ரௌத்ர வீணை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2017
00:00

தமிழக மின்சாரத் துறை அமைச்சருக்கு...

வழக்கம் போலத்தான் அன்னைக்கும் எங்களுக்கு பொழுது விடிஞ்சது. ஆனா, பொழுது அடையுறதுக்குள்ளே இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கலை! வீட்டு வேலை பார்த்து, அதுல கிடைக்கிற வருமானத்துல வயித்தை கழுவிட்டு இருந்த பாவப்பட்ட ஜீவனோட பொண்ணு நான்.

துாத்துக்குடி மாவட்டம், லெவஞ்சிபுரத்து ஏழைங்கய்யா நாங்க! கடந்த பிப்ரவரி மாசம், 23ம் தேதி.
சிதம்பர நகர், 2வது தெருவுல இருக்குற ஒரு வீட்டு வாசல்ல கோலம் போட்டுட்டு இருந்தாங்க எங்க அம்மா. அதிகாலை நேரம். 'ச்ச்சடார்ர்...'ன்னு ஒரு சத்தம். தலைக்கு மேலே போயிட்டிருந்த மின்கம்பி அறுந்து எங்க அம்மா மேல விழ, அலறக்கூட வழியில்லாம அந்த இடத்துலேயே அமைதியாயிட்டாங்க. எங்க அம்மா சாவுக்கு யார் காரணம்னு, நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லை. ஆமா, அது உங்க மின்சார வாரியம் தான்!

அந்த சிதம்பர நகர் மின்பகிர்வு அலுவலக கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதியில, ஏராளமான மரக்கிளைகள் மின் கம்பிகளுக்கு இடையில போயிட்டிருக்கு. அந்த கிளைகள் தந்த அழுத்தம் தான், அன்னைக்கு மின்கம்பி அறுந்து விழ காரணம்!
இதை கவனிக்காம விட்டது யார் தப்பு? உங்க துறை ஊழியர்கள் மட்டும் தங்களோட கடமையைச் சரிவர செஞ்சிருந்தாங்கன்னா இன்னைக்கு எங்க அம்மா உயிர் போயிருக்காது. நடந்தது விபத்து இல்லை. அது ஒரு கொலை. கடமையைச் சரிவர செய்யாதவங்களால நிகழ்த்தப்பட்ட கொலை. சம்பந்தப்பட்டவங்களுக்கு என்ன தண்டனைகொடுத்திருக்கீங்க?

சம்பவம் நடந்த சிதம்பர நகர் பகுதியில இந்த மாதிரின்னா, நான் வசிக்கிற லெவஞ்சிபுரம், 2வது தெருவுல மின்கம்பங்களே கிடையாது. தெரு விளக்கு வசதிக்கு அனுமதி கிடைச்சும், அதற்கான நிதியை மாநகராட்சி ஒதுக்கீடு செஞ்சும், கடந்த பத்து மாசமா இணைப்பு தராம உங்க துறை இழுத்தடிக்குது! அவங்க எதிர்பார்க்குறதை, ஏழை ஜனங்களான எங்களால எப்படி நிறைவேத்த முடியும்?

ஒரு பக்கம் அஜாக்கிரதை; இன்னொரு பக்கம் அலட்சியம்; இப்படித்தான்யா இயங்கிட்டு இருக்கு உங்க துறை! உயிர் போன பின்னாடி ஓடி வந்து நிற்கிறதும், அசம்பாவிதங்கள் நடந்துட்டா கொஞ்ச நாளைக்கு சுறுசுறுப்பா இயங்குறதும்... என்னய்யா நாடகம் இது?

இந்தா... எங்க அம்மா இறந்து, 50 நாள் ஆயிடுச்சு. அவங்க மரணத்துக்கு இழப்பீடுன்னு எதுவும் கிடைக்கலை. அவங்க நிழல்ல வாழ்ந்துட்டு இருந்த நான், இப்போ ஒதுங்க இடம் இல்லாம தவிச்சுப் போய் நிற்கிறேன். இது தொடர்பா மாவட்ட ஆட்சியருக்கும் மனு கொடுத்திருக்கேன். அதுவும் அப்படியே கிடக்கு. நீங்களாச்சும் ஏதாவது செய்வீங்களா?
- மின் கம்பி அறுந்து விழுந்ததில், தாய் அருணாச்சலத்தை பலி கொடுத்த துாத்துக்குடி மாடத்தி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.