இது உங்கள் இடம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2017
00:00

அன்பான அணுகுமுறை!
உடல் நலமில்லாது, மருத்துவமனையில் இருந்த என் மாமியாருடன் தங்கி இருந்தேன். பொதுவாக, மருத்துவமனைகளில், மன இறுக்கம், வருத்தம் மற்றும் கவலை படிந்த முகங்களைத் தான் பார்க்க முடியும். இதற்கு நேர்மாறாக, அன்பாக பேசுவதும், இனிமையாக பழகுவதுமாக இருந்தார், நர்ஸ் ஒருவர்.
ஒவ்வொரு நாளும் அன்றலர்ந்த மலராய் உள்ளே வந்து, 'ராத்திரி நல்லா தூங்கினீங்களா?' என்று, நோயாளியை மட்டுமல்ல, உடன் தங்கியிருப்பவர்களையும் அக்கறையான குரலில் விசாரிப்பார்.
நோயாளியின் தோளை அணைத்து, மலர்ந்த முகத்துடன், 'எப்படிம்மா இருக்கீங்க... சரியா தூங்க முடியலயா... இப்ப, நான் தர்ற மருந்தை சாப்பிடுங்க; வலி குறைஞ்சு, நல்ல தூக்கம் வரும்...' என, மென்மையாக, நம்பிக்கை ஊட்டும் விதமாய் பேசுவார்.
வசூல் ராஜா படத்தில் வருவது போன்ற கட்டிப்பிடி வைத்தியத்தை, இங்கு கண்கூடாக பார்த்தேன். வெறுமனே, கடமைக்காக மாத்திரைகள் தராது, அதை எதற்கு தருகின்றனர் என விளக்கி, நம்பிக்கை ஊட்டி, 'உங்கள சுத்தி இத்தனை நல்லவங்க இருக்கும் போது கவலைப்படலாமா... நம்பிக்கையா இருங்க; நல்லதே நடக்கும்...' என, ஒவ்வொரு நோயாளியிடமும் சொல்வார்.
மருந்து, மாத்திரை மட்டுமே நோயை குணப்படுத்தாது; அன்பான அணுகுமுறையும், 'பாசிடிவான' வார்த்தைகளும் தான், நோயின் தீவிரத்தை குறைக்கும் என்பதை புரிந்து நடந்த அந்த நர்சை, இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது. இவரைப் போன்றவர்களால் தான், ப்ளாரென்ஸ் நைட்டிங்கேல், மதர் தெரசா போன்று மிளிர முடியும்!
— மல்லிகா குரு, சென்னை.

செலவைக் குறைத்த கோடைமழை!
சமீபத்தில், பழனியில் உள்ள என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். சில நாட்களுக்கு முன், அங்கு, நன்கு மழை பெய்திருந்ததாக, செய்தித்தாளின் வாயிலாக அறிந்திருந்தேன்.
உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த போது, 'கோடைமழை, எனக்கு சில ஆயிரங்களை மிச்சப்படுத்தி விட்டது...' என்றார்.
'எப்படி?' என்றதற்கு, எட்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் சேமிப்பு கீழ்மட்ட தொட்டியை, திறந்து காண்பித்தார்; அதில், நீர் நிரம்பி இருந்தது. 'மாடியில் இருந்து வெளியேறும் தண்ணீரை அப்படியே தொட்டியில் சேகரித்து, 'குளோரின் பவுடர்' கலந்து, சூரிய ஒளி படாதபடி, மூடி வைத்திருக்கிறேன். தொட்டி நிரம்பியது போக, வெளியேறிய தண்ணீர், ஆழ்துளைக்கிணறு அருகில், மழை நீர் சேமிப்பு தொட்டிக்கு (உறிஞ்சு குழி) அனுப்பப்பட்டது...' என்று உற்சாகமாக விளக்கினார்.
அத்துடன், மழைநீர் சேமிப்பு, உறிஞ்சு குழிக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமா அதே அளவு, தொட்டிகளை தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றார். தற்போதுள்ள வறட்சியின் அவலம் கருதி அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும்.
பொய்க்கும் வான் மழை, நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது.
— வி.எஸ்.ராமு, திண்டுக்கல்

முத்திரை திருவிழா!
என் நண்பனின் கிராமத்தில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவிற்கு, வீட்டுக்கு இவ்வளவு என்று வரி விதிப்பர். வழக்கமாக, 500 ரூபாய் வரிக்கு பதிலாக, இந்த ஆண்டு, 1,000 ரூபாய் வரி விதித்து, வசூல் செய்வதை கேள்விப்பட்டு, 'இந்த ஆண்டு திருவிழாவுக்கு, பெரிய கச்சேரி, செண்டை மேளம் என ஏற்பாடு செய்து, திருவிழாவை, 'ஜாம் ஜாம்' என்று நடத்தப் போறீங்களா?' என்று அவனிடம் கேட்டேன்.
