சாம்சங் காலக்ஸி ஜே1 (4ஜி)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
00:00

ஸ்மார்ட் போன் பிரிவில், தொடக்க நிலை மாடல் போன் ஒன்றை, ரூ. 6890 அதிக பட்ச விலையாகக் குறியிட்டு, சாம்சங் நிறுவனம், அண்மையில் Galaxy J1 (4G) என்ற போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் லாலிபாப். இது பழையதாக இருப்பதற்கு, இந்தியாவில் இயங்கும் பழைய அப்ளிகேஷன்களுக்கு இதுவே இணையாக இருக்கும் என்று சாம்சங் கருதுகிறது.
இதில், எல்.இ.டி. ப்ளாஷ், ஆட்டோ போகஸ் திறன் இணைந்த 5 எம்.பி. கேமரா பின்புறமாகத் தரப்பட்டுள்ளது. முன்புறமாக, 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் 4.5 அங்குல அளவிலான திரை, 480 x 800 பிக்ஸெல் அடர்த்தியுடன் AMOLED டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. இதன் சி.பி.யு. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடிய குவாட் கோர் சிப் கொண்டுள்ளது.
இதில் ராம் மெமரி 1 ஜி.பி. ஆக உள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. ஆக உயர்த்திக் கொள்ளலாம். இந்த போனின் பரிமாணம் 132.6 x 69.3 x 8.9 மிமீ. எடை 131 கிராம். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, ஜி.பி.எஸ்., புளுடூத் 4.1., மைக்ரோ யு.எஸ்.பி. 2 ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2050 mAh திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. இது 12 மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கும், 30 மணி நேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதற்கும் மின் சக்தியை அளிக்கவல்லது. சாம்சங் இணைய தளம் வழியாகவும், கடைகளிலும் Galaxy J1 (4G) தொடக்க நிலை ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம்.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X