பேஸ்புக் தரும் 'எக்ஸ்பிரஸ் வை பி' இணைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 டிச
2016
00:00

கிராமப் புறங்களில், இலவச இணைய இணைப்பு தரும் தன் திட்டத்தின் முதல் நிலையான 'சோதனை ஓட்டத்தினை' பேஸ்புக் தொடங்கியுள்ளது. முழுமையான வெற்றி எனச் சோதனையில் தெரிய வந்தால், இதே திட்டம் இந்தியா மட்டுமின்றி, வேறு நாடுகளிலும் செயல்படுத்தப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்தியாவில், இணைய சேவை நிறுவனங்களைக் கண்காணிக்கும் 'ட்ராய்' அமைப்பு, பேஸ்புக்கின் 'Free Basics' திட்டத்திற்கு அனுமதி மறுத்தது. பேஸ்புக் இந்த திட்டத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில இணைய சேவை தரும் தளங்களை மட்டுமே இலவசமாகத் தருவதாக அறிவித்தது. இந்த வரையறையின் காரணமாக, அனைவருக்கும் சமமான இணைய சேவை கிடைக்காது என, பயனாளர்கள் அனைவரும் போர்க்கொடி தூக்கியதால், 'ட்ராய்' அமைப்பு இதற்குத் தடைவிதித்தது.
உலகின் மிக அதிக இணையப் பயனாளர்களைக் கொண்டு, இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தன் இணைய வலைப் பின்னலைக் கொண்டு செல்லலாம் என்று திட்டமிட்ட, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், இந்த தடை ஓர் ஏமாற்றத்தைத் தந்தது எனக் கூறலாம். ஆனாலும், தற்போது புதிய ஒரு திட்டத்தினை, கிராமப் புறங்களில் இன்னும் இணைய இணைப்பு கிடைக்காமல், அதனை விரும்புவோருக்குக் கொண்டு செல்ல மார்க் திட்டமிடுகிறார். “இதற்கென மொபைல் சேவை மற்றும் இணைய சேவை வழங்கி வரும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சிப்பதாக” மார்க் கூறியுள்ளார்.
பேஸ்புக் மட்டுமின்றி, கூகுள் நிறுவனமும் இந்தியாவில் இணையப் பயனாளர்களைத் தன் வட்டத்தில் கொண்டு வர முயற்சிக்கிறது. இந்த உலகில், அடுத்த நூறு கோடி இணையப் பயனாளர்களில் பெரும் பகுதியினர், இந்தியாவில் இருந்து தான் வருவார்கள் என்று இரு நிறுவனங்களும் உறுதியாக எதிர்பார்க்கின்றனர். அது உண்மையும் கூட. இவர்கள் மூலம், தங்களின் விளம்பர வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ள இந்த இரு நிறுவனங்களும் முயற்சிக்கின்றன. இந்நாள் வரை, இந்தியாவில் வாழும் மக்களில் 65% பேர் இணையத்தை இன்னும் பயன்படுத்தாதவர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் ஏற்கனவே, இந்திய ரயில்வே நிறுவனத்தின் டிஜிட்டல் நிறுவனப் பிரிவான 'ரெய்ல்டெல்' (RailTel) நிறுவனத்துடன் இணைந்து, 400 ரயில்வே ஸ்டேஷன்களில், 2018க்குள் இலவச இணைய இணைப்பினைத் தரும் திட்டத்தினை நிறைவேற்றி வருகிறது. இதுவரை 53 நிலையங்களில், இலவச இணைய இணைப்பினைத் தரும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. பேஸ்புக் நிறுவனமும், இதே போன்ற திட்டம் ஒன்றின் மூலம் இலவச இணைய சேவை தர, ரயில்வே அதிகாரிகளிடம் பேசி வருகிறது.
ஆனால், பேஸ்புக் வடிவமைத்துள்ள Express WiFi என்னும் திட்டம் முழுமையாக இலவசமாக மக்களுக்குக் கிடைக்காது. இதனைச் செயல்படுத்தும் நிறுவனத்திற்கு, பயனாளர்கள், இணைய இணைப்பு பெற, மிகக் குறைந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டியதிருக்கும். இணைய இணைப்பு தர கிராமப் புறங்களில், Hot Spot என அழைக்கப்படும் இணைப்புப் புள்ளிகள் ஏற்படுத்தப்படும். சிறிய நகரங்களில் அமைக்கப்பட்டு, பின்னர், அருகே உள்ள கிராமங்களுக்கு இவை விரிவு படுத்தப்படும். இந்தியாவெங்கும் எத்தனை Hot Spotகள் அமைக்கப்படும் என பேஸ்புக் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த இணைய இணைப்பு புள்ளிகளை (WiFi Hot Spot) அமைப்பதில் ஏற்படும் செலவுகளில் பங்கெடுத்துக் கொண்டு, அதற்கான தொழில்நுட்பத்தினை பேஸ்புக் வழங்கும். இவற்றை இயக்குவதில் ஏற்படும் செலவுகளிலும் பங்கெடுக்கும்.
இணைய சேவையினை வழங்கும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, பேஸ்புக் நிறுவனம் Express Wi-Fi திட்டத்தினை சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறது என பேஸ்புக் நிறுவனப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இதனைப் பயன்படுத்த விரும்பும் பயனாளர்கள், தங்களுக்குக் கட்டுபடியாகும் கட்டணத்தில், வேகமாக இணைப்பு தரும் இணைய சேவைத் திட்டத்தினைப் பெறலாம் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
இதே போல, கூகுள் நிறுவனமும், ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக, உணவு விடுதிகள், வர்த்தக வளாகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் தன் இலவச வை பி இணைய இணைப்பினைத் தரும் வகையில் தன் திட்டத்தினை விரிவு படுத்த முயற்சிக்கிறது. எங்கெல்லாம், கம்பி இணைப்பு மூலம் தற்போது இணைய இணைப்பு சாத்தியமோ, அங்கிருந்து வை பி இணைப்பினைத் தர கூகுள் முயற்சிக்கிறது. ஆனால், இது ரயில் நிலையங்களில் தரப்படுவதைப் போல, முழுமையாகக் கட்டணம் இன்றி இருக்காது. குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதனை கூகுள் நிறுவனமும் இணைய இணைப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பினைக் கொண்டுள்ள இடத்தின் உரிமையாளரும் பகிர்ந்து கொள்வார்கள்.
கூகுள் நிறுவனம், இணைய இணைப்பு இல்லாத, தொலை தூர இடங்களுக்கு இணைப்பு தர, ஏற்கனவே, Project Loon என்னும் திட்டத்தினை சில நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. விரைவில் இந்தியாவிலும் இது தொடங்கப்படும்.
கூகுள் நிறுவனம், Google Fi என்னும் திட்டம் ஒன்றையும் மேற்கொள்கிறது. இது பேஸ்புக் நிறுவனத்தின் Express WiFi திட்டத்திலிருந்து மாறுபட்டது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது. Google Fi திட்டப் பயனாளர்கள், நேரடியாக கூகுள் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் கூட்டு நிறுவனங்களான, இணைய சேவை நிறுவனங்களிடமிருந்து இணைப்பினைப் பெற்று பயன்படுத்துவார்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X