இது உங்கள் இடம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2011
00:00

* மனைவிமார்களே...
வெளிநாட்டு சம்பாத்தியத்திற்கு ஆசைப் பட்டு, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலரின் நிஜமான நிலைமை, சொந்தக் குடும்பங்களுக்கே தெரிவதில்லை. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களும், தாங்கள் அங்கு படும் பாடுகளையும், துயரங்களையும், அவப்பெயர்களையும் மறைத்து, கட்டிய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், தங்கள் கஷ்டங்களை தெரியவிடாமல் பார்த்துக் கொண்டு சம்பாதிக்கின்றனர். எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு குடும்பத் தலைவர், வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். எம்.ஏ., பட்டதாரியான அவர் அனுப்பும் பணத்தில், அவர் மனைவி, பட்டத்து ராணி போல் இஷ்டப்பட்டதை எல்லாம் வாங்கிக் குவித்து, கஷ்டம் என்பது என்னவென்று தெரியாமல், பிள்ளைகளையும் ஆடம்பரமாக வளர்த்து வருகிறார். அவரும், வெளிநாட்டில் இருந்து வரும் போது, பளிச்சென்று உடை அணிந்து வந்து, எழுபது நாள் விடுமுறையை அனுபவித்துவிட்டு, மீண்டும் வெளிநாடு சென்று விடுகிறார். சமீபத்தில், எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி, வீட்டு வேலை செய்வதற்காக, இவர் ஏற்பாட்டின்படி வெளிநாடு சென்றார். ஒரு வாரம் கழித்து, அந்த பெண்ணைக் காண வந்த அந்த நபரைப் பார்த்த பெண், மிரண்டே போய் விட்டார். மாவு மூட்டைகள் தூக்கி, உடம்பெல்லாம் மாவுக் கோலத்தில் இருந்தார். அந்த பெண்மணியிடம் இவர், "அக்கா... என்னுடைய இந்த அலங்கோலம் எக்காரணம் கொண்டும் என் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தெரிய வேண்டாம். ப்ளீஸ்...' என்று கண் கலங்கியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் மனைவிமார்களே... நம் கணவன் அங்கு என்ன பாடுபடுகிறாரோ, என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறாரோ என்பதை உணர்ந்து, சிக்கனமாகவும், கண்ணியமாகவும், நெறி பிறழாத கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ளுங்கள்.
- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

* அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?
என் நண்பர், அவர் மகனுக்கு தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த ஐம்பதுக்கும், மேற்பட்ட ஜாதகங் களில், இரண்டு பொருத்தமாக இருந்தது. அந்த இரண்டு பெண்களும், குணமுடைய, பணமுடைய, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் களாகவே இருந்தனர். ஆனால், அந்த இருவரில் ஒருவர், மிகவும் அழகாக இருந்தாள்; மற்றொருவர், அவள் அளவுக்கு இல்லையென்றாலும், பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். நண்பரின் குடும்பத்தார், மிகவும் அழகான பெண்ணையே தேர்ந்தெடுக்கும் முடிவில் இருப்பதைக் கேள்விப்பட்ட அவர் மகன், "அந்தப் பெண் வேண்டாம்; அவளை விட அழகு குறைவான பெண்ணே போதும்...' எனச் சொல்ல, அனைவருக்கும் ஆச்சரியம். "நான் அவள் அளவுக்கு பேரழகன் இல்லை. அப்படியே நான் அழகாக இருந்தாலும், வெளி இடங்களில் ஆணை விட, பெண்ணின் அழகே பளிச்சிடும். எந்த ஒரு ஆணும், தன் மனைவியை மற்றவர்கள் ரசிப்பதை விரும்ப மாட்டான். இதனால், அவளை வீட்டைவிட்டு வெளியே அழைத்து வரவே ஒருவித அச்சம் ஏற்படும். "இதனால், இருவருக்கும் மனக்கசப்பு உருவாகி, பிரச்னை வரும். அவளை வெளியே அனுப்பக் கூடாது என்பதற்காக, காய்கறி, பால் போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கும் வேலையை, நானே இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கும். "தன் கணவன், தன் அளவுக்கு அழகாக இல்லை என்று அவள் ஒரு வேளை நினைத்தால், பிரச்னை உண்டாகும். எதற்கு வீண் ரிஸ்க். என் அழகுக்கு ஏற்ற பெண் போதும்...' என்று காரணம் சொல்லி விட்டான். அவன் சொல்வது ஒரு வகையில் சரி தானே!
