அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2011
00:00

பகவானை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆபத்து காலத்தில் உதவக் கூடியவன் பகவான் தான் என்றும், நாதன் என்பதற்கிணங்க சமயத்தில் காப்பாற்ற கூடியவன் என்றும், பகவானை குறிப்பிடுகின்றனர். பகவானுக்கு ஆயிரம் நாமாக்கள் உள்ளன. அவைகளில் எதைச் சொல்லி கூப்பிட்டாலும் ஓடி வருவான். இதை சகஸ்ர நாமம் என்பர். இது தவிர, சுருக்கமாக அஷ்ட்டோத்ரம் என்று நூற்றியெட்டு நாமாக்களும் உண்டு. அவசரமாக பூஜை செய்யும்போது, இந்த அஷ்டோத்ரத்தையும், சாவகாசமாக பூஜை செய்யும் போது, இந்த சகஸ்ர நாமத்தையும் சொல்லி பூஜை செய்வர். பகவானிடம் நம்பிக்கை வைத்து, "நீதான் கதி' என்று, அவனையே சரணாகதியடைய வேண்டும். இந்த சரணாகதி என்ற பதத்துக்கு, நிறைய வியாக்கியானம் செய்திருக்கின்றனர். அதற்கான பலனும் நிறைய உண்டு. சரணாகதி தத்துவம் என்கின்றனர் இதை. திரவுபதி, துரியோதனனின் சபையில் அவமானப்படுத்தப்பட்ட போது, ஒரு கையால் சேலையைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையை உயரத் தூக்கி கண்ணனை உதவிக்கு அழைத்தாள். அப்போது, உதவிக்கு வரவில்லை கண்ணன். பிறகு, இரண்டு கைகளையும் தூக்கி, "அச்சுதா... கிருஷ்ணா...' என்ற போது, அருள் செய்தான் கண்ணன். கஜேந்திரன் கதை உங்களுக்கு தெரியும் தானே... அந்த கஜேந்திரன் ஆயிரம் வருஷ காலம் முதலையோடு போராடினானாம். கஜேந்திரனின் பந்துக்கள் வந்து கரையிலேயே நின்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டு சென்றனர். "இனி, நமக்கு உதவுவதற்கு யாருமே இல்லை...' என்ற நிலைக்கு வந்த கஜேந்திரன், பகவான் தான் துணை என்பதை புரிந்து கொண்டு, "ஆதி மூலமே!' என்று அபயக் குரல் கொடுத்தானாம். இந்த குரலை கேட்ட பகவான், கருட வாகனத்தில் வந்து, சக்ராயுதத்தால் முதலையை வதம் செய்து, கஜேந்திரனை விடுவித்தார். அப்போது கஜேந்திரன், ஒரு தாமரையை பிடுங்கி பகவான் மீது வீசி, தன் நன்றியை தெரிவித்து, பகவானை துதி செய்ததாக புராணம் கூறுகிறது. இப்படி ஆபத்து காலத்தில், பகவானை அழைத்து, துதி செய்து,பகவான் தரிசனம் பெற்ற கஜேந்திரன் மோட்சம் பெற்றான். பட்டத்ரி இந்த சரித்திரத்தை ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னிதியில் சொல்லி, "ஹே குருவாயூரப்பா... இது சத்தியமா?' என்று கேட்க, குருவாயூரப்பனும், "அந்த கஜேந்திரன் போட்ட தாமரைப் புஷ்பம், இதோ இன்னும் என் கையில் இருக்கிறதே...' என்று சொல்லி தலையை அசைத்தானாம். இப்படி சரித்திரம் உள்ளது. ஆபத்து காலத்தில் உதவக் கூடியவன் அந்த ஆபத்பாந்தவன்தான். ***

ஆன்மீக வினா-விடை
வீட்டில் கஷ்டம், தோஷங்கள் இருக்கிறது... பரிகாரம் ஏதாவது இருக்கிறதா?
ராமேஸ்வரம் சென்று, தில ஹோமம் (எள் ஹோமம்) செய்யலாம். இது, ராமேஸ்வரத்தில் மட்டுமே செய்ய வேண்டும். ***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.