விளையாட்டுத் துறையில்... ஆண் வீரர்களுக்கு பெண் பயிற்சியாளர்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2017
00:00

தமிழ்நாட்டில் மொத்தம் ஒன்பது இடங்களில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகளும், பதினொரு இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளும் இயங்கி வருகின்றன. இந்த மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளில் அவர்களுக்கான பயிற்சியாளர்களில் முதல் பெண் பயிற்சியாளர் என்ற பெருமைக்கு உரியவர் ஞானசுகந்தி அண்ணாவி.அவருக்கு வயது நாற்பத்தி எட்டு, திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த ஞானசுகந்தியைச் சந்தித்தோம்.

விளையாட்டுத் துறைக்கு நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்?
நான் படிச்சது டால்மியாபுரம், டால்மியா சிமென்ட் மேனிலைப் பள்ளி, சின்ன பிள்ளையிலேர்ந்து நானாவே ஓடிக்கிட்டே இருப்பேன். அந்த ஸ்கூல் பாஸ்கெட் பால் கிரவுண்டு ரொம்ப சூப்பரா இருக்கும். அங்க தனியொரு ஆளா நின்ன நான் மட்டுமே பாஸ்கெட் பால் விளையாடிட்டு இருப்பேன். எனக்கு பிடித்த விளையாட்டுகளைத் துரத்தித் துரத்திக் காதலிச்சேன். நான் பிளஸ் டூ படிச்சப்ப ஓவர் ஆல் விளையாட்டுகள்ல திருச்சி மாவட்ட சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றேன். திருச்சி ஹோலி கிராஸ் காலேஜ்ல பி.ஏ., அப்புறமா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துல முதுகலை உடற்பயிற்சிக் கல்வி தேர்ச்சி. பின்னர் அதே துறையில் எம்.பில்., தேர்ச்சி பெற்றேன்.

விளையாட்டுத் துறைக்கு உங்க குடும்பத்திலேர்ந்து நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்களா?
சொன்ன ரொம்ப ஆச்சர்யப்படுவீங்க. என்னோட அப்பா ஹாக்கி விளையாட்டு வீரர்.என் அக்கா பாஸ்கெட் பால் வீராங்கனை அவர் விளையாட்டுப் பயிற்சியாளர். என் தங்கை அத்லெடிக் வீராங்கனை.என் கணவர் அண்ணாவி, தேசிய அளவில் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீரர். எங்கள் இரு வீட்டாருக்குமே விளையாட்டுத் துறை கோட்டாவில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் வேலை கிடைத்துள்ளது. விடாமுயற்சியா விளையாடினா வேலை கிடைக்கும்.

விளையாட்டுத் துறைப் பயிற்சியாளராக எப்போது வந்தீர்கள்?
பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. தொகுப்பூதியப் பணி அலுவலராக ஒன்பது ஆண்டுகளும், நிரந்தர பணி அலுவலராக ஐந்தாண்டுகளாகவும் இயங்கி வருகிறேன். அதில் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகள் கற்றுத்தருவதில் ரொம்ப ரொம்ப பெருமைப்படுகிறேன்.

பையன்களுக்கு ஒரு லேடி கோச்சராக இருப்பதில் ஏதேனும் அசௌகர்யங்கள் இருக்கிறதா?
அப்படி எதுவுமே ஏற்பட்டது இல்ல. மொதல்ல கிரவுண்டுகளுக்குள்ளே வந்துட்டாலே ஆண் - பெண் வேறுபாடு கிடையாது. பயிற்சி எடுத்துக்கிற பையன்களுக்கு விளையாட்டுல நல்லா அச்சீவ் பண்ணணும்ங்கிறதுதான் முக்கியமா இருக்கும். அதனால என்கிட்ட பயிற்சி பெறும் பையன்கள் எந்தவிதத் தயக்கம் காட்டாமல், கவனம் பிசகாமல் ரொம்பவே மரியாதையுடனும் கண்ணியமாகவும் தான் நடந்துக்குவாங்க. அது எனக்கு ரொம்பவே பெருமை!

வெளியூர் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்று வந்ததில், ஏதேனும் மறக்க முடியாத சம்பவம்?
ஒருமுறை ராஞ்சியில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பதினைந்து பேர் கொண்ட குழுவினை நானும் இன்னொரு பயிற்சியாளரும் அழைத்துச் சென்றிருந்தோம்.போகும்போது ரயிலில் ரிசர்வேஷன் சீட் இடம் கிடைத்திருந்தது. திரும்பி வரும்போது ரிசர்வேஷன் சீட் கன்ஃபார்ம் ஆகவில்லை. ரயிலில் ராஞ்சியிலிருந்து சென்னைக்க பயணம். அன்ரிசர்வ்ட் கோச்சில் ஏறவே முடியவில்லை. அவ்வளவு கு்பல். அதே போல் ரிசர்வ்டு கோச்சிலும் சரியான கூட்டம்வேற வழியில்லாமல் அதுலயே ஏறிக்கிட்டோம். ஃப்ரியா நின்னு வர்றதுக்குகூட இடமே இல்ல. ராஞ்சியிலிருந்து சென்னை வந்து சேர இரண்டு பகல், இரண்டு இரவு அதாவது நாப்பத்தெட்டு மணி நேரமா ரயில்ல நின்னுகிட்டே வந்தோம். எந்த ஸ்டேஷன்லையும் எங்க யாருக்குமே கொஞ்ச நேரம் உட்காரக்கூட சீட் இடம் கிடைக்கல. அந்த ரெண்டு நாள் ரயில் பயணத்தை எங்க யாராலுமே மறக்க முடியாது.

உங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்களின் சாதனைகள்? இலக்குகள் பற்றி?
புனேயில் நாற்பத்தியெழு நாடுகள் பங்கேற்ற ஜூனியர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள். என்னிடம் பயிற்சி பெற்ற அசாரதீன், நீளம் தாண்டுதலில் மூன்றாமிடம், உயரம் தாண்டுதலில் நிக்கில் சிற்றரசு இரண்டாம் இடம். அன்புராஜ், பாரீஸில் நடைபெற்ற ஐந்து நாடுகள் பங்கேற்ற போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வந்தான். 2015ல் கத்தாரில் ஏசியல் இளையோர் விளையாட்டுப் போட்டிகள். அதில் ராஜேஷ் என்கிற என் மாணவன், பத்துவிதமான விளையாட்டுப் போட்டிகளில் ஓவர் ஆல் பாயின்ட்டுகளில் இரண்டாமிடம் பெற்றிருந்தான்.
என் மாணவன் சந்தோஷ்குமார் எப்படியும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்குத் தேர்வாகி 2020ல் நடைபெறும் ஒலிம்பிக் சென்று வருவான் என மிகவும் நம்புகிறேன். 2020 அல்லது 2024களில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் எப்படியும் என்னிடம் பயிற்சி பெற்று வரும் மாணவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். இலக்கு, லட்சியம் எல்லாமே.

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X