நிழலெனத் தொடரும் ஸ்டாஸிஸ்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2017
00:00

என்னப்பா! அம்மாவுக்க எப்படி இருக்க இப்ப!
தேவலாம் சார்! போன வாரம் ஐசியூவுலேர்ந்து நார்மல் வார்டுக்கு வந்தாங்க. நேத்து ஊருக்குப் போயாச்சு!
ஊருக்கா? எந்த ஊருக்கு!
எங்க ஊர்தான் மாதிரி மங்கலம்!
யோவ் என்னய்யா பொறுப்பில்லாம பேசறே? அவ்ளோ கிரானிக்கா ஹார்ட் பிராப்ளம் இருந்திருக்கு! மாதிரி மங்கலம்கற!
ஒண்ணும் கவலை இல்லை சார்
அவசரத்துக்கு கூப்பிடகொள்ள வந்து ஒரு ஈசிஜி எடுக்கக்கூட வசதி இருக்காதேய்யா!
எல்லாம் இருக்கு சார்!
எல்லாம்னா?
ஸ்டாஸிஸ் இருக்கு சார்
அதென்னாய்யா ஸ்டாஸிஸ்?
சாதாரணமாக ஐசியூவிலிருக்கும்போது எல்லாவித மானிட்டர்களும் பொருத்தப்பட்டு பேஷன்ட்டின் சகலவித உடல் பாகங்களும் கண்காணிக்கப்படும். கொஞ்சம் சரியானதும் ஜெனரல் வார்டு ரூமுக்குள் கொண்டு வந்த பிறகு, அவரசத் தேவையன்றால் கூட, ஓடிப்போய் நர்ஸை அழைக்க வேண்டும்.ஆனால் யதார்த்தத்தில் பல இடங்களில் அவசர அழைப்புக்கு வரமுடியாமல் சரியான நேரத்தில் அவசர சிகிச்சை செய்ய இயலாமல் பல உயிர்களை இழந்திருக்கிறோம். அதற்கெல்லாம் விடியலாக வந்திருப்பதுதான் ஸ்டாஸிஸ் லாபின் சமாச்சாரம். தினேஷ் சீமகுர்த்தி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தயாரித்திருக்கும் சிறிய செவ்வகப் பெட்டி! இன்டர்நெட் மற்றும் கிளவுட் என்னும் தொழில்நுட்ப இயலைக் கொண்டு இயங்கும் இந்தப் பெட்டி நோயாளியிடம் பொருத்தப்பட்டுவிட்டால், ஐசியூவிலிருந்து வெளிவந்த பின்னர் அவரின் எல்லாவித உடலின் அளவுருக்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். இதன் மூலம் சேகரிக்கப்படும் அளவுரு்கள் இன்டர்நெட் மூலம் கிளவுடில் சேகரிக்கப்பட்டுவிடும். ஏதாவது அளவுரு எல்லை மீறுமானால் உடனே இந்த பெட்டி ஆரஞ்சு சிக்னலை வெளிப்படுத்துவதோடு எங்கோ ஆஸ்பத்திரியில் இருக்கும் டாக்டரின் கம்ப்யூட்டர் அல்லது டாப்லெட்டின் மானிட்டரில் செய்து அனுப்பிவிடும். உடனே டாக்டர் தொடர்பு கொண்டு உடனடி சிகிச்சைக்கான வழிகளைச் சொல்லிவிடுவார்.
தினேஷின் பாட்டனார் இந்த மாதிரி ஐசியூவிலிருந்து வெளிவந்த பின்னர் சரியான கவனிப்பின்றி இறந்த அனுபவமே இவரை இந்த விஷயத்தில் மும்முரமாக ஈடுபட்டு ஆராய்ந்து இப்படி ஒரு தயாரிப்பைக் கொண்டுவர ஊக்கியிருக்கிறத.
இதன் மூலம் டாக்டருக்கும் நோயாளிக்குமான இடைவெளியைக் குறைத்திருக்கிறோம் என்கிறார் தினேஷ்.
