சித்திரையில் முத்திரை பதிக்கும் கத்தரி | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
சித்திரையில் முத்திரை பதிக்கும் கத்தரி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மே
2017
00:00

சத்துக்களை அள்ளித்தரும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. வண்டல் மண்ணில் வளமாய் வளரும் பயிர்களில் முக்கியமானது. நீர்சத்து அதிகம் கொண்டது, வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 அடங்கியது.
வெள்ளை, ஊதா, பச்சை என பல நிறங்களில் காணப்படுகிறது. உடல் பருமனை குறைப்பதில் கத்தரிக்காயின் பங்கு மகத்தானது. மருத்துவ மகத்துவம் மிக்க கத்தரிக்காயை அதிகம் பேர் விரும்புகின்றனர். அதிக நாள் கெடாத காய்கறிகளில் கத்தரியும் ஒன்று. ''லாபம் தரும் விவசாய தொழிலாக கத்தரிக்காய் சாகுபடி இருப்பதாக,'' காரைக்குடி கழனிவாசல் விவசாயி எஸ்.சிவராஜ் கூறுகிறார்.
அவர் கூறும்போது: ஒரு ஏக்கரில் நாட்டு கத்தரி நட்டுள்ளேன். குழித்தட்டு முறையில் நாற்று வளர்த்து, 25 நாளுக்கு பின் நிலத்தில் நடுவோம்.
60 முதல் 65 நாளில் பலன் கொடுக்க ஆரம்பித்து விடும். நான்கு முதல் ஐந்து மாதம் வரை காய்ப்பு இருக்கும். வாரத்துக்கு ஒரு முறை 150 முதல் 200
கிலோ வரை காய் பறிக்கலாம்.
வியாபாரிகளிடம் கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கிறேன். வயலுக்கு வந்து நேரடியாக ஒரு சிலர் கொள்முதல் செய்கின்றனர். ஆறு மாதத்தில் 3 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு போக மீதி லாபமாக நிற்கும்.
மேலாண்மை முறையை பொறுத்தவரை பூக்கும் பருவத்தில் வளர்ச்சி ஊக்கியான 'சைட்டோசெம்' தெளிப்போம். இயற்கை உரமான மாட்டு எரு அதிகளவில் பயன்படுத்துகிறோம். 15 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். மூன்று அடிக்கு ஒரு செடி வைக்க வேண்டும். 20 நாளுக்கு ஒரு முறை மெஷின் மூலம் களை எடுக்கப்படுகிறது. விவசாயத்தை பொறுத்தவரை ஈடுபாட்டுடன் உழைத்தால் கை நிறைய லாபம் அள்ளலாம் என்றார். தொடர்புக்கு 94437 35894
- த.செந்தில்குமார், காரைக்குடி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.