எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2016
00:00

எக்ஸெல் தேதி உள்ளீடு
எக்ஸெல் புரோகிராமினைப் பொறுத்த வரை, தேதிகளை உள்ளீடு செய்வது என்பது, அதற்கெனத் தனியே சில வரையறைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. நாம் தேதிகளாக மாற்றப்படக் கூடிய டேட்டா எதையேனும் உள்ளீடு செய்தால், எக்ஸெல் அதனை தேதியாக எடுத்துக் கொண்டு மாற்றிக் கொள்ளும். நீங்கள் தரும் டேட்டாவினை, எண்கள் அடங்கிய தொகுதியை, ஒரு வரிசை எண்ணாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. உள்ளாக அதனை தேதி மற்றும் நேரத்தைக் குறிக்க அமைத்துக் கொள்கிறது. எடுத்துக் காட்டாக, கீழே தந்துள்ள அனைத்து டேட்டாக்களும், எக்ஸெல் தேதியாக மாற்றிக் கொள்ளும்.
12/15 - 12-15/12
15 DEC - December 15, 2016
மேலே தரப்பட்டவற்றுள், நீங்கள் முதல் எடுத்துக் காட்டினை எண்டர் செய்தால், எக்ஸெல் அதனை தேதியாக மாற்றிக் காட்டும். நீங்கள் ஆண்டினை உள்ளிடாமல் விட்டால், எக்ஸெல், நடப்பு ஆண்டினையே நீங்கள் அமைத்துள்ளதாக எடுத்துக் கொள்ளும். இந்த டேட்டாவினை உள்ளீடு செய்கையில், சாய்வு கோடுக்குப் பதிலாக, 'டேஷ்' கூடப் பயன்படுத்தலாம். இரண்டில் எதனைப் பயன்படுத்தினாலும், எக்ஸெல் நீங்கள் தேதியை அமைப்பதாகவே எடுத்துக் கொள்ளும்.
எக்ஸெல் புரோகிராமைனைப் பொறுத்தவரை, இவை ஓர் எண்ணாகவே பதியப்பட்டு வைத்துக் கொள்ளப்படுகின்றன. நீங்கள் திரையில் பார்க்கும் வடிவம், நீங்கள் அந்த செல்லினை எப்படி பார்மட் செய்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். பலவகை பார்மட்களில் இவை தோன்றும்படி செய்திடலாம்.

செல்லுக்குள் சுருங்கும் எண்கள்
எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது. எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா? இந்த வேலையை யார் பார்ப்பார்கள்? எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா? தேவையே இல்லை. கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும். செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். அதற்கான “shrink to fit” என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும். இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும். இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவை செல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்.

செல்களைக் குழுவாகக் கட்டமிட
எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl+Shift+& - அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl+Shift+_ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X