பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2016
00:00

டாஸ்க் பாரில் இத்தனை விஷயங்கள் உள்ளன என்று உங்கள் கட்டுரையைப் படித்த பின்னர் புரிந்து கொண்டேன். குறிப்பாக விண்டோஸ் 10 இயக்கத்தில் இதில் தரப்பட்டுள்ள புதுமைகள் வியப்பளிக்கின்றன. போல்டர்களை 'பின்' செய்வது, டாஸ்க் பாரின் வண்ணம், ஒளி அடர்த்தி மாற்றுவது ஆகியவை பயனுள்ள செயல்பாடுகள். இவற்றைப் பயன்படுத்துவது குறித்த விளக்கம் அனைத்தும் படிப்படியான விபரங்களுடன் அழகாகத் தரப்பட்டுள்ளன.
பேரா. விஜயராஜேஸ்வரி, தஞ்சாவூர்.

யு.சி. பிரவுசர், ஒரு பிரவுசராக மட்டும் இயங்காமல், தகவல் கோட்டையாக இருப்பதுதான் அதன் தனிச் சிறப்பு. தொடர்ந்து தான் அளிக்கும் வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வது, வாடிக்கையாளர்கள் மீது அதன் நிறுவனம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் அதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஆர். ஜெயமோகன், சிதம்பரம்.

கேள்வி ~ பதில் பகுதியில், மால்வேர் கம்ப்யூட்டரில் இறங்கியுள்ளது என்பதனை அறிந்து கொள்ள தாங்கள் தந்துள்ள வழிகள் மிகவும் பயனுள்ளவையாகவும் சிறப்பாகவும் உள்ளன. தெளிவாகவும் அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.
ஆர்.சிவமுருகன், புதுச்சேரி.

நான் யு.சி.பிரவுசரைப் பயன்படுத்துவது அதன் பன்முகத் தன்மையினால் தான். குறிப்பாக யு.சி. கிரிக்கெட் செயல்பாடு எனக்கு மிகவும் ஆர்வமூட்டும் தகவல்களைத் தந்து வருகிறது.
ஆர். இராஜராஜன், மயிலாடுதுறை.

எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், சில நேரங்களில் நமக்கு உதவியளிக்கும், புதிய வசதிகளைத் தரும் செயலிகளாக உள்ளன. ஆனால், சில வேளைகளில் அவையே பிரச்னைக்குரியவையாகவும் உள்ளன. உங்கள் கட்டுரை இந்த சூழ்நிலையத் தெளிவாக்கி, தேவையற்ற விரிவாக்க செயலிகளை எந்த அடிப்படையில் நீக்க வேண்டும் என்பதனையும் எடுத்துக் கூறியுள்ளது மிக அருமை.
என். கே. ஜனார்த்தனம், ஸ்ரீரங்கம்.

சீனாவிற்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையில் இணையப் பயனாளர்களைக் கொண்டுள்ள இந்தியாவில், அதன் ஜனத்தொகைக்கேற்ப இணையச் செயல்பாடு இல்லை என்பது உண்மை. கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த குறைபாட்டினைக் களையும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்துகையில் நாம் அவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். குறிப்பாக, பெண்களை இணையத்திற்கு எடுத்துச் சென்று, அவர்களை உலகோடு இணைக்கும் முயற்சிக்கு நாம் கூகுள் நிறுவனத்திற்கு என்றும் கடமைப் பட்டுள்ளோம்.
கே. வளவன், செயங்கொண்டம்.

இன்றைய அளவில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது குரோம் பிரவுசரே. அதன் பல்வேறு பயன்பாடுகள் குறித்தும், நம் விருப்பத்திற்கேற்ப அதன் செட்டிங்ஸ் அமைப்பது குறித்தும் நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகள், வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுப்பது போல அமைந்துள்ளது. தொடர்ந்து இது போன்ற குறிப்புகளை, ஆப்பரேட்டிங் சிஸ்டம், மின் அஞ்சல் பயன்பாடு ஆகியவற்றுக்கும் தரவும்.
ஜே. கே. செல்வராஜ், சிவகாசி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X