ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பாதுகாப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
00:00

செய்தித் தாட்களில், மொபைல் போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து விபத்தும், சில வேளைகளில் உயிரிழப்பும் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. சாதாரண போனுக்குச் செலுத்தப்படும் மின்சாரம், ஆள் ஒருவருக்குக் காயம் மற்றும் மரணம் ஏற்படுத்தும் அளவிற்குச் செல்லுமா என்ற சந்தேகம் இருந்தாலும், நம்மில் பெரும்பாலானவர்கள், இது குறித்து மேலும் சிந்திக்கத் தவறிவிடுகிறோம். சில அடிப்படை பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொண்டால், நாம் இது போன்ற விபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளட் சாதனங்களின் சார்ஜர்களைப் பிரித்தே கையாளவும். ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை வெவ்வேறு மின்சக்தி திறனைக் கொள்ள வேண்டியவையாக இருக்கும். எனவே, ஒன்றின் இடத்தில் இன்னொரு சார்ஜரைப் பயன்படுத்துகையில், அதிக மின்னோட்டத்தினால், சாதனம் கெட்டுப் போக வாய்ப்புண்டு.
ஸ்மார்ட் போனை இரவு முழுவதும் சார்ஜில் வைத்திருக்க வேண்டாம். இதனால் வெப்பம் அதிகமாகி, பேட்டரி கெட்டுவிடும் வாய்ப்பு ஏற்படலாம். எனவே இரவு முழுவதும் இணைப்பில் வைத்திருக்காமல், நாம் உறங்கி எழுந்த பின்னர் கூட சார்ஜ் செய்திடலாமே.
உங்களுடைய சாதனத்தின் பேட்டரி தன் வாழ்நாள் பயனை இழந்துவிட்டதா? அதனை மாற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டீர்களா? மாற்று பேட்டரி வாங்குகையில், தரமான அதே நிறுவனத்தின் பேட்டரியினை வாங்கவும். விலை மலிவு என்று எண்ணி, தரமற்ற தர்ட் பார்ட்டி தயாரிப்புகளை வாங்க வேண்டாம்.
போனை சார்ஜ் செய்திடுகையில், அழைப்புகளை ஏற்படுத்த வேண்டாம். இந்த இரண்டு செயல்பாடுகளுமே வெப்பத்தை உருவாக்கக் கூடியவை. வயர்லெஸ் ஹெட்செட் ஒன்றைப் பயன்படுத்தவும். அல்லது போன் சார்ஜ் ஆகும்வரை பொறுத்திருக்கவும்.
சார்ஜ் செய்திடும் வயரில் உங்கள் போனைத் தொங்கவிட வேண்டாம். இது உங்கள் போனில் உள்ள கனெக்டரைக் கெடுத்துவிடும். உங்களுடைய மொபைல் போனுக்கு மதிப்பு கொடுக்கவும். அப்போதுதான் அது நீண்ட நாள் உங்கள் நண்பனாக இருக்கும்.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X