அந்துமணி பா.கே.ப.
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2011
00:00

வாசகர் ஒருவர் எழுதிய ஜோக்... இவர், ரிட்டயர்டு பார்ட்டி என்றாலும் குசும்பு, குறும்பு தாண்டவமாடும் இளைஞர் தான்! இதோ அவரது ஜோக்... ஒரு அலுவலகத்தில் அதன் நிர்வாகி, தன் சிப்பந்திகள் லீவு கேட்டால் கொடுக்காமல், சமாதானமாக பேசி லீவு தராமல் வேலை பார்க்க வைத்து விடுவார். தலைவலி என்று லீவு கேட்டால், "எனக்கும் தான் லேசாக தலைவலி, தைலம் தடவிண்டு ஆபிஸ் வரலையா? போய் வேலையைப் பார்...' என்பார். தாயாருக்கு உடம்பு சரியில்லை, ஆஸ்பத்திரியில் சேர்க்க லீவு கேட்டால், "என் தாயாருக்கும் முடியாமல் இருந்த போது, சீக்கிரமாக ஆஸ்பத்திரி சென்று, அட்மிட் செய்துவிட்டு, ஆபிஸ் வேலைக்கு வந்தும், லீவு போடவில்லை; அதுபோல் செய். போ...' என்பார். மனைவிக்கு பிரசவ நேரம், கூட இருக்கணும் என்று லீவு கேட்டால், "என் மனைவிக்கும் பிரசவ சமயம், நான் லீவு போடாமல் அவளுக்கு உதவியாக இருந்து, ஆபிசுக்கும் வந்தேன். அதுபோல பர்மிஷன் போட்டு சற்றுத் தாமதமாக வந்தால் போதும்; லீவு கிடையாது, போ...' என்பார். இப்படியே தன்னைப் பற்றி பேசி லீவு தராமல் அனுப்பி விடுவார். ஆனால், ஒரு சிப்பந்தி கேட்ட கணமே லீவு தந்தார், சிப்பந்தி லீவு கேட்ட காரணம்..."என் மனைவியை பக்கத்து வீட்டுக்காரன் தள்ளிக்கிட்டு போயிட்டான்; தேடி வர லீவு வேண்டும்...' என்றான். வழக்கம் போலவே, "என் மனைவியும்...' என்று சொல்ல ஆரம்பித்து, பின் சுதாரித்து, "லீவு தந்தேன்; போய்த் தொலை...' என்றார்.
— கொடாக் கண்டனை சமாளிக்க, விடாக் கண்டன் போட்ட ஐடியா, "பலே' தானே!
***

இதுவும் ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை தான்...
ஒரு குருவிடம், "வழக்காடுதல்' கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன்.
இவனை ஒரு சிறந்த வழக்கறிஞராக்குவதாக உறுதியளித்து, அதற்கு
தட்சணையாக ஒரு பெரும் தொகை கேட்டார் குரு.
அந்த இளைஞன் பாதி தொகையை அப்போதே தந்து விடுவதாகவும், மீதி தொகையை தான் எடுத்துக் கொள்ளும், "முதல்' வழக்கில், "ஜெயித்தால்' மட்டுமே தர முடியும் என்றான்.
தன் மாணவன் நிச்சயம் ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில், குருவும் அதற்கு ஒப்புக் கொண்டார். அதன்படியே ஒரு ஒப்பந்தமும் எழுதி, இருவரும் கையெழுத்திட்டனர்.
இளைஞன் அங்கேயே தங்கி கல்வி கற்றான்; கல்வி முடிந்ததும் குருவிடம் விடைபெற்று சென்று விட்டான். இரண்டு, மூன்று மாதமாகியும் அவனிடம் இருந்து எந்த பணமும் வராததால், குருவே அவனைத் தேடிச் சென்றார். அவனோ, தான் இதுவரை எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அதனால் ஒப்பந்தப்படி இப்போது பணம் தர முடியாது என்றும் சொல்லி விட்டான்.
எப்போது கேட்டாலும், அவன் இதையே சொல்வதால் பொறுமையிழந்தார் குரு. "இந்த இளைஞன் எனக்கு தருவதாக சொன்ன தொகையை தராமல் ஏமாற்றுகிறான்!' என்று அவன் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அந்த இளைஞன் சந்தித்த முதல் வழக்கு இதுதான்.
"குருவுக்கு இவன் பணம் தர வேண்டும்...' என்று நீதிபதி தீர்ப்பளித்தால், முதல் வழக்கில் சிஷ்யன் தோற்றவனாகிறான். அதனால், ஒப்பந்தப்படி பணம் தர வேண்டியதில்லை. "பணம் தர வேண்டாம்...' என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர வேண்டியதில்லை. எப்படிப் பார்த்தாலும் இவன் பணம் தர வேண்டியதில்லை; இது இளைஞன் தரப்பு வாதம்.
"பணம் தர வேண்டும்' என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர வேண்டும். "பணம் தர வேண்டாம்' என்று தீர்ப்பு வந்தால், இவன் வழக்கில் ஜெயித்தவனாகிறான். எனவே, ஒப்பந்தப்படி பணம் தர வேண்டும்.
எப்படிப் பார்த்தாலும் சிஷ்யன் பணம் தர வேண்டும்.
இது குரு தரப்பு வாதம்.
எத்தனை கோடி குழப்பம் வைத்தாய் இறைவா!
***

சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றில், "மனித உறவுகள் மேம்பட...' என்ற தலைப்பில் கொடுத்திருந்த அறிவுரைகள் அற்புதம். இதோ அவை...
குடும்பத்திலும் சரி... அலுவலகத்திலும் சரி... மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும், இதோ சில எளிய வழிகள்...
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.
* எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள்.
*விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
* அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய், ஆசைப் படாதீர்கள்.
* எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
* அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
* மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும், நடத்தையிலும் திமிர்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கு காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத
மனிதனே இல்லை; அதுவே, உங்களுக்கு வெற்றியாக அமையும்.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - பெங்களூர்,இந்தியா
04-பிப்-201110:13:24 IST Report Abuse
பிரபு These jokes already published in Dinamalar-Varamalar by Andumani. Whoever reading the Dinamalar-Varamalar last 10 to 15 years they easily recall these jokes already published in " பா-கோ-ப ".
Rate this:
Share this comment
Cancel
-அ.முஹம்மது நிஜாமுத்தீன். - பாங்காக்,தாய்லாந்து
30-ஜன-201115:48:52 IST Report Abuse
-அ.முஹம்மது நிஜாமுத்தீன். இரு நகைச்சுவைகள் சிரிக்க வைத்தன. வெற்றி வழிகள் நிச்சயம் பின்பற்றவேண்டியவை; உததரவாத பயன் தரவல்லவை. நன்றி! -அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.