2016: 07 குறைந்தது 10 உயர்ந்தது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களை, விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கு மாறிடச் சொல்லிப் பல வழிகளில் அறிவுறுத்தி வந்தது. தாங்களாகவோ, அல்லது மைக்ரோசாப்ட் வற்புறுத்தலுக்காகவோ, பயனாளர்கள் பலர் விண்டோஸ் 10க்குக் கொஞ்சம் கொஞ்சமாக, 2016 ஆம் ஆண்டில் மாறத் தொடங்கினர். 2015 நவம்பர் மாதம் முதல் 2016 நவம்பர் வரையிலான காலத்தில், விண்டோஸ் 7, ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில், தன் 10% இடத்தை இழந்தது. இந்த இழப்பிற்குக் காரணமானவர்கள் அனைவரும் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறினார்கள் என்பது கூடுதல் தகவல்.
'நெட்மார்க்கட் ஷேர்' என்னும் ஆய்வு அமைப்பின் இணையதளத்தில் தரப்பட்டுள்ள தகவலின்படி, 2015 நவம்பரில், விண்டோஸ் 7, 56.11% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், நவம்பர் 2016ல், இது 47.17% ஆகக் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு நவம்பரில், விண்டோஸ் 10, 9% கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருந்தது. 2016 நவம்பரில் இது 23.72% ஆக உயர்ந்திருப்பது, முதலில் தயங்கியும் எதிர்ப்பு தெரிவித்த பலர், நன்கு கவனித்த பின்னர், நம்பிக்கையோடு விண்டோஸ் 10னை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.
இந்த மாற்றத்தினை, விண்டோஸ் 7 பயனாளர்கள் தெரிவித்த கூற்றுகளின் பின்னணியில் பார்க்க வேண்டும். பலர், தாங்கள் விண்டோஸ் 10க்கு மாறமாட்டோம் என உறுதியாகத் தெரிவித்தனர். விண்டோஸ் 10 நிலையாக இயங்காது என்று குற்றச் சாட்டினையும் முன்வைத்தனர். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தினை வைத்துப் பார்க்கையில், காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது.
ஒவ்வொரு முறை தன் புதிய விண்டோஸ் இயக்க முறைமையை வெளியிட்ட பின்னர், மைக்ரோசாப்ட் தொடர்ந்து, அதன் புதிய சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளச் சொல்லி பல புள்ளி விபரங்களையும் தகவல்களையும் முன் வைக்கும். முதலில் எதிர்த்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பின்னர் மாற்றிக் கொள்வார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறுமையான அணுகுமுறைக்கு வழக்கமாகக் கிடைக்கும் பரிசு இது என இப்பிரிவில் ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தினால், பாதிப்பு அடைந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7 மட்டுமல்ல. 2016ல், வேகமாகத் தன் இடத்தை இழந்த இன்னொரு சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி ஆகும். சென்ற ஆண்டு நவம்பரில், 10.59% இடத்தைக் கொண்டிருந்த விண்டோஸ் எக்ஸ்பி, சென்ற நவம்பரில் 8.63% இடத்தை மட்டுமே கொண்டிருந்தது. இதிலிருந்து இன்னொரு ஆர்வமூட்டும் தகவலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விண்டோஸ் 7 பயன்படுத்தியவர்கள் தான் அதிகமாக, விண்டோஸ் 10க்கு மாறும் எண்ணத்தைக் கொண்டிருந்திருக்கின்றனர். விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள், தொடர்ந்து தங்கள் பழைய பிரியமான விண்டோஸ் எக்ஸ்பியையே பயன்படுத்தி வருகின்றனர்.
2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10ன் புதிய பதிப்பு ஒன்றைக் கொண்டு மேம்படுத்த உள்ளது. இந்த அப்டேட் “Windows 10 Creators Update” என அழைக்கப்படுகிறது. இது பல்வேறு புதிய வசதிகளை, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இணைக்க உள்ளது. உறுதியாக முப்பரிமாணக் காட்சி தரப்படும். அடுத்தாக, புதிய பாதுகாப்பு வளையம் ஒன்று தரப்படும். தற்போதைய “விண்டோஸ் டிபண்டர்” செயலியின் திறன் கூட்டப்படும். இதற்கு ATP (advanced threat protocol) என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கென மைக்ரோசாப்ட் நிறுவனம் FireEye என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதனுடைய, iSIGHT தொழில் நுட்பம் மூலம், புதிய பாதுகாப்பு வழிகள் கிடைக்க இருக்கின்றன. புதிதாக தாக்கக் கூடிய மால்வேர் செயலிகளை இந்த தொழில் நுட்பம் கண்டறியக் கூடியதாக இருக்கும். இதுவரை கண்டறிவதில் சிக்கல்களை ஏற்படுத்திய வைரஸ்களுக்கு எதிரான புதிய பாதுகாப்பு வளையத்தை இது ஏற்படுத்தித் தரும்.
இந்த “Windows 10 Creators Update”, தகவல் தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு, வர்த்தக நிர்வாகத்திற்கு விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்களுக்கு “simplified IT” என்னும் சூழ்நிலையைத்தர இருக்கிறது. இதன் மூலம், சிஸ்டத்தினை நிர்வகிப்பவர்கள், பைல்களைக்குப் பாதுகாப்பு தருவதிலும், பயனாளர்களுக்குக் கூடுதல் திறன் தருவதிலும் பல புதிய உத்திகள் தரப்படும்.
இந்த அப்டேட் எப்படியும், 2017ன் முதல் அரையாண்டில் பயனாளர்களுக்கு வழங்கப்படும். இது, விண்டோஸ் 10 பயனாளர்களின் எண்ணிக்கையை இன்னும் உயர்த்தும். இதன் மூலம், இன்னும் ஓராண்டுக்குள், விண்டோஸ் 7 பயன்பாட்டினை முடிவுக்குக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X