ஸ்டாஸிஸ் மூலம் நோயாளிகளின் அளவுருக்களை ஆட்டோமேட்டிக்காக ரிகார்ட் செய்துவிட முடியும். அதன் நேரக் கணக்கு 96 செகண்டுகள்தாம். ஆனால் எழுதுவதற்கு ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 120 மணி நேரம் வரை செலவாகிறதாம்.
ஒவ்வொரு டாக்டரும் தங்களின் பேஷண்ட்டுகளின் முக்கிய அளவுருக்களை தன் கம்ப்யூட்டரில் காரில் இருப்பது போன்ற ஒரு டாஷ்போடில் பார்த்துக் கொண்டே இருக்க முடியும். ஒரு சின்ன பீப் மற்றும் மஞ்சள் நிற அலர்ட்! உடனடியாகச் செயல்பட்டு நோயாளியை உடனடியாகக் கவனித்து சிகிச்சை அளித்துவிட்டால் அவன் ஐசியூவுக்குப் போக வேண்டிய அவசியம் குறைந்துவிடும்.
கலிஃபோர்னியாவில் வடிவமைத்து இந்தியாவில் மைசூரில் தயாரிக்கப்படும் இந்த ஸ்டாஸிஸ் பெட்டிகள் இப்போது பெங்களூரு நாராயணா ஹாஸ்பிடலில் உபயோகப்படுத்தப்படுகிறதாம். இதில் இப்போது இதயத்துடிப்பு, ரத்த ஆக்ஸிஜன், ஈசிஜி, சுவாச விகிதம், ரத்த அழுத்தம் மற்றும் உடல் வெப்பம் என்னும் ஆறு உடற்கூற்று அளவுருக்கள் கண்காணிக்கப்படுகின்றன. இவற்றில் எதிலாவது லிமிட் தாண்டினால் உடனே மஞ்சள் கலர் பட்டை குடிக்கம். நோயாளியை அவசரச் சிகிச்சைக்க ரெடியாக்கி விடலாம். நம்மூர் பவர் கட்டிற்கான நிவாரணியாக மின்சாரம் இல்லாதபோது தானாகவே பாட்டரி மூலம் இயங்கும் மாற்றையும் தருகிறார்கள்.
ிந்த ஸ்டாஸிஸ் உபயோகத்திற்கு வந்த பின்னர் அவசர அவசரமாக ஐசியூவுக்கு ஓடவேண்டிய அவசியம் 63% வரை குறைந்திருப்பதாகச் சில மருத்துவ சோதனைகள் சொல்லுகின்றன.
மாணிக்கம்! இப்ப எங்க இருக்கீங்க?
கோயம்பேடு மார்க்கெட்டுல வாழக்காய் வாங்கிகினு இருக்கேங்க!
சரி அப்படியே பக்கத்துல நிழல்ல உக்காருங்க! கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி மூச்ச இழுத்து விடுங்க!
ஒண்ணுமில்ல! பல்ஸ் ரேட் எகிறி இரு்கு! சண்டைகிண்டை போட்டீங்களா?
அட ஆமாங்க! தக்காளி என்னா வெல சொல்றானுங்க!
தக்காளிய விடுங்க! ஒர அஞ்சு நிமிஷம் உட்காருங்க! நான் சொன்னப்புறம் எழுந்து போய் சூடா ஒரு டீ குடிச்சிட்டு, வீட்டுக்குக் கிளம்பிடுங்க! சாயங்காலமா ஒரு நடை பெற என்னை வந்து பார்த்துடுங்க!
சரிங்க டாக்டர்! ஸ்டாஸிஸ் இதுபோல வருமுன் காத்துவிடும் தொழில் நுட்பம்!

ஆஸ்பத்திரிகளில் நர்ஸூகள் கிட்டத்தட்ட 40%க்கு மேல் தங்களின் நேரத்தை நோயாளிகளின் அளவுருக்களைக் கண்காணிப்பதிலும், 35% அந்த அளவுருக்களை ரெஜிஸ்தரில் எழுதுவதிலுமாகக் கழிக்கிறார்கள் என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே.

- ஜெயராமன் ரகுநாதன்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X