக இருந்தாலும், இதே போல வழியில் சென்று, தவறான சொல்லை நீக்கலாம்.

வேர்டில் அழித்தல், நீக்குதல் மற்றும் வெட்டுதல்
வேர்ட் புரோகிராம் மற்றும் டாகுமெண்ட்கள் அமைப்பது குறித்து அறிகையில், delete, clear, and cut என்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த மூன்றும் நாம் டெக்ஸ்ட் சார்ந்து எடிட் செய்கையில் மேற்கொள்ளும் செயல்களையே குறிக்கின்றன. இவை மூன்றும், ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்த முடியும் என்றாலும், இவை குறிப்பிடும் செயல்முறைகளுக்கிடையே சிறிய அளவில் வேறுபாடுகள் உள்ளன.
Delete என்பது நம் டாகுமெண்ட்டிலிருந்து, டெக்ஸ்ட் அல்லது வேறு ஓர் அம்சத்தினை Del கீ அழுத்தி நீக்குவதாகும். இது clearing என்பதற்கு ஒப்பாகும்.
Clear என்பது நம் டாகுமெண்ட்டிலிருந்து டெக்ஸ்ட் அல்லது வேறு ஓர் அம்சத்தினை, கிளிப் போர்டில் சேவ் செய்திடாமல் நீக்குவதாகும். இந்த செயல்பாடு, Del அல்லது Backspace கீ அழுத்தி மேற்கொள்கிறோம். கீ Cut என்பது நம் டாகுமெண்ட்டிலிருந்து டெக்ஸ்ட் அல்லது வேறு ஓர் அம்சத்தினை நீக்கி அதனை கிளிப் போர்டில் சேவ் செய்வதாகும். இந்த செயல்பாட்டினை, Ctrl+X ஷார்ட்கட் கீகளை அல்லது எடிட் மெனுவிலிருந்து Cut தேர்ந்தெடுத்து மேற்கொள்கிறோம்.

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.
Ctrl+g: ஓரிடம் செல்ல.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட.
Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க
Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.
Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.
Ctrl+l : பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.
Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.
Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - newyork,யூ.எஸ்.ஏ
06-டிச-201600:08:47 IST Report Abuse
srinivasan கம்ப்யூட்டர் கேள்வி பதில் பகுதிக்கு : கீழ் கண்ட அட்டவணை போல தேதி அமைய excel -ல் என்ன செய்ய வேண்டும் Thursday, April 27, 2017 Thursday, April 27, 2017 Thursday, April 27, 2017 Thursday, April 27, 2017 Friday, April 28, 2017 Friday, April 28, 2017 Friday, April 28, 2017 Friday, April 28, 2017 Saturday, April 29, 2017 Saturday, April 29, 2017 Saturday, April 29, 2017 Saturday, April 29, 2017 நான்கு செல்களில் ஒரே தேதியும் அடுத்த செல்-ல் அடுத்த தேதியும் வரவேண்டும். இது போல் வருடம் முழுவதும் அமைக்க வேண்டும்.உதவுங்கள் ப்ளீஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X