லெனோவா கே 6 நோட் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 டிச
2016
00:00

அதிக பட்ச விலையாக ரூ. 13,999 எனக் குறிப்பிட்டு, லெனோவா நிறுவனம் தன் Lenovo K6 Note ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு நானோ சிம்களைப் பயன்படுத்தலாம். ஒன்றில் சிம் அல்லது மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தலாம். இதன் திரை 5.5 அங்குல அளவில், 1920 x 1080 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. முழுமையான ஹை டெபனிஷன் டிஸ்பிளே தருகிறது.
ஆக்டா கோர் ஸ்நாப் ட்ரேகன் 430 ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இது 64 பிட் வேகத்தில் இயங்கும் ப்ராசசர். இதனுடன் Adreno 505 GPU இணைந்து இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 6.0.1 (Marshmallow). விரல் ரேகை தொடு உணர் தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் பேட்டரி மிகக் கூடுதல் திறன் கொண்டதாக, 4000 mAh திறனுடன் உள்ளது. இதில் TheaterMax தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
இந்த தொழில் நுட்பம் விர்ச்சுவல் ரீடர் ஹெட்செட் பயன்படுத்துவோருக்கு நல்ல அனுபவத்தினைத் தரும். இத்துடன் ANT VR ஹெட்செட் ரூ. 1,299க்குக் கிடைக்கிறது. இன்னொரு ஹெட்செட் ரூ. 2,800க்குக் கிடைக்கிறது.
இதில் இரண்டு மாடல்கள் வந்துள்ளன. ஒன்றின் ராம் நினைவகம் 3 ஜி.பி. ஸ்டோரேஜ் 32 ஜி.பி. மற்றதில் இவை 4 ஜி.பி. / 64 ஜி.பி. என உள்ளன.
பின்புறமாக உள்ள கேமரா 16 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 8 எம்.பி. திறனுடனும் இயங்குகின்றன. 3.5 ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 400 எம்.ஏ.எச். திறனுடன் தரப்பட்டுள்ளது.
மூன்று வண்ணங்களில் கிடைக்கும் லெனோவா கே 6 நோட் 3 ஜி.பி. மாடல் ரூ. 13,999 மற்றும் 4 ஜி.பி. ராம் கொண்ட மாடல் ரூ. 15,499 என அதிகபட்ச விலையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து மொபைல் விற்பனை மையங்களில் இதனை வாங்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X