அதற்கு அவன், 'வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு, திருவிழாவை மிகவும் எளிமையாக நடத்த இருக்கிறோம். வரி வசூலில் வரும் பணத்தில், பொக்லைன் இயந்திரம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, எங்கள் கிராமத்திற்குள் இருக்கிற எல்லா சீமைக் கருவேல மரங்களை, வேரோடு அகற்ற, முடிவு செய்திருக்கோம்...' என்றான்.
அவனது கிராமத்தினரை நினைத்து, மனதிற்குள் ஒரு சபாஷ் போட்டேன். இதை, அனைத்து கிராமத்தினரும் பின்பற்றலாமே!
அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201709:14:43 IST Report Abuse
saravanan சமீபத்தில் என் தந்தையின் மொபைல் போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசுபவர் தான் ஆந்திரா பேங்க் ATM சர்விஸ் மேனேஜர் பாலமுருகன் என்றும் ID நம்பர் என்று ஒரு நம்பரையும் சொல்லி உங்கள் வங்கி கணக்கில் தொடர்ந்து சிலர் ஆன் லைனில் பொருள் வாங்க முயலுவதாககவும் கூறியுள்ளார். மேலும் உங்கள் வங்கி கணக்கில் கையிருப்பு ருபாய் 4525 உள்ளதாகவும் கூறியுள்ளார். என் தந்தை அதை மறுத்து ருபாய் 7000 க்கும் மேலிருப்பதாக கூறியுள்ளார். உடனே போனில் பேசிய நபர் மீதமுள்ள பணம் ஹோல்டு செய்யப்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய உங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் மற்றும் காலாவதி மாதம் மற்றும் வருடம் ஆகியவற்றை கேட்டுள்ளார். பின் அட்டையின் பின் உள்ள மூன்றிலக்க எண்ணையும் கேட்டுள்ளார். மூன்றிலக்க எண்ணை கூற என் தந்தை மறுத்திடவே இதனால் தன்னால் பணம் களவு போவதை ஒன்றும் செய்ய இயலாது என்றும் அந்த நபர் அதிகார தொனியில் சொல்லியுள்ளார். பின் சார் உங்கள் நன்மைக்காக தான் நாங்கள் சர்விஸ் செய்கிறோம் பரவாயில்லை உங்கள் போனுக்கு இப்போது வரும் OTP யை சொல்லுங்கள் குறைந்த நேரமே இருக்கிறது. இல்லை என்றால் உங்கள் பணம் முழுவதும் களவு போய் விட வாய்ப்பு இருக்கிறது சீக்கிரம் சொல்லுங்கள் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியுள்ளான். என் தந்தை தவறுதலாக OTP யை சொல்லிவிடவே கணக்கில் இருந்த 5000 ருபாய் வேறொரு மணி வால்ட்கு மாற்றம் செய்யபப் பட்டுள்ளது. தொடர்ந்து அந்த போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே வாசகர்கள் சற்று விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
17-ஏப்-201700:34:39 IST Report Abuse
Shanu பொக்லைன் இயந்திரம் பத்தி உள்ள கடிதம் உண்மை என்று நம்ப முடியவில்லை.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
18-ஏப்-201723:39:51 IST Report Abuse
Manianமொதல்லே உங்களையே நம்ப முயற்சி செய்யுங்கள். பின்னால் மற்றைவை ....
