மொபைல் போன் சந்தைச் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
00:00

சென்ற வாரம் இந்தியாவில் தன் ஒன் பிளஸ் 3 ட்டி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்த ஒன் பிளஸ் நிறுவனம், இங்கு தன் போன்களை வர்த்தக இணைய தளங்கள் வழியாக மட்டும் விற்பனை செய்திடுவதைத் தொடர முடிவு செய்துள்ளது. இதன் போட்டி நிறுவனங்களான, லி எக்கோ மற்றும் ஸியோமி நிறுவனங்களின் போன்கள், மொபைல் போன் விற்பனை கடைகளிலும் கிடைக்கும்போது, இந்த முடிவினை ஒன் பிளஸ் எடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பான நகெட் 7.0, முதலில் கூகுள் நிறுவனப் போன்களுக்கு மட்டுமே தரப்பட்டது. பின்னர் படிப்படியாக மற்ற போன்களில் கிடைத்து வருகிறது. தற்போது பல நிறுவனப் போன்களில், அப்டேட் முறையில் நகெட் சிஸ்டம் தரப்படுகிறது. மோட்டோ ஜி, எக்ஸ் மற்றும் இஸட் வரிசை போன்கள், சோனி எக்ஸ்பீரியா இஸட் மற்றும் எக்ஸ் வரிசை போன்கள், எச்.டி.சி.யின் ஒன் ஏ 9, எம் 9 மற்றும் எச்.டி.சி.10 ஆகிய மாடல்கள், ஒன் பிளஸ் 3, எல்.ஜி. ஜி5, சாம்சங் காலக்ஸி எஸ் 7, எஸ் 6 மற்றும் நோட் 5, ஹூவே நிறுவனத்தின் மே 8 மற்றும் பி9 மாடல்கள் ஆகிய ஸ்மார்ட் போன்களில் இந்த அப்டேட் கிடைக்கிறது.
ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்களின் அறிவிப்பினை அடுத்து, வோடபோன் நிறுவனமும் அளவற்ற அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.) தரும் திட்டத்தினை தன் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தந்துள்ளது. ரூ. 144 செலுத்தும் திட்டத்தில், 300 எம்.பி. டேட்டாவுடன் வோடபோன் வாடிக்கையாளர்களுக்குள் மட்டும் பேசும் வசதி கிடைக்கிறது. ரூ. 344 செலுத்தினால், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் பேசலாம்.
சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி 7 ஸ்மார்ட் போனில் புதிய மாடல் ஒன்றைக் கொண்டு வருகிறது. இது Black Pearl மாடலாக இருக்கும். பளபளப்பான பூச்சுடன் அமையும். காலக்ஸி 7 மாடல் போனின் ஏழாவது வண்ணம் இது. இது 128 ஜி.பி. மாடலாக மட்டுமே வெளியிடப்படும். குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே வெளியிடப்படும்.
சீனாவிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள அறிக்கை ஒன்றில், 2017 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம், Ferrari என்ற பெயரில், பார்டர் இல்லாத OLED டிஸ்பிளே காட்டும் திரையுடன் ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிடும் எனத் தெரிகிறது. இதில் வயர்லெஸ் சார்ஜிங், கண்களுக்குப் புலப்படாத ஹோம் பட்டன் மற்றும் கிளாஸ் சாண்ட்விச் அமைப்பும் இருக்கும். இந்த மாடல் போனுடன் இணைந்து, ஐபோன் 7 எஸ், ஐபோன் 7 எஸ் ப்ளஸ் என்ற மாடல்களும் வெளியிடப்படலாம்.
இந்த பெராரி ஐபோனில், உள் அமைப்பிலும் மாற்றம் இருக்கும். உள்ளாக அமையும் லாஜிக் போர்ட் இரண்டு பிரிவாக அமைக்கப்படும். ஒரு பிரிவில் A11 ப்ராசசர் மற்றும் NAND ப்ளாஷ் சம்பந்தப்பட்டவை அமைக்கப்படும். இன்னொரு பிரிவில், வை பி மற்றும் செல்போன் சிம் சார்ந்தவை இருக்கும். இரண்டும் வளைந்து கொடுக்கக் கூடிய கேபிள் ஒன்றால் இணைக்கப்படும். இந்த அமைப்பிற்கு இடம் வேண்டி, சிம் ட்ரேயை போனின் அடிப்பாகத்திற்கு ஆப்பிள் கொண்டு செல்லலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது தற்போது விற்பனையில் உள்ள ஐபேட் ப்ரோவில் உள்ளதைப் போல இருக்கும்.
சென்ற வாரம், 'சூப்பர் மரையோ' விளையாட்டினை, ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் தரவிறக்கம் செய்து விளையாட, அதனை வடிவமைத்து வழங்கும் நின்டென்டோ நிறுவனம் வெளியிட்டது. வெளியிடப்பட்டு நான்கே நாட்களில் 4 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 140 நாடுகளில் இது தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிகம் தரவிறக்கப்படும் விளையாட்டுகளில் முதல் பத்து இடத்தில் இது இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலும் இதனைத் தரவிறக்கம் செய்திடலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X