— எஸ்.சரவணகுமார், பிள்ளையார்குளம்.

* காலம் மாறிப் போச்சு!
பி.இ., முடித்து, சரியான வேலை கிடைக்காமல், ஒன்றரை வருடமாக வீட்டிலிருக்கிறாள் என் உறவினர் பெண். பெங்களூரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் அவளது கல்லூரி தோழி, "இங்கே வந்து தங்கி வேலை தேடினால், எப்படியும் நல்ல வேலை கிடைத்து விடும்!' என்று உறுதி கூறியதன் பேரில், புறப்பட தயாரானாள்.
பயணத்துக்கு இரண்டு நாள் இருக்கும் தருவாயில், உறவினரின் மனைவியிடம், "ஆன்ட்டி... சேலை, சுடிதாரை விட, ஜீன்ஸ் பேன்ட்-டீ சர்ட் தான் இங்கே பாதுகாப்பு. துணிச்சலான பெண் போலிருக்குன்னு யாரும் வாலாட்ட பயப்படுவாங்க. அதனால், மூணு ஜீன்ஸ் செட்டோடு, உங்க மகளை அனுப்பிவையுங்க...' என்று வலியுறுத்தி இருக்கிறாள் தோழி. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தாய், "வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. பொம்பளப் புள்ள சிட்டியில போயி கெட்டு விடக்கூடாது...' என்று கணவரிடம் புலம்பித் தள்ளி, பெங்களூரு புரோகிராமையே கேன்சல் பண்ணி விட்டாராம். பாம்பு திங்குற ஊருக்குப் போனால், நடுத்துண்டு எங்கேன்னு கேட்பது தான் புத்திசாலித்தனம். இதைப் புரிந்து கொள்ளாமல், பிள்ளைகளின் வளர்ச்சிக்குத்தடையாக இருக்கும் பெற்றோரே... உடையிலே மட்டுமல்ல, எல்லா விஷயத்திலும் காலத்தை மீறிய உரத்த சிந்தனை வேண்டும்.
— -பி.ஜி.பி.இசக்கி, அகஸ்தியர் பட்டி.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anniyan - Chennai,இந்தியா
03-பிப்-201114:26:00 IST Report Abuse
Anniyan கருப்பான ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதில்லையா?? அழகான பெண்கள் திருமணம் செய்துக் கொள்வதில்லையா?? ஏங்க கருப்பா இருந்தா அசிங்கமா?? அப்படின்னு யாருங்க சொன்னது உங்களுக்கு?? வெள்ளையா இருக்கவங்க எல்லாரும் அழகுன்ற மாதிரியும், கருப்பா இருக்கவங்க எல்லாரும் அசிங்கம் என்கிறது போலிருக்கிறது இங்கு ஒருவரின் கருத்து..
