குழந்தைகளுக்கான இணைய தளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2016
00:00

இன்றைய கால கட்டத்தில், குழந்தைகளை ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்களிலிருந்து விலக்கி வைக்க முடியவில்லை. பெற்றோர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகையில், குழந்தைகள், ஒன்று அல்லது ஒன்றரை வயது முதல், போன்களில் தோன்றும் வண்ணக் கோலங்களினால் கவரப்படுகிறார்கள். அவற்றைக் கேட்டு அடம் பிடிக்கிறார்கள். பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை அமைதிப்படுத்த போன்களை அவர்கள் கைகளில் கொடுத்துவிடுகின்றனர். குழந்தைகள் இரண்டு வயதை அடைந்தவுடன், அவர்களுக்கு குழந்தைகளுக்கான பாடல்கள், பாடல்கள் கொண்ட விடியோ காட்சிகளை, போனில் இயக்கிக் காட்டுகின்றனர். இந்தப் பழக்கம் தொடர்ந்து, மூன்று மற்றும் நான்கு வயது சிறுவர் சிறுமியர், தாங்களாகவே இந்த விடியோ உள்ள இணைய தளங்களை இயக்கத் தொடங்குகின்றனர். எல்லாமே, ஐகான் எனப்படும் குறும்பட அடிப்படையில் உள்ளதால், சிறுவர்களுக்கு, இந்த இணைய தளங்களைத் தேடி இயக்குவது எளிதாகவே உள்ளது. இருப்பினும், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்களிலிருந்து நாம் அவர்களைக் காப்பாற்ற வேண்டியதுள்ளது. முற்றிலும் குழந்தைகள் நலன் கருதி உள்ள இணைய தளங்களை மட்டும் அவர்களுக்குக் காட்ட வேண்டியதுள்ளது. இந்த இலக்குடன், இணையத்தில் வந்தபோது, ஓர் இணைய தளம் கண்ணில் பட்டது. http://abckidsinc.com/videos-for-kids/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் சிறுவர்களுக்குத் தேவையான கல்வியைத் தருவதிலும், பெற்றோர்களுக்கு இது குறித்த ஆலோசனை தருவதிலும் இந்த தளம் முழுமையாகச் செயல்படுவது தெரிந்தது.
இந்த தளம் சென்றவுடன், ஆங்கில எழுத்தறிவினைக் கற்றுத் தரும் விடியோக்கள் இருப்பதைக் கண்டு இயக்கிக் காட்டலாம். அடுத்து எண்களைக் கற்றுக் கொடுக்கும் விடியோக்கள் மற்றும் அறிவியல் கற்றுக் கொடுக்கும் விடியோக்கள் உள்ளன. இவற்றை இந்த தளத்தில் வைத்து இயக்கலாம். அல்லது, யு ட்யூப் தள பட்டனை அழுத்தி, யு ட்யூப் தளத்திலும் காணலாம். இந்த விடியோ படங்களைப் பார்க்கையில் Subscribe பட்டனை அழுத்தினால், இது குறித்த தகவல் உங்களுக்குத் தொடர்ந்து அனுப்பப்படும்.
குழந்தைகளுக்கான சிறந்த படங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? என்பது முதல், குழந்தைகள் வளர்ப்பில் நாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்திடும் கட்டுரைகளுக்கான லிங்க்குகளும் இந்த தளத்தில் தரப்பட்டுள்ளன. இந்தத் தளத்தில் கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே விடியோ படங்களைப் பார்க்கலாம். சில விடியோ படங்களில், அவற்றிற்கு முன்னால், அதில் சில வர்த்தக விளம்பரப் படங்கள் காட்டப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X