சாம்சங் காலக்ஸி ஏ9 ப்ரோ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
00:00

அனைத்து நிலை வாடிக்கையாளர்களையும் திருப்தி அடையச் செய்து, மொபைல் விற்பனைச் சந்தையில் முதலிடத்தைப் பெற்று, அதனைத் தக்கவைப்பதை இலக்காகக் கொண்டுள்ள சாம்சங் நிறுவனம், அண்மையில் மத்திய நிலையில் விலையிட்டு ஸ்மார்ட் போன் ஒன்றை Samsung Galaxy A9 Pro என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், வழக்கத்திற்கு மாறாக 6 அங்குல அளவில் உள்ளது. 1080 x 1920 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதியுடன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 161.7 x 80.9 x 7.9 மிமீ. எடை 210 கிராம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய். இதில் குவால்காம் ஆக்டா கோர் MSM8976 Snapdragon 652 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஜி.பி.யு. Adreno 510. இதன் ராம் மெமரி 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. மெமரி கார்ட் மூலம் 256 ஜி.பி. வரை இதனை உயர்த்திக் கொள்ளலாம்.
எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, ஆட்டோ போகஸ் வசதியுடன் கூடிய, 16 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. முன்புறமாக, 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு வை பி, புளுடூத், யு.எஸ்.பி., என்.எப்.சி. ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. Fingerprint (front-mounted), accelerometer, proximity, compass ஆகிய சென்சார்கள் உள்ளன.
வெளியே எடுக்க இயலாத லித்தியம் அயன் பேட்டரி 5000 mAh திறனுடன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 33 மணி நேரம் பேசலாம். 109 மணி நேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கலாம். மூன்று வண்ணங்களில் இந்த மாடல் போன் வெளி வந்துள்ளது.
இதன் அதிக பட்ச விலை ரூ. 32,500.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X