Rate this:
Share this comment
Cancel
kanagarathinam - chennai,இந்தியா
02-பிப்-201101:46:55 IST Report Abuse
kanagarathinam வாரமலர் kurukkelutthu போட்டி எனது அறிவு திறனை பல முறை பட்டை தீட்டுகிறது. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜ.thanuja - chennai,இந்தியா
01-பிப்-201119:27:39 IST Report Abuse
ஜ.thanuja அழகான மனைவிக்கு ஆசைபடுபவரா என்ற தலைப்பில் அழகான மனைவியை திருமணம் செய்வது தவறான காரியம் இல்லை .அதனை சரியாக balance செய்ய தெரிந்திருக்க வேண்டும். காம்ப்ளெக்ஸ் இல்லாமல் இருக்கவேண்டும் .அழகான பெண்களுக்கு திருமணமே நடப்பதில்லையா? கருப்பான கணவர்கள் கல்யாணம் செய்வதில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Dharuman - Kolkata,இந்தியா
01-பிப்-201116:25:42 IST Report Abuse
Dharuman மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அதே வேளையில் அந்த மாற்றம் மென்மையாக இருக்க வேண்டும். சேலையிலிருந்து சுடிதார்க்கு மாறுவதென்பது எளிது.ஆனால் ஜீன்ஸ் என்பது சிறிது கடினம். எனவே தான் எதிர்ப்புக்கள் தோன்றுகின்றன. மாறுதலை விரும்புகிறவர்கள் இதை என்றும் நினைவில் கொள்வது நன்று.
Rate this:
Share this comment
Cancel
பர்தி - லக்ஷ்மாங்குடி,இந்தியா
01-பிப்-201112:56:44 IST Report Abuse
பர்தி தனக்கு அழகான மனைவி வந்தால் எப்படிப்பட்ட சுதந்திரமெல்லாம் பறிபோகும் என்று முன்கூட்டியே சிந்திக்கும் இந்த மனமகன் கண்டிப்பாக வாழ்வில் முன்னேற்றபதையில் செல்வான் . அவர்கள் வாழ்வில் எந்த விதமான சங்கடங்களும் வரத்து .
Rate this:
Share this comment
Cancel
Ambika - chennai,இந்தியா
01-பிப்-201108:56:17 IST Report Abuse
Ambika அப்போ ஆண்கள் அணியும் ஜீன்ஸ் ,t -ஷர்ட் , எல்லாம் நம்ம கலாச்சாரமா ? திருப்பதி அவர்களே ?
Rate this:
Share this comment
Cancel
கவியரசன் - மரக்காணம்,இந்தியா
01-பிப்-201104:21:57 IST Report Abuse
கவியரசன் அன்புடன் அந்தரங்கம் பகுதியை பார்த்தாலே தெரியும் பெண்கள் எப்படி அழிந்து போகிறார்கள் என்று, அந்த பகுதியோடு ஒப்பிட்டு பார்க்கும்போது அந்த தாய் செய்தது முற்றிலும் சரியே
Rate this:
Share this comment
Cancel
Dharuman - Kolkata,இந்தியா
31-ஜன-201114:39:19 IST Report Abuse
Dharuman In the changing cultural scenario,one has to accept the changes. It is alright. However the change should be from mild to drastic. Any drastic change will result with negative perception. In this case, the girl should have gone to the destination first and would have adopted to the new environment slowly.For example, she should have gone with Churidar/ saree first and adopted to jeans later. Any change which takes place slowly, is accepted by the society. So best luck next time.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்நேசன் - மஸ்கட்,ஓமன்
31-ஜன-201112:30:58 IST Report Abuse
தமிழ்நேசன் பெண்கள் தங்களின் உடை மூலம் கையெடுத்து கும்பிடும்படி இருக்க வேண்டும். கை தட்டி கூப்பிடும்படி இருக்க கூடாது. இதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். ஏனென்றால், கண்ணாடி கல்லில் பட்டாலும், கல் கண்ணாடியில் பட்டாலும்; சேதாரம் கண்ணாடிக்கு தானே, தவிர கல்லுக்கு இல்லை என்பதை சிறு குழந்தைகளும் அறிவர்.
Rate this:
Share this comment
Cancel
latha - usa,இந்தியா
30-ஜன-201118:32:30 IST Report Abuse
latha ஊருக்கு தகுந்த மாதிரி உடை செய்வது நல்லது. தெளிவான மனதுடன் கவனமாய் இறுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.