மோட்டாரோலா தரும் ஆண்ட்ராய்ட் மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2016
00:00

மோட்டாரோலா நிறுவனம், அண்மையில் பல சிறப்பு வசதிகளுடனும் அம்சங்களுடனும் தன் ஸ்மார்ட் போன் ஒன்றை, Moto M என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் ராம் மெமரி 4 ஜி.பி. இருப்பது இதன் சிறப்பாகும். உலோகத்தால் ஆன தகடுகள் வெளிப்புறமாக அமைய, இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 15,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் திரை 5.5 அங்குல அளவிலானது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1920 x 1080 பிக்ஸெல்கள். இதில் ஹை டெபனிஷன் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. இதன் ப்ராசசர் ஆக்டா கோர் MediaTek Helio P15 ப்ராசசராகும். 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. Mali T860MP2 GPU ப்ராசசருடன் இணைந்து இயங்குகிறது. இதன் 32 ஜி.பி. கொள்ளளவு கொண்ட போனில் 3 ஜி.பி. ராம் நினைவகமும், 64 ஜி.பி. கொள்ளளவு கொண்ட மாடலில், 4 ஜி.பி. ராம் நினைவகமும் தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம்.
இந்த ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நானோ சிம்களை இதில் இயக்கலாம். ஒரு நானோ சிஸ்டம் பொருத்தப்படும் இடத்தில் மைக்ரோ எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்தலாம்.
டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த முன்புறக் கேமரா 16 எம்.பி. திறனுடன் தரப்பட்டுள்ளது. செல்பி முன்புறக் கேமரா, 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. விரல் ரேகை தொடு உணர் தொழில் நுட்பம் இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இந்த போனின் பரிமாணம் 151.35×75.35×7.85 மிமீ. இதன் எடை 163 கிராம்.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. சி வகை யு.எஸ்.பி. தரப்பட்டுள்ளது.
இதன் பேட்டரி 3050 mAh திறன் கொண்டதாக உள்ளது. தங்கம் மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கின்றது.
இதன் 32 ஜி.பி. மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ. 15,999. 64 ஜி.பி. மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ. 17,999. இவை ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்குவோருக்கு விலையில் ரூ.1000 தள்ளுபடி செய்யப்படுகிறது. பழைய மொபைல் போன்களைக் கொடுத்து, விலையில் மேலும் ரூ.2,000 தள்ளுபடி பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X