பாட்டி சொல்லை தட்டாதே!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மார்
2017
00:00

பெயர்: நாகம்மாள்
வயது: 82
வாழ்விடம்: மேலப்பட்டி, நமக்கல்.


மணிக்கொரு தரம் அடியாழத்தில் நீர் கசிய விட்டு தன் இருப்பை நிரூபித்துக் கொண்டிருந்தது நூறடி ஆழக்கிணறு.

'நான் உனக்கு சளைத்தவளில்லை' என, அந்த அடியாழத் தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தாள், 82 வயது நாகம்மாள் பாட்டி. 'நான் உதவி பண்ணட்டுமா பாட்டி?' எனக் கேட்க, 'சரி, அப்படியே வீட்டுக்கு வந்து அந்த கம்பையும் இடிச்சுக் கொடுத்துரு' என, கேலி செய்தாள். குடத்தில் தண்ணீர் நிறைந்தது. சதை வற்றிய இடுப்பில் தண்ணீர் குடத்தை ஏந்தியபடி, தன் வீடு நோக்கி திரும்பினாள் பாட்டி.
'சாப்பிட வரலாமா?' விடாப்பிடியாக நான் கேட்க, 'மகராசியா வா' வாஞ்சையாய் அழைத்தாள் பாட்டி. சாப்பாட்டை விட அவளிடம் கதை கேட்கும் ஆர்வத்தில் பின் தொடர்ந்தேன்.
பாட்டியின் வீட்டு வாசலில் நிழல் இருந்தது. அந்த நிழலில் குளிர்ந்து கிடந்தது கல். அந்தக் கல்லின் மீது வசதியாக நான் அமர்ந்து கொள்ள, வீட்டினுள் குடத்தை இறக்கி வைத்து விட்டு, இடிக்க வேண்டிய கம்பு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் பாட்டி!
நான் நிழலுக்கு ஒதுங்கியிருப்பதைப் பார்த்ததும், 'என்ன தாயி நிறத்தை காப்பாத்திக்க நிழல்ல இருக்கியா?' என்றாள். நான் சிரித்தேன். 'என்னைப் பார்த்தியா; தோல் சுருங்குனாலும், மினுமினுப்பு குறையாம வைச்சிருக்கேன். எப்படிங்கிறியா? எல்லாம் இந்த கம்பங்களி மகிமை தான்! இந்த கட்டை இன்னும் தெம்பா நடமாடிட்டு இருக்குன்னா, அதுக்கு இந்த கம்பங்களி தான் காரணம்.
உரல்ல போட்டு இடிச்சு தவிடு நீக்குன கம்பை, மண்பானையில தண்ணீர் சேர்த்து நெல்லு சோறு மாதிரியே வேக வைச்சு, அது முக்கா வேக்காடு வந்ததும், தனியா எடுத்து வைச்சிருக்கிற தவிடை கொஞ்சமா அதுகூட போட்டு கிண்டி இறக்குனா, அதுதான் கம்பங்களி. தவிடு எதுக்காகன்னு பார்க்குறியா? அப்பதான் களி மாதிரி கெட்டியா வரும். அதோட, தவிடுல நார்ச்சத்தும் அதிகம். இந்த களி கூட முருங்கைக்கீரை குழம்பை தொட்டு சாப்பிட்டா எப்படியிருக்கும் தெரியுமா? ஆத்தா... இந்த களியை பத்து நாள் வரைக்கும் தண்ணீர் விட்டு வைச்சுக்கலாம். அதுபாட்டுக்கு கெட்டுப் போகாம கிடக்கும். சரி வா...வந்து இடிச்சுக் கொடு!

இது சத்தியம்!
'வாரத்துல ரெண்டு நாள் கம்பங்களியும், முருங்கைக் கீரை குழம்பும் சாப்பாட்டுல சேர்த்துக்கோங்க. உங்க உடம்பு உஷ்ணம் எல்லாம் பஞ்சா பறந்து போயிரும். தோல் சும்மா பளபளன்னு மின்ன ஆரம்பிச்சிரும். கண்ணு சம்பந்தப்பட்ட எந்த கோளாறும் கிட்ட அண்டவே அண்டாது!'
- நாகம்மாள் பாட்டி

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seenivasan - singapore,சிங்கப்பூர்
19-மார்ச்-201719:49:16 IST Report Abuse
seenivasan பெரியோர் சொல்லுக்கு முன்னாள் வேறு சொல் ஏதுமில்லை 'அரவான்' படத்தில் நடிகர் ஆதி சட்டியோடு கம்மங்கூழ் குடிக்கும் ஞாபகம் வருகிறது. உண்மையிலேயே சொல்கிறேன் கம்மங்கூழ் சுவை அடித்துக்கொள்ள வேற எதுவும் கிடையாது. நாட்டு கம்பு என்று கடையில் கேட்டு வாங்குங்கள். நாட்டு கம்பு ருசியே தனி தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.