எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2016
00:00

செல்களைச் சுற்றி கோடுகள்
நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. நீங்கள் பார்டர் அமைக்க விரும்பும் செல் அல்லது செல்வரிசையை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவிலிருந்து Cells என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இதில் Border டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. டயலாக் பாக்ஸில், Border என்னும் பிரிவில், நீங்கள் எந்த இடத்தில் பார்டர் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Outline என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், செல் முழுவதுமாக பார்டர் அமைக்கப்படும்.
5. Style பிரிவில், எந்தவிதக் கோட்டில் பார்டர் அமைக்கப் பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
இன்னொரு வழியும் உள்ளது. டூல்பாரில் உள்ள Borders என்னும் டூலைப் பயன்படுத்தியும் பார்டர் கோடுகளை அமைக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி, இந்த டூலைப் பயன்படுத்த வேண்டும்.
1. பார்டர் அமைக்கப்பட வேண்டிய செல் அல்லது செல் வரிசையத் தேர்ந்தெடுக்கவும்.
2. நீங்கள் அமைக்க விரும்பும் பார்டர் வகை பார்டர்ஸ் டூலில் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். இத்துடன் உங்கள் வேலை முடிந்துவிடும். இல்லை எனில், இங்கு குறிக்கப்பட்டுள்ளபடி தொடரவும்.
3. பார்டர்ஸ் டூலின் வலது புறம் உள்ள கீழ் நோக்கிய சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்திடவும். பலவகையான பார்டர் வகைக் கோடுகள் அடங்கிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் பார்டர் வரியைத் தேர்ந்தெடுக்கவும். அவுட்லைன் பார்டரைப் பயன்படுத்தி, நீங்கள் அமைக்க விரும்பும் செல் வரிசையைத் தேர்ந்தெடுக்கலாம். இது பார்டர் கட்டத்தில், கீழாக வலதுபுறம் கிடைக்கும்.
பார்டர் கோடுகளை செல் அல்லது செல் வரிசைகளில் அமைக்க, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தாலும், இவற்றை நீக்க விரும்பினால், மிக எளிய வழி ஒன்று நமக்குக் கிடைக்கிறது. கண்ட்ரோல் கீயுடன், அண்டர் ஸ்கோர் கீயை (underscore) அழுத்த வேண்டும் (Ctrl+_) அமைக்கையில் ஷிப்ட் கீயையும் அழுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும்). செல்களில் உள்ள பார்மட் கூறுகளில், பார்டர்கள் மட்டுமே, இந்தக் கட்டளையால் நீக்கப்படும். மற்றவை அப்படியே இருக்கும்.

எக்ஸெல்: வரிசைகள் எத்தனை?
எக்ஸெல் தொகுப்பில் வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில் எத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக மாணவர்களின் மதிப்பெண்களை வரிசையாக என்டர் செய்கையில், அல்லது செய்த பின் எத்தனை பேருக்கு என்டர் செய்திருக்கிறோம் என்று பார்க்க விரும்புகையில் என்ன செய்கிறோம்?
மானிட்டரில் விரலை வைத்து ஸ்கிரீனைத் தொட்டுப் பார்த்து எண்ணுவதா? அல்லது ஒவ்வொரு வரிசையாகக் கர்சரைக் கொண்டு சென்று 1,2,3 என்று கணக்கிடுவதா? அதிக எண்ணிக்கையில் இருந்தால் நிச்சயம் இவை இரண்டும் நமக்கு சரியாக வராது. எக்ஸெல் இதற்கென்றே ஒரு வசதியைக் கொண்டுள்ளது. எக்ஸெல் தொகுப்பே உங்களுக்கு நீங்கள் செலக்ட் செய்திடும் வரிசைகளை எண்ணிச் சொல்லும். அதுவும் நீங்கள் செல்களை ஹைலைட் செய்திடும்போதே அவை எண்ணப்பட்டு எண்ணிக்கை என்னவென்று உங்களுக்குச் சொல்லப்படும். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வசதி உங்கள் கண் முன் எப்போதும் உள்ளது. ஆனால் நீங்கள் அதனை இது வரை உற்று நோக்கவில்லை. அதனை இங்கு பார்ப்போம்.
அடுத்த முறை நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திடுகையில் படுக்கை வரிசைகளுக்கான எழுத்துக்கள் தோன்றும் இடத்திற்கு மேலாகப் பாருங்கள். அல்லது இறுதியாக ஹைலைட் ஆன செல்லுக்கு அருகாமையில் மேலாகப் பாருங்கள். எத்தனை காலம் எனக் காட்டப்படும். எடுத்துக் காட்டாக நான்கு காலம் என்றால் 4C எனக் காட்டப்படும். காலம் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதே போல ரோ எனப்படும் படுக்கை வரிசை செலக்ட் ஆகும்போது 4R எனக் காட்டப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X