பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
00:00

“எதிர்காலத் தொழில் நுட்பம்” என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள விஷயங்களில் சில நம்ப முடியாதவையாக இருந்தாலும், இன்றைய அறிவியல் வளர்ச்சியில் சாத்தியமே. இன்றுள்ள சில சாதனங்களை யாருமே எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் பலவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். எனவே, உடலின் உள்ளாக வைத்துப் பயன்படுத்தும் மொபைல் போன் வருவது நிச்சயம் சாத்தியமே.
பேரா. சி.ஆர். மோகனரங்கம், மதுரை.

இணையம் அடிப்படை உரிமை, அனைவருக்கும் தங்கள் டேட்டாவினைச் சேமித்து வைக்க இலவச இடம், சட்டை முதற்கொண்டு அனைத்திலும் சென்சார்கள், அனைத்தும் இணையத்தின் கட்டுப்பாட்டில், என நாளைய உலகின் அதிசயங்கள், அல்ல நடைமுறைச் சாத்தியங்கள், தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. கட்டுரை ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
ஆர். லஷ்மி தேவி. பெங்களூரு.

வாட்ஸ் அப் சுருக்கு விசைகள் என என்ன இருக்கப் போகிறது என்ற கேள்விக் குறியுடன் கட்டுரையை வாசித்தேன். பின்னர், அனைத்தும் நமக்கு விரைவான இயக்கத்தினைத் தருகின்றன என உணர்ந்து கொண்டு, என் மொபைல் போனிலும் அமைத்தேன். நாம் அடிக்கடி தகவல் பரிமாறிக் கொள்ளும் நபரின் தொடர்பினைச் சுருக்கமாக, ஒரு ஐகானாக திரையில் வைக்கலாம் என்பது அரிய ஒரு தகவல். நன்றி.
கா. உலகநாதன், திருச்சி.

வைபர் செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தல்கள் குறித்த கட்டுரையில் இன்னும் கூடுதலான தகவல்களை எதிர்பார்த்தேன். இன்று, இந்தியாவில் இதன் பயனாளர்கள் மிக அதிகம். எனவே, இது குறித்து பயனுள்ள தகவல்கள் அடங்கிய கட்டுரையை அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.
என். சுப்ரமணியன், திண்டுக்கல்.

விண்டோஸ் டிபண்டர் செயலி நம் பாதுகாப்பிற்குத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மேம்படுத்தலுக்குப் பின்னர், இந்த செயலி, மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போது இதனை முடக்கி வைப்பதற்கான வழிகளையும் காட்டியுள்ளீர்கள். வேறுபடும் வாசகர்கள் இரு பிரிவினருக்கும் அவர்கள் விரும்பும் தகவல்களைத் தந்துள்ளமைக்குப் பாராட்டுகள்.
ஏ. எபனேசர். காரைக்கால்.

குழந்தைகளுக்கான இணைய தளம் என நீங்கள் சுட்டிக் காட்டியதை, என் மகளுக்குக் காட்டினேன். தொடர்ந்து அவற்றை இயக்கித் தருமாறு கேட்டு பார்க்க விரும்புகிறாள். இது போன்ற பயனுள்ள குழந்தைகளுக்கான தளங்கள் குறித்து நிறைய தகவல் தரவும்.
எஸ். மாணிக்கம், திசையன்விளை.

இனிமேல், பெரிய அளவில் இடம் பிடிக்கும் கம்ப்யூட்டர்களுக்கு இடமில்லை. மொபைல் போன், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகிய மூன்றும் இணைந்த சிறிய சாதனம் ஒன்றினை எச்.பி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது போல அனைத்தும் இணைந்த சாதனங்கள் இனி வரும் வாய்ப்புகள் உள்ளன. இதனை 'எதிர்காலத் தொழில் நுட்பம்' என்ற உங்கள் கட்டுரையில் எதிர்பார்த்தேன். அது குறித்து விளக்கமாக எழுதவும்.
எஸ்.டேவிட் துரைராஜ், நாகை.

ஆப்பிள் நிறுவனமும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப, சில நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்களின் தேவைகளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு, மொபைல் போன்களை வெளியிட்டால் தான், மக்கள் அதன் தொழில் நுட்பத்திறமை குறித்து தெரிந்து கொள்வார்கள். உங்கள் கட்டுரையும் இதனை வலியுறுத்தியுள்ளது. மிக்க நன்றி.
கே. எஸ். சுகுமாறன். கோவை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X