வேர்ட் பைல் வகைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
00:00

டாகுமெண்ட் உருவாக்கம் என்றாலே, கம்ப்யூட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பைச் சேர்ந்த ஆபீஸ் புரோகிராம் மட்டுமே. பெரும்பாலான பயனாளர்கள், இந்த செயலியில் உருவாக்கப்படும் ஆவணங்களை .doc பார்மட்டிலேயே சேவ் செய்து பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும், இதில் இன்னும் சில பார்மட் வகைகள் உள்ளன. இது குறித்து வாசகர்கள் பலர் தொடர்ந்து கேள்விகள் கேட்டு வருகின்றனர். பல்வேறுபட்ட வகை பார்மட்கள் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும் சந்தேகங்களை கேட்டுள்ளனர். தொடர்ந்து வரும் இந்தக் கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், ஏற்கனவே ஒரு கட்டுரையில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.
வேர்ட் டாகுமெண்ட்: வேர்ட் தன் கோப்புகளை .docx பைல்களாக சேவ் செய்திடும். மாறா நிலையில், வேர்ட் 2007 மற்றும் அதன் பின்னர் வந்த பதிப்புகள், இந்த வகையில் தான் டாகுமெண்ட்களை சேவ் செய்திடும். .docx பைல்கள், டெக்ஸ்ட் தவிர, ஸ்டைல், ஆப்ஜெக்ட், ஸ்டைல் பார்மட் மற்றும் இமேஜஸ் ஆகியவையும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தனித்தனியான அம்சங்கள் அனைத்தும், ஒரே கோப்பாக ஒருங்கிணைக்கப் பட்டிருக்கும்.
மேக்ரோ இணைந்த டாகுமெண்ட்: இந்த வகை பைல்கள் .docm என்ற துணைப் பெயரினைக் கொண்டிருக்கும். இந்த பைல் டாகுமெண்ட்களில் மேக்ரோக்கள் வடிவமைக்கப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும். மேக்ரோ என்பவை, சில செயல்பாடுகளை மேற்கொள்ள எழுதப்பட்ட கட்டளை வாக்கியங்கள் கொண்ட ஒரு தொகுப்பாகும். எடுத்துக் காட்டாக, ஒரு மேக்ரோ தொகுப்பு மூலம், ஒரே ஒரு கீயை அழுத்துவதன் மூலம், டாகுமெண்ட்டில் உள்ள டெக்ஸ்ட்டில் உள்ள அனைத்து எழுத்துகளையும், எழுத்தின் அளவையும் மாற்றிவிடலாம்.
வேர்ட் 97 ~ 2003 டாகுமெண்ட்: இது வேர்ட் புரோகிராமின் முந்தைய பதிப்புகளுக்கான பைல் பார்மட். டெக்ஸ்ட் மட்டுமின்றி, இந்த பைலில், பைல் பார்மட் குறித்த தகவல்கள் மற்றும் ஹைபர் லிங்க்குகள் இருக்கும்.
வேர்ட் 97~2003 டெம்ப்ளேட்: இந்த வகை கோப்பின் டாகுமெண்ட்டினை நாம் ஒரு டெம்ப்ளேட்டாக மாற்றலாம். அது Word 97 - 2003 புரோகிராம் பதிப்புகளில் செயல்படும்.
பி.டி.எப்.: இந்த வகைப்படிவக் கோப்புகள், PDF—Portable Document Format, என்ற வகையைச் சேர்ந்தவை. இதனை, கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் எளிதாகப் படித்தறிய முடியும்.
எக்ஸ்.பி.எஸ். டாகுமெண்ட்: (XPS) இந்த பைல் வகை, டாகுமெண்ட் பார்மட்டைக் காத்துக் கொள்கிறது. இதன் மூலம் பைலைப் பகிர்வது எளிதாகிறது. இந்த பைலில் உள்ள டேட்டாவினை மாற்றுவது மிகக் கடினம். இந்த பைல் வகையை, .xps டாகுமெண்ட்களைப் படிக்கக் கூடிய புரோகிராமால் மட்டுமே படிக்க முடியும்.
வெப் பேஜ், வெப் பேஜ் வடிகட்டியது: (Single File Web Page, Web Page, Web Page, filtered ) இந்த வகைப் பைல்கள், டாகுமெண்ட்டினை .html படிவத்தில் சேவ் செய்கின்றன. இவை இணையத்தில் படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கோப்புகளாகும். இந்த பைல்களில், இமேஜ், ஒலி மற்றும் பிறவும் இதில் இருக்கும்.
ரிச் டெக்ஸ்ட் பார்மட்: (Rich Text Format): மைக்ரோசாப்ட் நிறுவனம், முதன் முதலில் டாகுமெண்ட்களுக்காக உருவாக்கிய பார்மட் இது. பல கட்டமைப்புகளில் படிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டது இது. இந்த ரிச் டெக்ஸ்ட் டாகுமெண்ட்டில், புகைப் படங்களை இணைக்கலாம்.
தனி டெக்ஸ்ட் மட்டும்: (Plain Text ~~ .txt): இந்த பைல்களில் டெக்ஸ்ட் அமைந்திருக்கும். ஆனால், இதன் பார்மட், ஹைப்பர் லிங்க் அல்லது போட்டோக்களை மாற்ற இயலாது.
எக்ஸ்.எம்.எல் பைல்கள்: (Word XML Document, Word 2003 XML Document, Stirct Open XML Document): .xml என்பது Extensible Markup Language என்பதன் சுருக்கமாகும். இது பைல்களில் டேட்டாவை இணைக்கப் பயன்படுகிறது. இது ஏறத்தாழ HTML பைலைப் போன்றதாகும்.
ஓபன் டாகுமெண்ட் டெக்ஸ்ட் (Open Document Text) இந்த வகை பைல் ஓப்பன் சோர்ஸ் பார்மட்டில் உருவான டாகுமெண்ட்களைக் கொண்டிருக்கும். குறிப்பாக, Open Office மற்றும் Libre Office புரோகிராம்களில் உருவான பைல்கள் இந்த வடிவில் சேவ் செய்யப்படும். இவை .odt என்ற துணைப் பெயரினைக் கொண்டிருக்கும். இவை, மைக்ரோசாப்ட் ஆபீஸ் புரோகிராம்களில் தயாரிக்கப்படும் டாகுமெண்ட்களின் அம்சங்களைக் கொண்டிருக்கும். ஆனால், வேர்ட் பைலை இந்த பார்மட்டில் சேவ் செய்தால், சில பார்மட்டிங் விஷயங்கள் நீங்கும் நிலை ஏற்படும்.
Works 6-.0 டாகுமெண்ட்: இந்த வடிவ பைலின் துணைப் பெயர் .wps. மைக்ரோசாப்ட் ஒர்க்ஸ் பதிப்பு 6 முதல் 9.0 வரையிலான புரோகிராம்களில் இது மாறா நிலை பார்மட்டாக இருந்தது. வேர்ட் டாகுமெண்ட்களில் உள்ள நவீன பார்மட் விஷயங்கள் இந்த வகை டாகுமெண்ட்களில் இருக்காது. இந்த குறிப்புகள், அவை சார்ந்த பார்மட் வகை குறித்து குறைவான தகவல்களே தந்துள்ளன என்று எண்ணினால், நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் புரோகிராம் ஹெல்ப் மெனு அல்லது மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்தில், மேலும் விரிவான விளக்கங்களைப் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X