பாட்டி சொல்லை தட்டாதே
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2017
00:00

பெயர் முனியம்மாள்
வயது 85
வாழ்விடம் நல்லமநாயக்கன் பட்டி, மதுரை.

'யாரது ஊருக்குள்ளே புது ஆளு?' ஊரின் நுழைவாயிலில் இருந்த அகலமான முற்றத்தில் அமர்ந்து, தன் வயதொத்த பாட்டிகளுடன், கால ஓட்டத்தில் காலாவதியாகிப்போன தன் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்த முனியம்மாள் பாட்டி, என்னைப் பார்த்ததும் குரல் கொடுத்தார். பக்குவமாய் விபரம் சொல்லி, நினைவுகளை அலசும் அக்கூட்டத்தில் சில நிஜங்கள் கேட்க அமர்ந்தேன்.

'கிழவிங்ககிட்டே என்ன ஆத்தா கதை இருக்கப் போகுது?' தயங்கித் தவித்தார் பாட்டி. 'இன்னைக்கு யாரு கதை ஓடுது?'என்றபடியே அக்கூட்டத்தில் வந்தமர்ந்த ஒரு முப்பது வயதுக்காரி, தான் கையோடு கொண்டு வந்திருந்த அரிசியை புடைக்கத் துவங்கினாள். பாட்டிகளின் கதை தொடர்ந்தது. சிறிதுநேரம் அரிசி புடைத்தவள் எழுந்து கொள்ள, 'அதுக்குள்ளே முடிச்சுட்டியா?' ஆச்சரியத்தோடு கேட்டார் முனியம்மாள். 'வெளிச்சம் பத்தலை; நாளைக்கு புடைச்சுக்கிறேன்!' இது முப்பது வயதுக்காரி. 'என்னது நாளைக்கா? அடியேய்...இப்படி கொடு! நான் புடைச்சு தர்றேன்' அவள் கையிலிருந்த முறத்தை வாங்கி, காற்றுக்கும், முறத்திற்கும் இடையில் அரிசியை ஏற்றி, இறக்கி கல் நீக்கத் துவங்கினார் பாட்டி. 'என்ன பார்க்குறே... இது குளத்துக் கரம்பையோட குளுமை பாய்ஞ்ச கண்ணு; எதுவும் செய்யாது' என்ற பாட்டி, நான் விஷயம் புரியாமல் விழிப்பதைப் பார்த்ததும், 'இப்போ உள்ள பொண்ணுங்க, 'ஷாம்பூ, சாயம்'னு போட்டு, தலைமுடியையும், கண்ணையும் கெடுத்து வைச்சிருக்கீங்க. எங்க காலத்துல, குளத்துல இருக்கிற கரம்பை மண் தான் தலைக்கும், உடம்புக்கும்!' என்றவர், அரிசியில் கிடந்த சிறுசிறு கல்லையும், குருணைகளையும் தனித்தனியே பிரிக்கத் துவங்கினார்.

'கரம்பைங்கிறது குளத்துலேயும், ஏரியிலேயும் கிடக்கிற மண்ணு; கருப்பா, காய்ஞ்சு போன புண்ணாக்கு மாதிரி இருக்கும்! 'உச்சி குளிர்ந்தா உள்ளம் குளிரும்'னு சொல்வாங்கள்ல, நாங்க அந்த கரம்பையை தேய்ச்சு தான் உச்சி குளிர வைச்சோம். சித்தகத்தி பூ போட்டு காய்ச்சுன நல்லெண்ணெயை தலையில நல்லா ஊற வைச்சு, வெந்தயப்பொடி கரம்பை மண் தேய்ச்சு குளிச்சா, உன் கண்ணு ஆயுசுக்கும் ஆரோக்கியமா இருக்கும்!' என்றார். 'சரி' என, நானும் ஏற்றுக் கொண்டேன்.

இது சத்தியம்!

'குளிக்கிறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால, கரம்பை மண்ணையும், வெந்தயப் பொடியையும் சீயக்காய் மாதிரி நல்லா குழைச்சு, அதை சூடு பறக்க நல்லா தலையில தேய்ச்சு குளிக்கணும். கொஞ்சநேரம் தலை கடுக்கத்தான் செய்யும். ஆனாலும், உடல் சூடு தணிஞ்சு கண்ணு குளுமையாயிடும். கண்ணு ரெண்டும் ஆரோக்கியமா இருக்கும். இதை உடம்புக்கும் தேய்ச்சு குளிக்கலாம்டி கண்ணு!' முனியம்மாள் பாட்டி.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.