பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 டிச
2016
00:00

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தொடர்ந்து உலகில் இணைய இணைப்பு இல்லாதவர்களை இணைக்க எடுத்து வரும் முயற்சிகள், வர்த்தக ரீதியாக இருந்தாலும், மனித முன்னேற்றத்திற்கான வெற்றிப் படிகளைக் கடக்க நிச்சயம் உதவும். அந்நிறுவனங்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது நம் கடமை.
கே. எல். நாராயணன், தஞ்சாவூர்.

இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கூட வேர்ட் அடையாளம் காட்டுமா என்ற வியப்பு உங்களின் டிப்ஸைப் படிக்கத் தொடங்கிய போது எனக்கு ஏற்பட்டது. வேர்ட் செயலியை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தும் இந்த வசதி குறித்து அறியாமல் இருந்துள்ளேன். பயனுள்ள டிப்ஸ் அளித்தமைக்கு பாராட்டுகளும் நன்றியும்
ஜெ. அகமது, காரைக்கால்.

விண்டோஸ் டிபண்டர் உருவாகி அதன் இன்றைய நிலை வரை தெளிவாக அதன் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து தந்திருப்பது, அதனைப் புரிந்து கொள்ள உதவியது. சிறப்பான, சுருக்கமான கட்டுரை. டிபண்டரின் செயல்பாடுகளை இயக்கி வைத்து
விட்டேன்.
என். சுந்தர மூர்த்தி, சென்னை.

வாட்ஸ் அப் தன் செயலிகளை இயக்க, புதிய போன்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தொழில் நுட்ப ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால், பழைய போன்கள் இயங்கிக் கொண்டிருக்கையில் புதிய போன்களை வாங்க எத்தனை பேர் இந்தியாவில் முன்வருவார்கள். எனவே, வாட்ஸ் அப் நிறுவனம், இதனையும் கருத்தில் கொண்டு, ஓரளவிற்குக் குறைந்த வசதிகளுடன் கூடிய வாட்ஸ் அப் செயல்பாட்டினைத் தரலாம். இதனை நீங்கள் உங்கள் கட்டுரையில் வலியுறுத்தி இருக்க வேண்டும்.
கா. நவநீதம், திருமுல்லைவாயில்.

“உலக நாடுகளின் நேரம் அமைக்க” என்ற கட்டுரையில் குறிப்பிட்டது போல, நமக்கு இணையத்தின் உதவியால், உலகெங்கும் நண்பர்கள் உள்ளனர். நம் உறவுகளும் வாழ்கின்றனர். சரியான நேரத்தில் தரப்படும் உதவியாய் இந்தக் கட்டுரை தரப்பட்டுள்ளது. நான் மூன்று நாடுகளின் நேரம் காட்டும் வகையில் செட் அப் செய்து கொண்டேன். மிக்க நன்றி.
என்.பத்மாவதி சிதம்பரம், காரைக்குடி.

நீங்கள் குறிப்பிட்டபடி, சிஸ்டம் இன்பர்மேஷன் அறிக்கை ஒன்றினைத் தயாரித்து பத்திரப்படுத்திவிட்டேன். இப்போது சற்று நிம்மதியாக உள்ளது. ஏனென்றால், எந்நேரம் வேண்டுமானாலும், கம்ப்யூட்டர் சிக்கல் கொடுக்கும் என்ற பயம் இருந்தது. சிக்கல் கொடுத்தால், டெக்னீஷியன் கேள்விகளுக்கு இந்த அறிக்கை பதிலாக அமையும் என்பது தற்போதைய நிம்மதி
எஸ். சித்தார்த்தன், கோவை.

அதிக எண்ணிக்கையில் பைல்கள் உள்ள நிலை, தேவையற்ற பைல்கள் உள்ள நிலை குறித்தும், அவற்றை நீக்க வேண்டிய அவசியம் குறித்தும், அதற்கான வழிகளையும், கேள்வி பதில் பகுதியில் கொடுத்தது சுருக்கமாகவும், விளக்கமாகவும் உள்ளது. வழி காட்டுதலைப் பயன்படுத்திக் கொண்டேன்.
பி. ஜோசப் அகஸ்டின், தாவண்கரே.

“டெய்லி ரைட்டிங் டிப்ஸ்” இணைய தளத்தின் அனைத்து பிரிவுகளையும் பார்த்துப் படித்து புரிந்து கொண்டேன். இன்றைய கால கட்டத்தில் மிக மிக உதவியாக உள்ளது இந்த இணைய தளம். என் அலுவலகப் பணிக்கு மிகவும் உதவுகிறது. என்னுடைய ட்ராப்ட் கடிதங்கள், திட்ட வரைவுகளைப் பிழை இல்லாமல், நல்ல ஸ்டைலில் எழுத இந்தத் தளம் உதவுகிறது. சுட்டிக் காட்டிய தங்கள் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி.
என். சுரேஷ் குமார், திருநெல்வேலி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X