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
19-ஏப்-201700:06:10 IST Report Abuse
Manianஅன்பான அணுகுமுறை: ஜெனெடிக்ஸ் படித்த ஒரு நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் ஒரு தடவை நான் ஒரு கேள்வி கேட்டேன். நண்பரே, பொதுவாக, டாகடர் பிள்ளைகள் டாக்டருக்கு படிக்கிறார்கள், சட்டப படிப்பு படித்த வக்கீல்கள் குழந்தைகள் சட்டம் படிக்கிறாரார்கள். ஆனால் விஞ்ஞானிகள், கலைஞர்கள், ஆராச்சியாளர்கள் குழந்தைகள் எல்லாம் வெல்வேறு படிப்புகளிலி செல்கிறார்கள். நண்பர்கள், சமுதாயம், வேலை வாய்ப்பு எல்லாம் தள்ளின பின் வேறு ஏதாவது கரணம் உண்டா? நண்பர் சொன்னது: மரபணுவே கரணம். எங்கோ ஒரு தலை முறையில் இருந்த அதிக புத்திசாலித்தனம் தூங்கி, திடீரென்று பல தலைமுறைகள் கழிந்து உயிர் பெரும். அது, ஆண் வழியாகவும் ( 23 ஆன் குரோமோசம்கள்) , பெண் வழியாகவும் (அங்கும் 23 குரோமோசம்கள்) குழந்தைக்கு வரும். அதில் எந்த புரதம் சிறிது மாற்றம் அடைந்து மறுபடியும் புத்திசாலித்தனம் வெளிப்படும். எனவே , நல்ல ஆசிரியர்கள், நர்ஸுகள், கலைஞர்கள் போன்றவர்கள் ஒரே குடும்பத்தில் தொடர்ந்து வருவதில்லை. எனவே, பொதுவாக விஞ்ஞானிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் அரசியல் வியாதிகள் மரபணு மாறுவதில்லை. ஆகவே, அயோக்கியர்கள் அதிகமாக பிறக்கிறார்கள். " நர்ஸ் ஒருவர். ஒவ்வொரு நாளும் அன்றலர்ந்த மலராய் உள்ளே வந்து, 'ராத்திரி நல்லா தூங்கினீங்களா?' என்று, நோயாளியை மட்டுமல்ல, உடன் தங்கியிருப்பவர்களையும் அக்கறையான குரலில் விசாரிப்பார்." இது பொதுவாக நிறைய இடங்களில் , வெறும் வேலை வேண்டும் என்று படிக்கும் நர்ஸுகள், டாக்ட்டர்களின் இருப்பதில்லை. அதேபோல பமுடைய நலன் மனத்தில் உள்ளவர்களும் குறைவே. ஆகவே, தமிழ் நாடே மாற்றும் தலைவன் எங்காவது பிறந்திருப்பான் இல்லை பிறப்பான். ஆனால் அது திருடர்கள் கழகம், மரம் வெட்டிகள் போன்றவர்கள் குளத்தில் பிறக்காது. புள்ளி விவரம்( சிறிது செய்த ஆராச்சி மூலம் நண்பரின் விளக்கம் புரிந்ததது). வாசகர்களும், தங்கள் குடும்ப அங்கத்தினர் பற்றி ஆராய்ந்தால், நுட்டவன், அப்பா வழி தாத்தா மாதிரி, கடை குட்டிக அம்மாவின் மூத்த மாமா மாதிரி , என்று பரம்பரை மரபணு ஏற்ற , இறக்கங்கள் தெரியும். நான் 90% என் அப்பா, அவர் அப்பா மாதிரி, 10 % அம்மா வழி என் அன்னான் 45% அப்பா வழி, 55% அம்மாவின் அண்ணண் வழி.. நாங்கள் பொதுவக்க எல்லா விஷயங்களிலும் வேறு படடவர்கள்.) a :...
Rate this:
Share this comment
Cancel
sudharshana - chennai,இந்தியா
16-ஏப்-201716:37:29 IST Report Abuse
sudharshana மூன்று கடிதங்களும் முத்தானவை . இங்கேயெல்லாம் நர்ஸ் டாக்டர், பராமரிப்பவர்கள், மற்றும் வயதானவர்கள் குழந்தைகள் உடன் தொடர்புடன் வேலை உள்ளவர்கள் எல்லாருக்கும் ஆரம்ப பாடமே மிக மிக இனிமையாகவும் ஆறுதலாகவும், அக்கறையாகவும், அன்பாகவும் நடந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலை கூட அடுத்து தான்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
16-ஏப்-201706:46:16 IST Report Abuse
Manian மனதில் சேவை மனப்பான்மை இருப்பவர்களே, ஆசிரியர்கள், நர்ஸுகள், மருத்துவர்களாக வரும்போது சமுதாயமும் மலரும். மக்களும் அவர்களை போற்ற வேண்டும். முதல் கடிதம் அதை உறுதிப்படுத்துகிறது. இரண்டாம் கடிதம், ஒரு சிலராவது வருமுன் காப்போனாக தண்ணீரை சேகரிக்கிறார்கள் என்பது மிக அருமையான செய்தி. மூன்றாவது கடிதம், மெதுவாக மக்கள் அரசாங்கம், ஓசியை எதிர்பார்க்காமல் தாங்களே தங்களுக்கு உதவி செய்ய முன்வருவது விடியலில் ஒளி வெளி வருவதுபோல் தெரிகிறது. முன் காலத்தில் இப்படித்தான் எங்கள் ஊரிலும் நடந்தது. அது திரும்புவது சமுதாயம் மெதுவாக திருந்துவதாக நம்பிக்கை தருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.