அதிகக் கொள்ளளவில் முதல் யு.எஸ்.பி. ட்ரைவ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
00:00

கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த மெமரி ட்ரைவ்களைத் தயாரித்து வரும் கிங்ஸ்டன் டிஜிட்டல் (Kingston Digital) நிறுவனம், அண்மையில் உலகில் மிக அதிகக் கொள்ளளவினைக் கொண்ட யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதன் கொள்ளளவு 2 டெரா பைட். இதன் பெயர் DataTraveler Ultimate GT / Ultimate GT Flash Disk. அண்மையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பன்னாட்டளவிலான நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் காட்சித் திருவிழாவின் போது, இது அறிமுகமாகியுள்ளது. GT என்பது Generation Terabyte என்பதாகும்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், அதிக டேட்டா கொண்ட பைல்கள் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல தொடர்ந்து அவற்றை சேமித்து வைக்கின்ற பணியும் உயர்ந்து வருகின்றது. இதற்கு உதவிடும் வகையில், கிங்ஸ்டன் நிறுவனம், தான் தயாரிக்கும் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ்களின் கொள்ளளவை உயர்த்திக் கொண்டே வந்தது. தற்போது இந்த அதிக பட்ச அளவு 2 டெரா பைட் ஆக உள்ளது.
இதன் விலை சற்று அதிகம் என்றாலும், அதிக டேட்டாவை மிக எளிதாகப் பகிர்ந்து கொண்டு, அவற்றைக் கையில் எடுத்துச் செல்லும் வகையிலான சாதனம் ஒன்று உள்ளது என்ற நிலை மிகவும் மதிப்புடையதாகும். விலை மற்றும் அதில் பதியப்படும் டேட்டாவின் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இதன் வெளிக் கவசம், ஸிங்க் அலாய் உலோகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தவறுதலாக இதனைக் கை தவறிக் கீழே போட்டாலும், இதற்குப் பாதிப்பு இருக்காது. இதற்கு தொழில் நுட்ப உதவியுடன் 5 ஆண்டுகள் காப்புறுதி தரப்படுகிறது. இதன் செயல் அம்சங்கள்:
இதனை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் முதல் 85 டிகிரி செல்சியஸ் வரையிலான சீதோஷ்ண நிலையில் வைத்திருக்கலாம். 25 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிர் செல்சியஸ் வரையிலான சீதோஷ்ண நிலையில் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 72 x 26.94 x 21மிமீ. இதன் வேகம் USB 3.1 Gen. 13 . அதாவது, விநாடிக்கு 5 கிகா பிட் தகவல்களைப் பரிமாறும் திறன் கொண்டது. கீழ்க்காணும் கம்ப்யூட்டர் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம்: அவை Windows 10, Windows 8.1, Windows 8, Windows 7 (SP1), Mac OS v.10.9.x, Linux v.2.6.x+ மற்றும் Chrome OS. DTUGT/1TB மற்றும் DTUGT/2TB என இரண்டு அளவுகளில், இரண்டு மாடல்களில் இது வெளியாகியுள்ளது.
சென்ற 2013 ஆம் ஆண்டு, இந்நிறுவனம் ஒரு டெரா பைட் கொள்ளளவு கொண்ட டேட்டா ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது இது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. பதிந்து எடுத்துச் செல்லக் கூடிய டேட்டா அளவினை, எந்த அளவிற்குக் கொண்டு செல்ல முடியுமோ, அந்த அளவிற்குக் கொண்டு செல்வதில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என இந்நிறுவனத்தின் நிர்வாகி ஜீன் தெரிவித்துள்ளார்.
புதிய ட்ரைவ் ஒன்றில், 70 மணி நேரம் ஓடக்கூடிய 4 கே படங்களைப் பதிந்து கொள்ளலாம்.
இதன் விலை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 5,500 அமெரிக்க டாலர் அளவில் விலை குறிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தியப் பண மதிப்பில் ரூ. 3,74,000 ஆக இருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X