ரௌத்ர வீணை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மார்
2017
00:00

'ஹலோ... தினமலர் கண்ணம்மா பகுதியா?'
'ஆமா... சொல்லுங்க!'
'நான் காஞ்சிபுரம் பொத்தேரி பகுதியில இருந்து பேசுறேன். 'ரௌத்ர வீணை' பகுதியில என் கருத்து வரணும். ஆனா, என் பெயர் வேண்டாம்யா...'
'சரி... சொல்லுங்க!'
'வேற என்ன. எல்லாம் இந்த பாழாய்ப் போன குடியைப் பத்தி தான். 17 வருஷத்துக்கு முன்னாடி, நிறைய கனவுகளோட கல்யாணம் பண்ணிக் கிட்டேன்யா! வீட்டுல பார்த்த மாப்பிள்ளைக்கு தான் கழுத்தை நீட்டுனேன். மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இருக்குற விஷயம் வீட்டுல யாருக்கும் தெரியாம போயிருச்சு. கல்யாணம் முடிஞ்சு மாலையும், கழுத்துமா கோயிலை சுத்தி வர்றப்போ, அவர் என்கிட்டே இதைச் சொன்னாரு. 'அய்யோ... பாவி மனுஷா; ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி இதை சொல்லியிருக்கலாமே'ன்னு மனசு கிடந்து துடிச்சது. ஆனா, என்ன பண்றது, தாலி வாங்கிட்டேனே!
இந்தா... குடியே கதின்னு இப்போ கிடக்கிறாரு. மூத்த பையன் பிளஸ் 1 படிக்கிறான். ரெண்டாவது பையன் எட்டாவது படிக்கிறான். நான் ஒரு கடையில வேலை பார்க்குறேன். அதுல வர்ற வருமானத்தை வைச்சு தான் குடும்பம் ஓடுது. அஞ்சாறு தடவை போதை மீட்பு மையத்துல அவரை சேர்த்துப் பார்த்துட்டேன். எதுவும் வேலைக்கு ஆகலை! குடிக்க காசு தேவைன்னா மட்டும் தான் ஆட்டோ ஓட்டப் போறாரு. எங்க வாழ்க்கை பெரும் நரகம்யா!
பாதிக்கப்பட்டவளா எனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான்! இந்த அரசு கருவேல மர அழிப்புக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை, மது ஒழிப்புக்கும் கொடுக்கணும். டாஸ்மாக் வாசல்ல ஸ்கூல் பசங்க எல்லாம் நிற்கிறதை பார்க்குறப்போ, மனசு எப்படி வலிக்குது தெரியுமா? இந்த பசங்களும், நாளைக்கு என்னை மாதிரி ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிக்கப் போறானுங்க தானே? இப்படி, ஒரு தலைமுறையோட வாழ்க்கையை நாசம் பண்ற வேலையை அரசு செய்யலாமா?
என்னய்யா வாழ்க்கை வாழ்றோம்! உழைச்சு சாப்பிட தயாரா இருந்தாலும் வேலைவாய்ப்பு இல்லை. அப்படியே வேலை கிடைச்சாலும், குறைஞ்ச சம்பளம் கொடுத்து உறிஞ்சுறானுங்க. அந்த சம்பளத்தையும் வீட்டுக்கு கொண்டு போய், பொண்டாட்டி புள்ளையோட எவனும் சந்தோஷமா இருந்துடக்கூடாதுன்னு, தெருவுக்கு தெரு கடையை திறந்து வைச்சு அரசே ஊத்திக் கொடுக்குது. இப்படியே தினமும் குடிச்சா அவன் குடல் வெந்து செத்துடுவான். அப்புறம் டாஸ்மாக் வருமானம் சரிஞ்சிடும்னு, மலிவு விலையில சாப்பாடு; அரசு மருத்துவமனையில இலவச வைத்தியம்!
ரேஷன் கடையில கூட, 'ஸ்டாக் இல்லை'ன்னு அப்பப்போ கடையை மூடுறான். இவனுங்க என்னைக்காவது அப்படி கடையை மூடுறானுங்களா? ஆக, நாங்க அழுதுட்டே இருக்கணும். ஆளுறவங்க சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அப்படித்தானே?
ரெண்டு ரூபா பிஸ்கெட் போட்டா வாலாட்டி நன்றி காமிக்குதுய்யா ஒரு ஜீவன். நாங்க ஓட்டு போட்டிருக்கோம். இதுக்கு நன்றி வேணாம்; எங்க வாழ்க்கையை நாசம் பண்ணாமலாவது இருக்கலாமில்ல? கொஞ்சம் யோசிங்க!'

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.